சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை!
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔥 ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
🔥 புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
🔥 குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
🔥 மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
🔥 கீரைகளை மூடிபோட்டு சமைக்ககூடாது.
🔥 ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின் பெருங்காயத்தூள் போட்டால் வாசனையாக இருக்கும்.
🔥 கீரை, வெண்டைக்காய் வேக வைக்கும்போது பாத்திரத்தை சிறிது திறந்து வைத்தால் காயின் பசுமையான நிறம் மாறாமல் இருக்கும்.
🔥 பொரியல் செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக சிறிது புழுங்கல் அரிசியை வறுத்து, பொடி செய்து பொரியலில் தூவினால், தேங்காய் சேர்த்த சுவை கிடைக்கும்.
🔥 தக்காளியையும் வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
🔥 குடமிளகாயை ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கி, அதன் உட்பகுதியில் ஏதாவது காரமில்லாத சட்னியைத் தடவி, பஜ்ஜி போடலாம். ருசியாக இருக்கும்.
🔥 சாம்பார் வைக்க துவரம் பருப்பு இல்லையென்றால் ஒரு கப் கடலை மாவைக் கரைத்து விட்டு அரைத்தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
🔥 குழம்போ, பொரியலோ அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லியை போடக்கூடாது.
🔥 தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்ககூடாது.
🔥 ரசம் அதிகமாக கொதிக்கக் கூடாது.
🔥 மோர்க் குழம்பு வைக்கும் போது அரிநெல்லிக்காய்களை அரைத்துப் போட்டால் சுவை மிகுதியாக இருக்கும்.
🔥 மோர்க் குழம்புக்கு மசாலா அரைக்கும்போது சிறிதளவு ஓமத்தை சேர்த்து அரைத்தால், குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
🔥 சாம்பாரை இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்க வாசனை கமகமவென்று இருக்கும்.
🔥 பூசணிக்காய் மீந்துவிட்டால் அதை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் அடுத்த நாள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.
🔥 ரசம் தயாரிக்கும் போது சுண்டைக்காய் அளவு இஞ்சி சேருங்கள். சூப்பராக இருக்கும் ரசம்.
🔥 வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை தேங்காய்பால் சேர்த்த பிறகு சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
🔥 கூட்டு செய்யும்போது தேங்காய் இல்லையென்றால் காய்கறி வேகும் பொழுது சிறிது சீரகம் சேர்த்து வெந்தவுடன் அரை டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் கடலை மாவை நன்றாக கரைத்து, கூட்டில் சேர்த்தால் தேங்காய் சேர்த்த ருசி கிடைக்கும்.
🔥 புளிக்குழம்பு செய்யும் போது மசாலாவை நல்லெண்ணெயில் வதக்கி, நறுக்கிய காய்களை போட்டபின் புளிக்கரைசலை ஊற்றி உப்பும், தண்ணீரும் சேர்த்தால் குழம்பு ருசியாக இருக்கும்.
🔥 கட்லட் செய்ய உருளைக்கிழங்கை வேக வைக்கும் போது உப்பு சேர்த்து வேக வைத்தால் கட்லட் ருசியாக இருக்கும்.
🔥 குழம்பு தண்ணியாக இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன் சோளமாவை, கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விட்டால் குழம்பு கெட்டியாகி விடும். சுவையாகவும் இருக்கும்.
🔥 இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்வதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
🔥 ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது. சுவையாக இருக்கும்.
🔥 சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றைக் கொதித்து இறக்கும் சமயம் துளி வெந்தயப் பொடி தூவி இறக்கினால் நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.
🔥 கூட்டு, கறி செய்யும்போது வேக வைத்த பருப்பு இல்லையென்றால் ஒன்றிரண்டு டீஸ்பூன் பருப்புப் பொடி சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.
🔥 துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.
🔥 தேங்காய் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் குழந்தை நல்ல நிறமாக பிறக்கும்.
🔥 கத்தரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும் போது கொஞ்சம் கடலை மாவை தூவிப் பாருங்கள். கூட்டு, பொரியல் சுவையாக இருக்கும்.
🔥 கூட்டு செய்யும்போது தேங்காய்க்கு பதில் பொட்டுக்கடலை, சீரகம், பச்சை மிளகாய் அரைத்து சேர்த்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
🔥 இனிப்பு கம்பு அடை செய்வதற்கு வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொண்டு, தண்ணீருடன் கம்பு மாவு, பொடித்த ஏலக்காய், சிறிதளவு உப்பு, தேங்காய் துண்டுகள் ஆகியவற்றை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அடை செய்யலாம்.
🔥 மாவு, ஊறுகாய் மற்றும் பருப்பு வகைகளை, நன்கு மூடிய ஜாடியில் வைத்திருந்தால் அவற்றில் பூச்சிகளின் தொல்லை இருக்காது.
🔥 தயிர் சாதத்தில் கடுகுக்கு பதில் ஓமம் சேர்த்து தாளித்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். இது அஜீரணத்திற்கு மிகவும் நல்லது.
🙏 மேலும் பதிவுகளை பெற
https://t.me/SentamilNadu
🔥 சாம்பார் நிறமாகவும் மணமாகவும் இருக்க சாம்பாரில் இரண்டு, மூன்று தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து போட்டால் சாம்பார் நிறமாகவும் மணமாகவும் இருக்கும்.
🔥 விருந்துக்கு சாப்பிட போகும் முன் ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு சிறிய மேஜைகரண்டி பட்டைப்பொடி சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட்டால், விருந்து சாப்பிட்டவுடன் ஜீரணம் ஆகும்.
No comments:
Post a Comment