Saturday, November 7, 2020

மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 4

 மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 4

(சுஜாதா& வெங்கடேசன்)   6381369319

ரூம்ல போய் ரெஸ்ட் எடுத்தபின் மாலை ஊரை சுற்றி பார்க்க மற்றும்  ஸ்வாமி நாராயணன் கோயில் கிளம்பறோம்..கூகுள் காட்டற திக்கு திசை புரியாமல் பஸ் எங்க வரும்னு தெரியாம அங்கயும் இங்கயும் பார்த்துட்டு கடைசில ஆட்டோக்காரன்ட்ட பேசறேன்...150/   கேக்கறான். சரின்னு ஏறி உட்கார்ந்து ஊரை பார்த்துக்கொண்டே சென்று அரை மணி நேரத்தில் அடைகிறோம்..

நாக்பூர் நகரத்தின் பெயர்க்காரணம் மிக சுவாரசியமானது. ஒரு பாம்பினை போன்றே வளைந்து வளைந்து செல்லும்  நாக் ஆற்றினை ஒட்டி இது அமைந்திருப்பதால் அந்த ‘நாக்’ எனும் சொல்லுடன் நகரம் என்ற பொருள் தரும் சம்ஸ்கிருத சொல்லான ‘பூர்’ எனும் சொல்லும் சேர்ந்து இந்த நாக்பூர்

எனும் பெயர் உருவானது.

இன்றும் இந்த நகரத்தின் தபால் தலையில் ஒரு பாம்பின் ஓவியம் வரையப்பட்டிருப்பதைக் காணலாம். தக்காண பீடபூமியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் 10000 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் காணப்படுகிறது.

பசுமையான சூழலுக்கு பிரசித்தி பெற்றிருக்கும் நாக்பூர் சண்டிகர்நகரத்துக்கு  அடுத்தபடியான பசுமையான நகரம் என்ற பெருமையை  பெறுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகர் என்று அழைக்கப் படும் அளவுக்கு இது முக்கியமான பெரு நகரமாகும்.

நாக்பூர் – வரலாற்றுப்பின்னணி, இயற்கை அழகு, கேளிக்கை அம்சம் கலந்த ஒரு கலவை

நவேகான் தேசிய பூங்கா, சீதாபல்டீ கோட்டை, பெஞ்ச் தேசியப்பூங்கா போன்றவை நாக்பூர் அருகில் உள்ள முக்கியமான இடங்களாகும். இங்குள்ள தீக்‌ஷா பூமி எனும் இடத்தில்  ஆயிரக்கணக்கான தலித் மக்கள் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் புத்த மதத்தை தழுவிய வரலாற்று சம்பவம் நிகழ்ந்தது  குறிப்பிடத் தக்கது.

இந்தியாவின் மையத்தில் உள்ள ஊர் என்பதால் 

நாக்பூர் நகரத்தில் உள்ள தேசிய மையத்தில் ஜீரோ மைல்

என்று குறிப்பிடப்படும் கற்தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு  இடையேயான தூரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த தூண் ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்டதாகும்.

நாக்பூர் நகரமானது பல ஏரிகளை கொண்டுள்ளது. மனித முயற்சியால் உருவாக்கப் பட்டவையும் இயற்கையாகவே உருவானவையும் இதில் அடங்கும். இவற்றுள் *அம்பாஜாரி ஏரியானது சிற்றுலா செல்வதற்கும் குடும்பத்துடன் நேரத்தை கழிப்பதற்கும் பெயர் பெற்ற ஒன்றாகும்.

இங்குள்ள பாதிரியார் மலையில் (செமினரி ஹில்ஸ்) பாலாஜி மந்திர் குறிப்பிட த்தக்க பெரிய கோயிலாகும். இந்த மலையிலிருந்து நாக்பூர் நகரத்தின் முழு அழகைக் கண்டு ரசிக்கலாம்.

நாக்பூர் சென்றால் நிச்சயம் அங்கு கிடைக்கும் பெயர் பெற்ற ஆரஞ்சுகளை சுவைக்காமல் வர முடியாது அதே போல இங்குள்ள கடைத் தெருக்கள் மற்றும் அங்காடிகள் போன்றவற்றில் எல்லாவகையான கலைப்பொருட்கள், பாரம்பரிய அடையாள பொருட்கள், பரிசுப்பொருட்கள் போன்றவை நிரம்பி கிடக்கின்றன.

நாக்பூர் நகரம் வர்ஹதி

உணவு முறைக்கு பெயர் பெற்றது. இந்த உணவில் சற்றே காரம் அதிகம். வெளி நாட்டவர்க்கு ஒவ்வாமல் போக வாய்ப்புண்டு.

தக்காண பீடபூமியில் காணப்படுவதாலும் அருகில் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஏதும் இல்லாத காரணத்தாலும் நாக்பூர் நகரம் கோடை, மற்றும் குளிர் காலத்தில் அதிக வெப்ப நிலையை கொண்டிருக்கிறது

கடைசியாக கலை நயத்துடன் கட்டப்பட்ட

ஸ்வாமி நாராயணன் கோயிலை அடைகிறோம்...

படங்கள்...நாக்பூர் காட்சிகள்








No comments:

Post a Comment