Wednesday, November 18, 2020

புளி எப்படி பயன்படுத்தலாம்

 புளி எப்படி பயன்படுத்தலாம்?

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

📌 மழை மற்றும் குளிர் காலங்களில் புளி பிசுபிசுப்பாகவோ அல்லது தையல் இலைகளில் புளியை வைத்தால் புளி பிசுபிசுப்பு பிரச்சனை வராது.

📌 மளிகைக் கடையில் விற்கப்படும் மந்தார இலை என்னும் தையல் இலையை புளி வைத்திருக்கும் பானையில் போட்டு வைத்தால் புளி நெடுநாட்களுக்குக் கெட்டு போகாமல் இருக்கும்.

📌 புளியைப் போட்டு வைக்கும் பாத்திரத்தின் அடியில் கொஞ்சம் உப்பைப் போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.

📌 அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

📌 புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதைத் தவிர்க்கவும். இவை பிளாஸ்டிக்குடன் சேர்ந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டு, ஆரோக்கியத்துக்கும் கெடுதல் ஏற்படுத்தும். கண்ணாடி அல்லது பீங்கான் டப்பாக்களில் வைப்பது நல்லது.

No comments:

Post a Comment