Saturday, November 7, 2020

மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 13

 மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 13

(சுஜாதா வெங்கடேசன்)

இனி இவள் பார்வையில்…

மறுபடியும் கூகுளைத்தேடி இன்னும் கொஞ்சம் கோயில் இந்த ஊர்லயே இருக்கு அழைச்சிண்டு போறேன்கறார். குட்டி குட்டியா ரண்டு விட்டல் கோயிலுக்கு போறோம். பண்டரிப்பூர்ல பாத்த அதே பாண்டுரங்கன நாம புள்ளையார்க்கு கட்டி வச்ச மாதிரி தெருவுக்கு ஒரு கோயில் கட்டி சேவிக்கறா...ஒரு அனுமார் கோயிலுக்கும் போறோம். நம்ம ஊர் மாதிரியே செந்தூரத்துல வார்த்த அனுமார் சிலை. 

ஒரு கோட்டை இருக்குன்னு தெரிஞ்சிண்டு தெருத்தெருவா கூட்டிண்டு போய் இடிஞ்சி புதர் மண்டி போன ஒரு கோட்டைய கண்டு பிடிக்கறார். எந்த ராஜா கட்டினது இங்க வந்து என்ன சாதிச்சேள்னு கேக்கறேன். 

யாரோ கோண்டுன்னு ஒரு ராஜா 2000 வருஷம் மின்ன  கட்டினாரார்னும்,உள்ள ஒரு கெணறு இருக்குன்னும் கூகுள் சொல்லித்துங்கறார்..இங்க கேட் பூட்டிருக்கே கூகுள்ட்ட கேட்டு சாவி வாங்கிண்டு வாங்கோன்னு சத்தம் போடறேன்..பின்ன வேகாத வெயில்ல என்னைய இழுத்துண்டு இத பாக்கணும்னு ரொம்ப அவசியமா…?

சரி வா வேற ஒரு பழமையான கோயில் பக்கத்துல காட்டறதுன்னு ரெண்டு தெரு தள்ளி அழச்சிண்டு போறார்...

அது ஒரு பைரவர் கோயில்...அன்னிக்கு எலக்‌ஷன்ங்கறதால ஸ்கூல் பசங்க விளையாடிண்டு இருக்கு...என்ன ஒரு சிங்கத்துமேல உக்கார வச்சி போட்டோ எடுத்துண்டு ஸ்கூல் பசங்களோடவும்  போட்டோ எடுத்துண்டு பைரவர சேவிச்சுண்டு ஒரு ஆட்டோல ரூம் திரும்பறோம்....

ஜெய்ன் சாப்பாடு...சுத்தமா நம்பளோட ஆச்சாரமா சாப்பாடுங்கறதால திருப்தியா சாப்பிடறோம்...நிறைய மோர் தரா....

சாயந்தரம் மறுபடி ஒரு ரவுண்ட் பவானி,பத்ர நாக் சேவிச்சுட்டு ஒரு புத்தர் கோயில் தேடி அலைஞ்சுட்டு ஆட்டோல ஏறி கூகுள் சொல்ற கணேஷ் மந்திர் ...போறோம். மலை மேலே அருள் பாலிக்கறார்...கூகுள் எதோ பழமையான கோயில் பக்கத்துல இருக்குன்னு காட்ட அங்க யாருக்கும் தெரியாம, ஒரு வழியா அடிவாரத்துல சின்னதா புதைஞ்ச சிற்பத்த கண்டுபிடிச்சி போட்டோ எடுத்துக்கறோம்...

வழில தயிர் பாக்கட், ஒரு சின்ன மண் பானை  வாங்கிண்டு  ரூமுக்கு வந்து ரெஸ்ட் எடுத்துண்டு ,

வழக்கப்படி அதே கடைல ஐஸ்க்ரீம், சாபுதானா....

அந்த ஊர் ஸ்பெஷலா ஒரு ஜவுளிக்கடைல பேரனுக்கு ட்ரெஸ் வாங்கிக்கறேன்....

22அக்டோபர் 2019

மத்யானம் 2.00 மணிக்கு ட்ரெய்ன்...

கார்த்தால  காக்ரா,சப்ஜி ஜெய்ன் கோயில்ல...

மறுபடி கோயில் சுத்திட்டு மத்யான சாப்பாடு 11.30 க்கே சாப்பிட்டு வழில ட்ரெய்னுக்கும் கட்டி வாங்கிக்கறோம்...

மூட்டைய கட்டிண்டு பஸ்ஸ்டாண்ட் வரோம்...ரெண்டு தமிழ் நாட்டு சமண நண்பர்கள் அறிமுகமாகி அவங்ககிட்ட சமணர் கோயில் பற்றி பேசிண்டே வரார்..

ஸ்டேஷன்ல ஒரு புலி பொம்மை வச்சிருக்கு...சந்தர்பூர் ஃபாரஸ்ட்  போகாத குறை தீர ஒரு போட்டோ எடுத்துக்கறார்...

ட்ரெய்ன்ல ஒரே சிங்கள கும்பல் ...

கொய்யா,முய்யான்னு பேசிண்டு ...

சென்னை வரது...

ஊர்ல மழை ஆரம்பிச்சிட்டதாலயும், சிக்கனமா (எடுத்துண்டு போன 20,000 ல 10,000 மிச்சம்) போய்ட்டு வந்த்தாலயும் அதிசயமா 600/க்கு ஒரு ஆட்டோக்காரன்ட கூடுவாஞ்சேரி வரைக்கும் பேசி ஆத்துக்கு வரோம்...

(அடுத்து,எங்க அப்பா,அண்ணா,மன்னி,அக்கா,அத்திம்பேரோட மத்யரங்கம் ,சத்யாகாலம்,(தேசிகர்).நாளைக்குஅப்பறம் பண்டரிபுரம்.)

படங்கள்  

சிங்கத்தின் மீது இவர்,விட்டலர்,அனுமார் கோயில் முன்,நான்,பைரவர் கோயில் வாசலில் நாங்கள்,பூட்டிய கோட்டை முன் ஒரு செல்பி,புலிகளுடன் இவர்...








No comments:

Post a Comment