Wednesday, November 18, 2020

வெங்காயம் சார்ந்த குறிப்புகள்

 ➖➖➖➖🆎5️⃣🆎➖➖➖➖

வெங்காயம் சார்ந்த குறிப்புகள்!

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

🎊 பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.

🎊 வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

🎊 சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.

🎊 வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.

🎊 பாத்திரங்கள் அடிப்பிடித்துகொண்டால், பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கி போட்டு, சிறிது நீர் ஊற்றி வேக வைத்து, பிறகு தேய்த்துக் கழுவினால் அடிப் பிடித்த சுவடு காணாமல் போகும்.

🎊 நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷாக இருக்கும்.

🎊 சாம்பார், ரசம் இவற்றுக்காக செய்யும் மசாலா கலவையில் ஒரு சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

🎊 பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

🎊 லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

🎊 வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வராமல் இருப்பதற்கு நறுக்க வேண்டிய வெங்காயங்களை முன்பே ஃப்ரிட்ஜில் வைத்த பின்னர் நறுக்க ஆரம்பிக்கலாம்.

🎊 தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

🎊 காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.

No comments:

Post a Comment