மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 6
ராம் டெக்...
இராமாயணத்துடன் தொடர்புடைய ஊர்..
இங்கு இராமர் முனிவர்களின் தவத்தைக்கலைத்த அரக்கர்களை வதம் செய்ய தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. அருகில் அகத்தியர் ஆஸ்ரமம் இருப்பது இதை மெய்ப்பிக்கிறது.
தற்போதைய கோயிலை ராகுஜி போன்ஸ்லே 600 ஆண்டுகளுக்கு முன் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
ராம் டெக் மலைமீதமரந்து காளிதாசர் மேகத்தை தூது விட்ட மேகதூதம் எழுதி உள்ளார்.
நாக்பூரிலிருந்து 30 கிமீ..
பழமையான கோட்டை ..
கொஞ்சம் படிகள் ஏறியதும் பெரிய வராகத்தின் சிலை. அதன் அடிப்பாகத்தின் வழியே நுழைந்து வந்தால் முக்தி கிட்டும் என பக்கத்து பண்டா சொல்ல நுழைந்து வந்து முக்திக்கு குறுக்கு வழி சொன்னமைக்கு அவர் தட்டில் பத்து ரூபாய் போட்டேன்..
எதிரே ஆளில்லாத ஒரு சன்னதியில் கன்னத்தில் போட்டுக்கொண்டு பார்த்தால் ஈ காக்கா இல்லை. இதற்கா இவ்வளவு தூரம் வந்தோம்? என இறங்க ஆயத்தமாக அந்த சன்னதிக்கு பின்புறம் வழியாக சிலர் பேச்சுக்குரல் கேட்க பிரதட்சணமாக வந்தோம்...அதற்குமேல் பல படிகள் ஏறி ஒரு கோட்டை இருப்பது தெரிந்து ஏற ஆரம்பித்தோம் ...
கோட்டைக்கு உள்ளே இராமர் லஷ்மணர், அனுமனுக்கு தனித்தனி கோயில்கள்.
தரிசித்து இறங்கினோம்…
கூகுள் அருகே ராம்தாம் என்றொரு இடம் காட்ட
மீண்டும் அடிவாரத்தில் அங்கு செல்ல பஸ் எது என விஜாரித்தோம்..எதோ பன்ஸர் என காதில் விழ பின் வந்த மன்ஸர் பஸ் ஏறி இறங்கினோம்..(எனக்கு இந்தி படிக்க தெரிந்தாலும் எழுத்துக்கள்,எண்கள் மராட்டியில் தான் என்பதால் ஒரு குன்ஸாகத்தான் ஏறணும்)
காலை சாப்பிடாமல் மலை ஏறி இறங்கியதில் பசி..மன்ஸரில் ரோட்டோர ஓட்டலில் சமூசா,வடை ,கச்சோடி காலி செய்து,வெயில் கொளுத்த ராம்தாம் ரொம்பதூரம் என நினைத்து 50/-ஆட்டோ பேசி இரண்டே நிமிடத்தில் கொண்டு விட்டான்..
உள்ளே நுழைய 50/-
கல்சரல் தீம் பார்க்...
குட்டி குட்டியாக கோயில்கள்,இராமாயண காட்சி பொம்மைகள்,உள்ளே தங்குவதற்கு குடில்கள் என இரண்டு மணி நேரம் பொழுது போயிற்று...
வெளியே வந்து ஒரு ஆயா டீக்கடையில் டீ ஆர்டர் செய்ய ஸ்டவ் பற்றவைத்து,டீத்தூள் போட்டு கொதிக்கவைத்து பத்து நிமிடம் கழித்து ஜீனியை கொட்டி பாலே இல்லாத டீ (5ரூ) (பால் தீரந்த விஷயம் முன்னாடியே சொல்ல மாட்டீங்களா?) இதைக்குடிக்க நாலைந்து நாக்பூர் பஸ்ஸை தவற விட்டு
ஊர் வந்தோம்…அடைத்து வார்தா
படங்கள்1,2)வராஹரின் அடியில்...3,4 5) ராம லஷ்மணர் கோயில் முன்6)ராம்தாம் தீம்பார்க்
3)
No comments:
Post a Comment