Saturday, December 4, 2021

மாமனாரும் மாங்காய் தொக்கும்

 இரவு வணக்கம்.  வாழ்க நல வளமுடன்..

மாமனாரும் மாங்காய் தொக்கும்..    சிறுகதை..

நமது கதாநாயகன் சீனுவுக்கு வயது 85..ரிடையர்டு புண்ணு கழுத்து

இன்ஸ்பெக்டர்.. அதாவது அனிமல் உறஸ்பெண்டரி..

அன்று இரவு மருமகள் சீதா போட்ட மசால் தோசையை 7 முழுங்கி விட்டு

மருமகளிடம்.. என்னதான் நீதோசை பண்ணினாலும் உங்க அத்தை பண்றமாதிரி

வரலேம்மா.. என்ற குறையையும் சொல்லிவிட்டு  குரட்டை விட்டு தூங்கிக்

கொண்டிருந்தார்.நேற்று கஷ்ட்டப்பட்டு அரைத்த மாங்காய் தொக்கையும்..

அப்படித்தான்  என்ராஜம் செய்யற மாதிரி இல்லே அப்படின்னு குறை

சொன்னார்..இரண்டு வருடமாக இப்படித்தான் குறை..

தூக்கத்தில் யாரோ தட்டி எழுப்புவது உணர்ந்து திடிக்கிட்டு எழுந்தார்..

எதிரே.. அவரின் தர்ம பத்தினி ராஜம் நின்று கொண்டிருந்தாள்..இவர் ராஜத்திற்கு இரண்டு திவசம் செய்தாகிவிட்டது.. அவளை இந்த நேரத்தில் பார்த்ததும் அவருக்கு நவம்பர் மழையிலும்..வேர்த்தது..

என்னடி ராஜம்?.. எங்க வந்தே?.. நல்லாயிருக்கியா என்றார் பயந்தபடி..

நான் சொர்க்கத்துல சௌக்கியமாத்தான் இருக்கேன்.. நீங்கதான் இங்க

இருந்துண்டு மாட்டுப் பொண்ணுகிட்ட அழிச்சாட்டியம் பண்றேள்..

நானா?.. என்ன சொல்றே?

அவ ஆசையா ஆசையா என்ன பண்ணி கொடுத்தாலும்.. குறை சொல்றது.. இது

ராஜம்பண்றமாதிரி இல்லேன்னு சொல்றேளே..தப்பு இல்லையா?.. நான் இனிமே இங்க வரமுடியுமா?.. ஒரு வென்னீர் கூட தர முடியாது.. நான் ஒரு ஆவி.‌உங்களை தவிக்க விட்டுட்டு போன பாவி..

உன்மேல இருக்கற அன்புல அப்படி சொல்லிட்டேன் ராஜம்

நான் உன் மேல உசிரையே வச்சிருந்தேன் தெரியுமா?..

பொய் சொல்லாதேள்.. என் மேல  உசிரை வச்சிருந்தா  நான் போனப்போவே உடனே உறார்ட் அட்டாக் வந்து போயிருக்கணும்.. உங்களுக்கு நாக்கு மேலதான் அன்பு... வயசானா கொஞ்சம் நாக்கை அடக்குங்கோ.. போட்டதை சப்பிட்டுட்டு.. பேஷ் பேஷ்னு சொல்லுங்ககோ.. அப்பத்தான் பண்ணி போடறவாளுக்கு மனசுக்கு சந்தோஷமா இருக்கும்..அதைவிட்டுட்டு கொறை சொல்லாதீங்கோ..

என்ன பேச்சையே காணும்.. இனிமே சாப்பிட மட்டும் வாயைத் திறந்தா போரும்..

அப்படிதிறந்தா பாராட்டாத்தான் இருக்கணும்.. குறை சொல்லக்கூடாது..அப்புறம் நச்சு பொறுக்காம உங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிடுவா..

புரிஞ்சுதா?..

புரிஞ்சுது ராஜம்..  என்றார் சீனு பரிதாபமாக..

உங்களை முதியோர் இல்லத்துல போய் கஷ்ட்டப்படறதை என்னால பார்க்க முடியாதுன்னா.. சீக்கிரமா சொர்க்கம் வர்ற வழியைப்பாருங்கோ.. அங்க எல்லாம் ஜோடி ஜோடியா இருக்கா.. நான்தான்தனியா இருக்கேன்..

கனவு கலைந்து எழுந்தார் சீனு.. முகத்தைத் துடைத்துக் கொண்டார்..

காலையில் மருமகள் சீதா காப்பி கொண்டு வந்து கொடுத்ததும் ஆகா..

ஆவிபறக்கும்காப்பி. இதுவல்லவோ காப்பி..பேஷ்..பேஷே ரொம்ப நல்லாயிருக்கு.. சனையே அபாராம்.. என் பொண்டாட்டி ராஜம் கூட இப்படி ஒரு காப்பி குடுத்தது ல்லே..அப்புறம் நீ செஞ்ச  மாங்காய் தொக்கு.. இன்னிக்கு டிபன்  இட்லின்னு சொன்னயே.. அதைப் போடு.. அபாரமா இருக்கும்..

சீதாவிற்கு தன்னையே நம்ப முடியவில்லை.. மாமனாரா பேசுகிறார்..

புளகாங்கிதம்அடைந்தாள்..

.சீனுவா.. பேசினார்.. நைட் வந்த ராஜத்தின் ஆவியல்லவோ பேச வைத்தது..

 கோவை அனுராதா

No comments:

Post a Comment