இன்றைய சமையல் குறிப்பு!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம் பூ வடை கசப்பே இல்லாமல் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 2 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
வர மிளகாய் -4
பூண்டு பற்கள் - 15 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
சோம்பு - 2 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
வெல்லம் - ஒரு துண்டு
வேப்பம் பூ - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
வர மிளகாய் -4
பூண்டு பற்கள் - 15 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
சோம்பு - 2 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
வெல்லம் - ஒரு துண்டு
வேப்பம் பூ - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் கடலை பருப்பை கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு மிக்ஸி ஜாரில் கடலை பருப்பு, வர மிளகாய், சோம்பு, வேப்பம்பூ, வெல்லம், புளி, உப்பு ஆகியவை சேர்த்து வடை பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு சேர்த்து அதனுடன் வெங்காயம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துவிட்டு, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாகிய பிறகு அதில் இந்த மாவை சிறிது சிறிதாக தட்டி போட்டு நன்கு வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.
பகிர்வு
┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈
No comments:
Post a Comment