மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 21
கோலாப்பூர் (சுஜாதா வெங்கடேசன்)
நாங்கள் பெங்களூரிலிருந்து சோலாப்பூர் (Solapur)சென்று அங்கிருந்து பண்டரி புரம் சென்று தரிசனம் முடித்து கோலாப்பூரிலிருந்து (Kohlapur)திரும்புவதற்கு ட்ரெய்ன் புக் செய்தோம்.சென்னை அல்லது பெங்களூர் திரும்ப பண்டரிபுரத்திற்கு அருகிலுள்ள சோலாப்பூர் மறுபடி செல்வதை விட கூடுதலாக சில கிமீ பயணத்தில் மகாலஷ்மி கோயில் தரிசனம் செய்ய கோலாப்பூர் சென்று திரும்புவது உசிதம்னு சொல்றார்....மறுநாள் காலை 8.30 க்கு பண்டரி புரத்திலிருந்து கோலாப்பூருக்கு ஒரு பாசஞ்சர் ட்ரெய்ன் இருக்கு என கூகுள் பார்த்து ஸ்டேஷனுக்கு போறோம்...ஆனா அந்த ட்ரெய்ன் கான்சல்னுட்டு சொல்றா..
அடுத்த எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன் வர இரண்டு மணி நேரம் ஆகும் ..ஸ்டேஷன்ல வெய்ட்டிங் வேண்டாம் பஸ்ல போகலாம்கறார்..அக்கா எதோ சொல்ல அப்பா அதற்கு கமண்ட் கொடுக்க இவர் மூட் அவுட்.
ரூ 300 /-க்கு 5 சாதா எக்ஸ்பிரஸ் டிக்கட் வாங்கி கொஞ்சம் தூரம்தானேன்னு ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்ல ஏற கரெக்டா டிடி ஆர் வந்து எக்ஸ்ட்ரா 450/- சார்ஜ் பண்றார்…
பாத்தீங்களா நான் சொன்னதை கேட்டு பஸ்ல போயிருக்கலாம்னு இவர் …ஒரு வழியா கோலாப்பூர்ல எறங்கின உடன் இவர் ஆட்டோ வேண்டாம் நான் தர்மசாலா பாத்துண்டு வரேன்னு சொல்ல அக்கா,அப்பா ஆட்டோக்காரன் கொண்டு விடுவான்னு சொல்ல,
ஆட்டோக்காரன் கமிஷனுக்காக நாலஞ்சு எடத்தை காட்டிட்டு கமிஷன் வாங்கிண்டு எதோ யாத்ரி நிவாஸ்னு 1200/- ன்னு சொல்லி கடைசில எதோ ஒன்னை மூனாவது மாடில புக் பண்றோம்...இவர் மூட் அவுட் ஆகி மூஞ்சிய தூக்கி வச்சிக்கறார்..
எல்லோர்க்கும் நல்ல பசி. ஆட்டோல வர வழில கோயில் அன்னதானம் பாத்தேன். ஓட்டலை தேடி போறதைவிட சுத்தமா இருக்கும்...இஷ்டம்னா வாங்கோங்கறார்...அவசர அவசரமா போய் டோக்கன் கேக்கறோம்...தரிசனம் முடிஞ்சு கோயில்ல கொடுத்த டோக்கன் கேக்கறா..நாங்க இப்பதான் வரோம்னு வழிஞ்ச ஒடனே மேல போங்கோங்கறா...
டைனிங் டேபிள் போட்டு சூடா சாதம் சாம்பார் கறமுது,சாத்தமுது,மோர்,பாயசம்...திருப்தியாங்கறார்...அன்னதான டொனேஷனுக்கு 100/- எழுதறார்...
