மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள்... பகுதி 2
இவள் பார்வையில்...
எப்பவும் எல்லாரும் போர காசி,பத்ரி மாதிரி அழைச்சிட்டு போவார்..இப்ப நாக்பூர்தான் டிக்கட் கெடைச்சது போலாம் வாங்கறார்..அங்க என்ன கோயில்,குளமா, நதியா,ஸ்நானமான்னா..போனாதான் தெரியுங்கறார்..வரலேன்னா கோச்சுப்பர்..
வாயைப்பொத்திண்டுட்ரெய்ன்ல ஏறி உக்காரரேன்..அழைச்சிண்டுதான் போறமே ஒரு ஏசி கோச் ரிசர்வ் பண்ணுவோம்னு உண்டா? என்னை கஷ்டப்படுத்திண்டு எங்கெயோ தூக்கி கொடுத்து ஏமாந்து நிப்பர்... எல்லாம் என் தலை விதி....
எதிரே வடக்கத்தி பசங்க..கொய்யா முய்யான்னு பேசிண்டு. கையை காலை நீட்ட முடியாம ட்ரங்க் பொட்டிங்கள காலடியில அடுக்கி வைக்கறாங்க..எடுத்துண்டு வந்த இட்லி மொளகாப்புடிய சாப்ட்டுட்டு படுத்து தூங்கறோம்...சொப்பனத்துல நாக்பூர் ஆரஞ்ச் ரோடெல்லாம் கொட்டிக்கிடக்க சங்கர் பட ஹீரோயின் மாதிரி இவரோட டூயட் பாடறேன்...
விடிஞ்சி இருக்கற கீக்கடத்துல பல்லு தேச்சுட்டு தண்ணி காபி வாங்கி சாப்ட்டுட்டு ஜன்னலோரம் பாத்துண்டு வரேன்...
ஆந்திரா ஜனங்க கைல சொம்போட தண்டவாளத்துக்கிட்ட நிக்கறத பாத்துட்டு பெருமாளேன்னு ஸ்வச் பாரத் அவ்வளவு தானான்னு ஜன்னல மூடறேன்...
சூரியன் கண்ணை விழிச்சி பாக்க ஆரம்பிக்க கபகபன்னு பசி...எடுத்துண்டு வந்த புளியோதரையை காலி பண்றோம்...எதோ ஷ்டேஷன்ல அன்ரிசர்வ்ட் காரங்க ஆபீஸ் போக ஏறிண்டு அழிச்சாட்டியம் பண்றதுகள்...
நாக்பூர்ல தங்கறதுக்கு ஓட்டல் பாருங்கன்னு சொன்ன உடன் கூகுள்ல தேடி பட்ஜெட். கணக்கு போட்டு பத்து வைக்கறார்...
3.00 மணிக்கு நாக்பூர் வந்து எறங்கறோம்..வெளிய வந்து ஆட்டோக்காரன்ட கிராண்ட் ஓட்டல்ங்கறார்..என்னடா ஃபைவ்ஸ்டார் பேரா இருக்கே இவர் பட்ஜட்டுக்கு எப்படி பிடிச்சார்னு யோசிககறச்சயே வழக்கப்படி சுமார் ஓட்டல் முன்னாடி ஆட்டோ நிக்கறது...
கௌன்டர்ல கமரா மிலேகா?ங்ரகறார்...அவன் மிலேகி
ங்கறான்...
கித்னா
ங்கறார்..
நௌ ஸௌங்கறான்
...இவர் என்ன பாக்கறார்...என்ன பார்வை ...ரூம பாப்போம்ங்கறேன்...
கொஞ்சம் நீட்டா எதோ சுமாரா இருக்கு...
இவர் சொன்னபடி நாலு செட் ட்ரஸ் எடுத்துண்டு வந்தாலும் ப்ளாட்பாரத்துல தூக்கிண்டு வந்தது தோள் பட்டை வெட்டி இழுக்கறது... தூக்கி ஒரு மூலைல வச்சுட்டு மூஞ்சி அலம்பிண்டு வரேன்..ட்ரெய்ன் பயணம் தலைய வலிக்கறது...
வெளில போய் காபி சாப்ட்டுட்டு பக்கத்துல சின்ன கோயில் இருந்தா சேவிச்சுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்ங்கறார்...வெளில வந்து சந்து திரும்பின உடனே மீன் கடை நாத்தம் குடலை பிடுங்கறது. புடைவைல மூக்க பொத்திண்டு ரோடை தாண்டி போறோம்.,..
கொஞ்சம் பாஷ்ஆ ஒரு ஓட்டலுக்கு அதிசயமா அழைச்சிண்டு போறார்..
மண்கப்ல காபி கொண்டு வச்சுட்டு 60ரூ பில்ல டிப்ஸுக்காக மூடி கொண்டு வந்து தரான்...நாளைக்கு காத்தால நானே ப்ளாஸ்க்ல டீ வாங்கிண்டு வரேங்கறார்..
ஆட்டோ வர வழில ஒரு ராமர் கோயில் பார்த்தேன் , அங்க போகலாம்னு சொல்றேன்...எப்படியோ தட்டுத்தடுமாறி அழைச்சிண்டு போறார்...வாசல்ல உதிரிபூ வாங்கிண்டு ராமரையும் அனுமாரையும் சேவிக்கிறோம்...
மறுபடியும் மீன் கடை வராதபடிக்கு கொலம்பஸ் மாதிரி ஊரச்சுத்தி அழைச்சுன்டு போறேன்னு ஓட்டல் பேர மறந்து வந்து சேரறோம்...
ராத்திரி எடுத்துண்டு வந்த இட்லி புளியோதரைதான்...
தயிர்சாதத்துல சூடா பால குத்திண்டு நாளைக்கு காத்தாலைக்குன்னு எடுத்து வைக்கிறேன்...
பக்கத்துல எங்கங்க பெருமாள் கோயில் இருக்குன்னு கூகுள் பார்த்து வைங்கன்னு சொல்லி கண்ணை மூடறேன்....
சொப்பனத்துல பெருமாள் மச்ச
(மீன்) அவதாரத்துல பரிமள கந்தத்தோட காட்சி அளிக்கறார்..
்தொடரும்…
No comments:
Post a Comment