Saturday, November 7, 2020

மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 11

 மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 11

மறுநாள் சனிக்கிழமை என்பதால் இவள் பெருமாள் சேவிக்க வேண்டுமென்கிறாள்...கூகுளைக் கேட்டதில் பக்கத்தில் ஒரு ஆயுத(வெடி மருந்து) தொழிற்சாலை குவார்ட்டஸில் ஒரு பாலாஜி மந்திர் இருப்பதாக காட்டுகிறது..ஒரு ஆட்டோக்காரரை போகவர ஏற்பாடு செய்தோம்..சிறிய வட இந்திய கோயில்...ஸ்ரீனிவாசரை வித்யாசமான சூழலில் தரிசித்தது மறக்க முடியாது...

மீண்டும் பத்ராவதியில் ஒரு அனுமன் மந்திர்...எதிரே விட்டலர்...இருவரையும் தரிசித்து ஒரு ஆட்டோ பிடித்து கூகுள் காட்டிய விஜசன் குகைக்கோயிலுக்கு சென்றோம்...

இக்குகை கிமு முதல் நூற்றாண்டு முதல் பௌத்த துறவிகளின் மடாலயமாக பயன் பட்டிருக்கலாம்...சென்ற நூற்றாண்டில் மாடுகளை உள்ளூர் மக்கள் கட்டி வைக்க பயன்படுத்தப்பட்டு பின் தொல் துறையின் கீழ் வந்துள்ளது....

இருட்டில் தட்டுத்தடுமாறி சென்று புத்தர் சிலையை தரிசித்தோம்…

மீண்டும் ஒரு விட்டலரை கூகுள் காட்ட அந்தப்பகுதி மக்களுக்கே தெரியாமல் அலைந்து திரிந்து கண்டு பிடித்து கன்னத்தில் போட்டுக்கொண்டோம்...

கூகுள் துர்கா  மந்திர் என காட்டியது சுமார் மூணு கிமீ தூரத்து மலை. ஏற உடம்பில் தெம்பில்லாததால் தூர இருந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு பசிஎடுத்ததால் ஜெய்ன் மந்திரில் மதியம் உணவிற்கு வரச்சொன்னதால் சென்று 200/_டொனேஷன் தந்து டோக்கன் பெற்று சாப்பிட அமர்ந்தோம்..

அஹிம்சை எனும் அரிய தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் ஜெயின் (சமணம்) சமூகத்தின் உணவுமுறையிலும் அதே உறுதியுண்டு. இந்தியாவின் பெயர் சொல்லும் வகையில் சைவ உணவு வகைகளை வளர்த்தெடுத்த பெருமையும் இச்சமூகத்துக்கு உண்டு. கோதுமை, அரிசி, அவரை, பருப்பு வகைகள் ஆகியவை ஜெயின் உணவுகளில் அதிகம் இடம்பெறுகின்றன. இயற்கையாகவே தம் வாழ்வை முடித்துக்கொள்ளும் தாவரங்களின் பாகங்கள், இயல்பாகவே பழுத்து மரத்திலிருந்து விழும் பழங்கள் போன்றவையே ஜெயின் உணவுத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பூமிக்கு அடியில் விளையும் வேர்க்காய்கறிகள் தவிர்க்கப்படுகின்றன. உயிரினங்கள் உள்பட அசையக்கூடிய எதற்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே இதன் பொருள்.

மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்ட சமணக் கொள்கைகளை கி.மு. ஏழாம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் பின்பற்றி வருகின்றனர். எளிய மக்களுக்கு உணவு படைத்தல், விரதம் இருத்தல், உணவை வீணாக்காமல் பயன்படுத்துதல், வடிகட்டிய நீரையே பருகுதல், சூரிய உதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும் இடையிலான நேரங்களில் மட்டுமே உண்ணுதல்... இதுபோன்ற செயல்கள் ஜெயின் உணவுத் தத்துவத்தில் இடம்பெறுகின்றன. 

இரவு உணவு இல்லை. மாலை ஆறு மணிக்குள் விளக்கு வைக்கும் முன் வரவேண்டும் என்பதால் எங்களுக்கு சரிப்படவில்லை ...

தினமும் காலை உணவாக காக்ரா எனப்படும் சுட்ட சப்பாத்தி உண்டு....

ஏற்கனவே தங்கிய விடுதிக்கு மாலை நாலு மணிவரை டயம் என்பதால் படுத்து ரெஸ்ட் எடுத்து சரியாக 4மணிக்கு காலி செய்து ஜெய்ன் கோயிலுக்குள் குடி புகுந்தோம்...

மாலை கூகுள் காட்டிய சண்டி கோயில் சமணர் கோயிலுக்கு பின்னாலேயே இருந்ததால் தரிசித்தோம்...

ஆனால் கூகுள் காட்டிய ancient dilapilated கோயிலைத்தேடி அலையோ அலை என அலைந்து, உள்ளூர் காரர்களுக்கே தெரியாது எப்படியோ கண்டுபிடித்து ஒரு வாய்க்காலை ஒற்றைக்கல் பாலத்தில் அபாயமாக கடந்து ஒரு அரசமரத்தடியில் பாதி புதைந்தும் வெளியேயும் இருந்த சிலைகளை தரிசித்து எங்கள் வீரச்செயலை வீடியோ எடுத்துக்கொண்டோம்...

இருட்டிவிட்டதால் இரவு ஜைன உணவு இல்லை. பக்கத்தில் வேறு ஓட்டலும் (ஜைனர்கள் அதிகம் என்பதால் )இல்லை. Havmore என்ற ஐஸ் க்ரீம் கடையில் ஐஸ் க்ரீம் மற்றும் சாபுதானா வடை...(அடுத்த இரண்டு நாட்களும் வேறு வழியின்றி இதே மெனுதான்... )

படங்கள்

1) குட்டிக்கோயில் முன்

2) ஜைனர் கோயில்

3)விஜசன் குகை

4)உள்ளே புத்தர்






No comments:

Post a Comment