Sunday, November 8, 2020

உட்கார்ந்த நிலையில் சனீஸ்வரன்

 ஒருவர் ஓர் ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு  இந்தக் கோவிலை பத்தி சொல்லி அங்கே போகச் சொன்னார். நான் சொன்னேன் சனீஸ்வரன் நிறைய இடத்lதில் உட்கார்ந்துதான் இருப்பார் என்றேன் அதற்கு எங்கே உள்ளது என திருப்பி கேட்டார். அவர் என்னிடம் கீழ் உள்ள கோவிலைத் தவிர வேறு எங்கும் சனீஸ்வரன் அமர்திருக்க மாட்டார் நின்ற கோலத்தில்தான் காட்சி தருவார். எனக்கு தெரிந்தது சனீஸ்வரர் உட்கார்ந்த நிலையில் இல்லை அப்படியே அபூர்வமாக உட்கார்ந்த நிலையில் இருந்தாலும இரண்டு கால்களும் தரையில் பட பதிந்திருக்கும் என்று சவால் விட்டார்.

இந்தக் கோவிலில் சனீஸ்வரன் ஒரு காலைத் தூக்கிய நிலையில் உட்கார்ந்து இருப்பார் என்று சொன்னார். அதன் பின் அந்தக் கோவில் பற்றி விசாரித்து, கோவிலுக்குப் போனோம்.

நான் கோவிலில் பார்த்ததும், இன்டர்நெட்டில் படித்தததும் ஒரு கலவையாக உங்களுக்கு

சனீஸ்வரன் அமர்ந்த கோலத்தில் உள்ள கோவில் பற்றிய தகவல்

திருவாசம் எழுதிய மாணிக்கவாசகர் பிறந்த் ஊரான திருவாதவூரில் (மதுரை மாவட்டம்) உள்ள திருமறைநாதர் திருக்கோவிலில் தான் சனீஸ்வரர் அமர்ந்த நிலையில் காட்சி தருவார்.

இந்தக் கோவிலில் சிவன் சுயம்புவாகத் தலையில் பசுவின் குளம்படிகள் உள்ள நிலையில் இருப்பார். இந்தக் கோவில் வாத நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

மாண்டவ்ய முனிவர் சாபத்தால் முடக்கு நோய் தாக்கப்பட்ட சனிஸ்வரர் இங்கு வந்து சிவனை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்ததாக கூறப்படுகிறது. அவர் பெற்ற இந்த சாப விமோசனத்தை பக்தர்களுக்கும் வழங்க இங்கு தனிக் கோவிலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சனீஸ்வரன் வேறு கோவில்களில் உள்ளது போல் நின்று கொண்டு இருக்காமல் ஒரு காலை மடக்கிய நிலையில் காக்கை வாகனத்தில் உட்கார்ந்த நிலையில் காட்சி தருகிறார்.

போட்டோவை zoom பண்ணி பாருங்க.

இந்த ஊர் ஒரு சின்ன கிராமம். நான் போன போது அதிக வசதிகள் இல்லை. ரோடும் மட்டம். கோவிலில் எங்களை தவிர ஒரு சிலரே சாமி கும்பிட வந்திருந்தனர்.

இந்த கோவிலில் இருந்து ஒரு 10 நிமிடம் நடந்து போனால் மாணிக்க வாசகர் சமாதியையும் பார்க்கலாம்.

நீங்கள் வேறு எங்கும் சனீஸ்வரன் உட்கார்ந்து இருக்கும் கோவில் தெரிந்தால் கமெனட்ஸ்ல சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்குவேன்.



No comments:

Post a Comment