Monday, October 12, 2020

பிணியை அகற்றும் பெருமாள்

 பிணியை அகற்றும் பெருமாள்

பெருமாளை வணங்கினால் சகல பாவங்களும் அகலும் என்பதில் எந்த ஐயமும் இல்லை . அவ்வகையில் சகல நோய்களையும் அகற்றும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் ஒன்றும் உள்ளது . 108 திவ்ய தேசங்களில் 79 வது திவ்ய தேசமான திருவரமங்கை என்னும் வானமாமலை திருத்தலத்தில் குடி கொண்டு அருளும் இறைவனுக்கு அருள்மிகு தோதாத்ரிநாதன் என்பது திருநாமம் ஆகும் . அவர் நோய் தீர்க்கும் நாதனாகவும் விளங்குகிறார் . இத்தலத்தில் நோய்களைத் தீர்க்கும் எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது . அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்யை சிறிது உண்டால் தீராத நோய்களும் தீர்ந்து விடுவதாக கூறப்படுகிறது .

 எண்ணெய் கிணறு

திருவரமங்கை திருத்தலத்தில் 25 அடி நீளமும் 15 அடி அகலமும் உள்ள ஒரு எண்ணெய் கிணறு உள்ளது . ஒவ்வொரு நாளும் இத்தல இறைவனுக்கு ஆறு படி நல்லெண்ணெயும் , சந்தன எண்ணெயும் கலந்து காப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது . பிறகு திருமஞ்சனம் செய்யப்பட்ட எண்ணெய் அக்கிணற்றில் ஊற்றப்படுகிறது . இக்கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுப்பதில்லை . மலை நீர் கொட்டினாலும் , எந்த வித பாதிப்பும் எண்ணெய்க்கு ஏற்படுவதில்லை . எண்ணெய்யின் தன்மையும் மாறுவதில்லை .

 எண்ணெய்யின் நன்மைகள்

 இந்த எண்ணெய்யை சிறிது உட்கொண்டால் தீராத சரும நோய் , குஷ்டம் , மூட்டு வலி , போன்ற நோய்களும் தீர்ந்து விடுகின்றது . இந்த எண்ணெய்யை உடலில் தேய்த்துக் கொண்டால் தீராத வாத நோயும் குணமாகி விடுகின்றதாம் .

 வழிபாட்டு முறைகள்

 பக்தர்கள் மருத்துவ குணம் மிகுந்த இந்த எண்ணெய்யை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்வதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது . தேவைப்பட்டால் கால்படி எண்ணெய் கிணற்றில் ஊற்றிவிட்டு , ஊற்றிய அளவு மருத்துவ எண்ணெய்யை எடுத்துத்தருவார்கள் . இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் .



No comments:

Post a Comment