முன் ஜென்மக் கொலை..........மனதை உறைய வைக்கும் ஓர் உண்மை சம்பவம்....
கல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இதோ ஒடிஸாவின் ஜீவநதியான மகாநதி பாலத்தில் தடதடவென ஓடிக்கொண்டிருந்தது. 3-டயர் ஏ.ஸி.கம்பார்ட்மெண்டில் தன் பெற்றோருடன் விளையாடிக் கொண்டே பயணம் செய்த எட்டு வயது சிறுமி மதுமிதா திடீரென்று எதிர் சீட்டில் இருந்த அந்த தாடிக்காரனைப் பார்த்து கத்தினாள்."இவன்தான் என்னை ட்ரெயினிலிருந்து இந்த நதியில் தள்ளிவிட்டு கொலை செய்தான்".அந்த தாடிக்காரனுக்கு சுமார் 50 வயசு இருக்கும். அந்த கம்பார்ட்மென்டில் பயணம் செய்த அனைவரையும் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தாலும் அந்த சிறுமியை சமாதானப்படுத்தி பயணத்தை தொடர்ந்தனர்.
ஆனால் அதே கம்பார்ட்மெண்டில் பயணம் செய்த சி.ஐ.டி. சித்ராங்கனுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று அவன் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. தனது அடையாள அட்டையை டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்து அந்த தாடிக்காரனின் அட்ரஸை வாங்கிக் கொண்டான். சிறுமி மதுமிதாவின் குடும்ப விபரங்களையும் பெற்றுக் கொண்டான். சென்னையில் பணி முடித்து திரும்பி வரும் போது புவனேஸ்வர் ரயில்வே போலிஸிடம் சித்ராங்கன் விசாரணை மேற்கொண்டான்.கடந்த சில வருடங்களில் ரயிலில் இருந்து நதியில் விழுந்து இறந்த அல்லது தற்கொலை செய்த கேஸ் ஏதாவது இருக்கிறதா என்று பழைய ரெக்கார்டுகளை தூசி தட்டி பார்த்தபோது...என்ன ஆச்சரியம்...சரியாக எட்டு வருடங்களுக்கு முன்பு ரேஷ்மா என்ற பெண் ஓடும் ரயிலில் இருந்து நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கேஸ் பதிவாகி ஃபைல் மூடப்பட்டிருந்தது. அந்த பெண்ணின் கணவன் பெயர் பிஸ்வாஸ் கோஷ் என்றிருந்தது. ஆம்.அதுதான் அந்த தாடிக்காரனின் பெயர்.பொறி தட்டியது சித்ராங்கனுக்கு. கல்கத்தா திரும்பியதும் சிபிஐ விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன. அவன் எடுத்த நடவடிக்கைகளால் பிஸ்வாஸ் கோஷ் கைது செய்யப்பட்டு கோர்ட் கூண்டில் நிறுத்தப் பட்டான். சாட்சி சொல்ல வரவழைக்கப் பட்ட சிறுமி மதுமிதா கோர்ட்டில் மீண்டும் சொன்னாள் " இவன்தான் என்னை ரயிலில் இருந்து நதியில் தள்ளிவிட்டு கொலை செய்தான்" என்று. வேறு வழியின்றி தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டு இதோ ஜெயிலில் தன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான் பிஸ்வாஸ் கோஷ். போன ஜென்மத்து ரேஷ்மா ஒரு கொலை குற்றவாளியை தண்டிக்க இந்த ஜென்மத்தில் மதுமிதாவாக அவதரித்தது இறைவனின் திருவிளையாடல் அன்றோ!
( A real- life story published in Readers Digest some years ago)
by
No comments:
Post a Comment