வைஷ்ணவ தேவி இறுதிப்பகுதி 9
( உதவிய இணைய நண்பர்கள்)
நாங்கள் தங்குமிடத்திலும் அப்படி ஒரு இயந்திரம் இருந்தது. அரை மணி நேரத்திற்கு 75 ரூபாய் வாங்கிக் கொண்டார் அங்கே இருந்த பெண். அரை மணி நேரத்திற்குப் பிறகும் ஏனோ கால் வலி குறையவில்லை – அதிகமாகிவிட்டதோ என்ற எண்ணம் கூட எனக்கு வந்தது! என்ன தான் இயந்திரம் என்றாலும், அது மனிதர்கள் பிடித்து விட்டது போல இருப்பதில்லை!
அறைக்குச் சென்று சுடு நீரில் நீண்ட நேரம் குளித்து கால்வலியையும் உடல் வலியையும் போக்குவது இருக்கட்டும் தேநீர் அருந்திபடுக்கையில் படுத்தது தான் தெரியும். அதன் பிறகு பூகம்பமோ, பிரளயமோ வந்திருந்தால் கூட எங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அப்படி ஒரு அசாத்திய தூக்கம்.அடுத்த நாள் காலை எழுந்திருக்கும்போது பத்தரை மணி!
பொதுவாகவே வைஷ்ணவ தேவி வருபவர்கள், இருக்கும் கால்வலியினால், தேவியைத் தரிசித்த பின்னர் நேராக தாங்கள் இருக்குமிடம் திரும்புவார்கள்.ஆனால் ஒரு சிலர் மட்டும், பக்கத்தில் இருக்கும் இடங்களுக்குச் சென்று வருவார்கள். கட்ராவிற்கு அருகிலேயே பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உண்டு நாங்கள் ஜம்முவில் அடுத்த நாள் shopping செய்ய இருந்தமையால் ஜம்மு திரும்பினோம் ....
ஜம்மு கலவர காஷ்மீரில் இந்துக்கள் மெஜாரிட்டி ஊர் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மைத்துனி உடன் வர முதலில் சென்றது
ரகுநாத்ஜி கோயில்
இக்கோயில் மூலவர் இராமராக இருப்பினும், சீதை, விஷ்ணு, கிருஷ்ணர், அனுமார், சிவன், பிரம்மா, துர்கை, பார்வதி ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதிகள் உண்டு.
இக்கோயில் கட்டும் பணி, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா குலாப் சிங்கால் 1835-இல் துவக்கப்பட்டு, அவரது மகன் மகாராஜா ரண்பீர் சிங் என்பவரால், 1860-இல் கட்டிமுடிக்கப்பட்டது.
இக்கோயிலை 30 மார்ச் 2002இல் பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகள் துப்பாக்கிகளாலும், குண்டு வீச்சாலும் தாக்கியதில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.இரகுநாத் கோயில் மீதான இரண்டாம் தாக்குதலை நவம்பர் 24, 2002இல் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் மேற்கொண்டனர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதிலும், குண்டுகளை வீசியதாலும், 13 பக்தர்கள் இறந்தனர்
எனவே உள்ளூர நடுக்கத்துடன் .CRPF உறவினர் தந்த தைரியத்துடன் தரிசனம் செய்தோம்
கடைத்தெருவில் காஷ்மீர் பட்டு ஃபேமஸ் என்பதால் அக்கா கடையிலிருந்தே வீடியோ கால் போட்டு பெண்ணிடம் பேசி ஐந்தாறு புடைவை வாங்கித்தள்ளினாள். அத்துடன் கம்பளி dry fruits sweets என வீரத்துடன் (?)காஷ்மீர் ல்சென்று வந்த அடையாளமாக வாங்கினோம்
நாங்கள் தரிசிக்க இயலாத பைரவர் கோயில் பற்றி 7 ம்பகுதியின் கதைதொடர்ச்சி....
தன் தவறினை உணர்ந்து கொண்ட பைரோன் நாத் அன்னையின் முன் மண்டியிட்டு, “அன்னையே உன்னை யாரென்று தெரியாது நான் பெருந்தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து அருள வேண்டும் என அவள் தாழ் பணிந்தான். அன்னையும் அவனது தவறினை மன்னித்து, அவனுக்கு ஒரு வரமும் அளித்தாள். அந்த வரம் பைரோன் நாத் தலை விழுந்த இடத்தில் அவன் கோவில் கொண்டிருக்க, அன்னையை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும், பைரோன் நாத் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு வந்து பைரைவனையும் தரிசிக்க வேண்டும். அப்படி தரிசித்தால் தான் அன்னையை தரிசிக்க வந்த பயணம் முழுமையாகும்.
இப்போதும் அன்னையை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் பைரோன் நாத் குடியிருக்கும் பைரவ் மந்திர் செல்லாது திரும்புவதில்லை. அப்படித் திரும்பினால் அன்னையை தரிசித்த பலன் கிட்டாது என்று நம்புகிறார்கள்.
பைரவ் மந்திர் “[b]பவன்” என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்தப் பாதை கொஞ்சம் கடினமான ஏற்றம் கொண்டது – சற்றே செங்குத்தான பாதை என்பதால் இதில் பயணிப்பது கொஞ்சம் கடினமானது.
எனினும் நாங்கள் இதை பின்னர்தான் கேள்விப்பட்டு தரிசிக்க இயலாத்து குறித்து வருந்தினோம்..
நண்பர்களே நீங்கள் முன்னரே திட்டமிட்டு அன்னையையும் பைரவரையும் தரிசிக்க அன்னையின் அருளை வேண்டுகிறேன்... முற்றும்
Venkatesan Varadharajan
No comments:
Post a Comment