ரூமுக்கு வந்து ரெஸ்ட் எடுத்துண்டு பக்கத்துல அரண்மனை, ரங்கலா ஏரி ,கோபேஷ்வர் கோயில் எல்லாம் பார்த்துட்டு ராத்திரி மகாலஷ்மி கோயில் போலாங்கறார்...அப்பா ரெடியாகாம ரூம்ல குறுக்க படுத்துண்டு லேட் பண்றா...இவர் நான் மட்டும் போய் பார்துண்டு வரேன்...நீங்க உங்க அப்பாக்கு காவலா இருங்கோன்னு கெளம்பறார்..
அக்காவ காவலா வச்சுட்டு நானும் அத்திம்பேரும் வரோம்..
கிருஷ்ணா நதி கரைல கோபேஷ்வர் கோயில்.இருக்காம். ஆனா 59 கிமீ சிவன் கோயில்னாலும், விஷ்ணுவும் இருக்கார்..
மிக நேர்த்தியான கருங்கல் காவியம்..இப்ப இவாளோட போக முடியாது. அப்றம் அழைச்சிண்டு போறேங்கறார்.
உள்ளூர்ல சுத்திப்பார்க்க ஒரு ஆட்டோ பிடித்து சிவாஜி வெட்டின ரங்கலா ஏரி போறோம்...ஏரிக்கரைல பார்க்..ஏரிக்கு நடுவில் ரங்க பைரவர் கோயில். இந்த ஏரிலேர்ந்து பக்கத்து அரண்மனைக்கு சுரங்க பாதை இருக்காம். ஏரிக்கரைலேர்ந்து சூரியன் மறைவதைப்பார்ப்பது கண்கொள்ளா காட்சி.
இதுக்குள்ள அக்காட்டேர்ந்து போன்..அப்பா எழுந்து தானும் வருவேன்னு கிளம்பிட்டார்...எங்க வரதுன்னு கேக்கறா...நாங்களே
.திக்கு திசை தெரியாம தடுமாறறோம்...எங்க வர சொல்றதுங்கறார்..எப்படியோ ஆட்டோ பிடிச்சி வந்துடறா...எல்லாரும் மகாலஷ்மி கோயில் போறோம்…போற வழில கூகுள் பார்த்து இவர் கதை சொல்றார்…..
தல புராணங்களின் படி கோலாசுரன் எனும் அரக்கனை அம்பாள் சிம்ம வாகனத்தில் வந்து வதம் புரிந்த இடமாக இந்த கோலாப்பூர் தலம் இருக்கிறது. மேலும் பிரளய காலத்தில் உலகம் அனைத்தும் நீரில் மூழ்கி விட இந்த கோலாப்பூர் பகுதியை மட்டும் தனது வீரத்தால், தன் கரத்தை கொண்டு தூக்கி பிடித்து லட்சுமி தேவி காத்ததாக தல புராணம் கூறுகிறது.
இந்த கோலாப்பூர் மகாலட்சுமி கோயிலை சுற்றி 50 சிறு கோயில்களும், ஊர் முழுவதும் சுமார் 3000 சிறு கோயில்களும் கட்டப்பட்டுள்ளது அதிசயம் ஆகும். மேலும் இக்கோயிலில் ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளி கோயிலின் கர்ப்ப கிரக பால்கனி வழியாக லட்சுமி தாயாரின் பாதங்களில் படுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் தாயாரின் மார்பின் மீது படுகின்றன.
பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் தாயாரின் முழு உருவத்தின் மீதும் சூரியனின் ஒளி கதிர்கள் விழுகின்றன. லட்சுமி விக்ரகத்தின் மீது சூரியனின் ஒளி படும் போது தாயாரை வணங்குவது மிகுந்த நன்மை தரும் என கூறுகிறார்கள். மகாதுவாரம் எனப்படும் மேற்கு வாயிலில் அழகிய தீபஸ்தம்பங்ககளை காண முடியும்.மகாலஷ்மியை தரிசிக்க உள்ளே நுழைகிறோம்.
படங்கள் 1)மகாலஷ்மி2) கோபேஷ்வர் கோயில் 3)ஏரிக்கரை
தொடரும்.
No comments:
Post a Comment