Saturday, November 7, 2020

மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 9

 மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 9

*🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹9🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள்...

            பகுதி .9


சந்த்ரபூர் ட்ரெய்ன்  ஏற இன்னும் நாலு நாள் இருப்பதால் அடுத்து போக  ஏற்கனவே கூகுள் பார்த்து பத்ராவதி என்ற ஊரை தேர்ந்தெடுத்து இருந்தேன்..எனவே சந்தரபூர் பஸ் ஏறி கூட்டத்தில் கடைசி சீட்டில் இடம் பிடித்து பத்ராவதி டிக்கட் வாங்கினேன்..கரடுமுரடான சாலையில் கடைசி சீட்டில்  தூக்கி போடப்பட்டு இரண்டு மணி நேரத்தில் இறங்கினோம்... கூகுள் காட்டிய பாலாஜி ஓட்டல்...ரோடுக்கு மறுபுறம் வார்தா நினைவு பயமுறுத்த சந்தேகத்துடன் அணுக அதற்கு நேர் எதிராக அருமையான ஸ்டார் ஓட்டல் ரேஞ்சில் 650 /- க்கு ரூம் இரண்டாவது மாடியில் காற்றோட்டமாக....


சிறிது நேர ஓய்விற்குப்பின் வழக்கப்படி  ஊர் சுற்ற கிளம்பினோம்...

பத்ராவதி தற்போது ஒரு சிறு நகரமெனினும் நமது  பூம்புகார் போல அக்காலத்தில் நிறைய கோயில்களும், பௌத்த விஹாரங்களும்,நிறைந்திருந்து கால ஓட்டத்தில் புதையுண்டு மீண்டும் தோண்டி எடுக் கப்பட்ட பகுதியாகும்...

கூகுள் காட்டிய வழியில் ஆட்டோவில் பத்ரநாக்மந்திர் என ஏறி அமர்ந்தோம்..

மகாராஷ்டிர சட்ட சபை எலக்‌ஷன் சமயம்..வழி எல்லாம் லௌட் ஸ்பீக்கர் அலறல்களுக் கிடையில் கோயிலை அடைந்தோம்...

பூமிக்கு அடியில் புதைந்த கோயிலை தற்போது தரிசிக்க அப்படியே அன்டர் க்ரௌன்டில் மாற்றி இருக்கிறார்கள்..

நாக வடிவில் சிவ பெருமான்...மணிசத்தத்தில் மராட்டிய பஜனைப்பாடல் களுடன் வித்யாசமாக தரிசனம்..வெளிப்ராகாரத்தில் ஆழமான கிணறு, ஏராளமான கல் வெட்டுக்களுடன் நம்மை பத்து நூற்றாண்டுகள் பின்னோக்கி நகர்த்துகிறது்.

சற்று தூரத்தில் பவானி மந்திர்..சிவாஜி மன்னரின் குல தெய்வம் என்பதால் மகாராஷ்டிர மண்ணின் சக்தியின் வடிவம்…

அங்கிருந்து வேடிக்கைப்பார்த்தபடி நடந்தே ரூம் திரும்ப திட்டமிட்டு ஒரு திருப்பத்தில் காக்கா மந்திர் என எழுதியிருக்க அட காக்காவுக்கு கோயிலா என வியந்து, காக்கா,காக்கா என வழிகேட்டு குயவர்களின் குடியிருப்புகளைக்கடந்து (களிமண்ணில் ஏராளமான பொம்மைகள்)ஒரு மந்திரை அடைகிறோம்..அது எதோ காகா என முடியும் சாமியாரின் பஜனை மடம்...மங்கலான வெளிச்சத்தில் அழுக்கு படிந்த சலவைக்கல்லில் தரை..எதோ பாபாவின் சிலை. கன்னத்தில் போட்டுக்கொண்டு வெளி வருகிறோம்..

தூரத்தில் ஒரு வெள்ளை நிற கோபுரம்..கூகுளைக்கேட்டதில் பார்ஸ்வநாத் ஜெய்ன் டெம்பிள் என்றது. 

உள்ளே நுழைகிறோம் ...எங்களை ஜைனர்களாக மாற்றி அந்தக்கோயில் எங்களை தொடர்ந்து மூன்று நாட்கள் தங்க வைக்கப்போகிறது என்பதை அறியாமலே…

படம் பத்ர நாக் கோயில்,பவானி மாதா,

குயவர் குடிசையில் சுஜாதா






No comments:

Post a Comment