47. தீர்காயுஸு (சிறுகதை சீசன் 4) #ganeshamarkalam
ஆர்கே மட் உயர்நிலைப் பள்ளியில் 3நா கதைன்னு போயாச்சு. இன்னைக்கு ரெண்டாம் நாள். சொல்ரவர் அருமையா சொல்ரர். சத் விஷயமான்னா ஆமாம். புராணம், இதிகாசம் மட்டுமில்லாம, கீதை, அரசியல், சினிமான்னு எல்லாத்துலேயும் பூந்து புறப்பட்டு உதாரணங்களோட, சொல்ல வந்ததை மனசில் பதியும்படி செய்யரர்.
தினமும் முடிக்கரச்சே ஒரு கேள்வி கேட்டு எல்லார் மனசுலேயும் கொக்கி போட்டு வச்சிடுவர். மறுநா என்ன பதில் யோசிச்சு வச்சிருக்கேள்னு நம்மையும் ஈடுபடுத்தி, நாம சொல்லும் பதில்லேந்து சொச்சத்தை. புதுசா பட்டது. நேத்து கேட்ட கேள்வி, “உலகத்துலேயே எந்த கண்டுபிடிப்பு எல்லாருக்கும் பயன்படும்னு நினைக்கரேள், எதுக்கு எல்லாரும் ஆசைப்படுவா?” பாதிப் பேராவது பதிலுக்கு மூளையை கசக்கிண்டிருப்பா. அதில் நானும்.
ஜெயந்தி என் பெயர். இப்போதான் விஸ்காம் செர்ந்தேன். பார்த்தா ஜாலியான பொண்ணா இருக்கணும், கதா காலக்ஷேபம்னு போராய்னு கேலி செய்யலாம். பல விஷயங்களில் ஈடுபாடு. மந்தவெளீலே லெடீஸ் ஹாஸ்டலில் ஜாகை. தஞ்சாவூரில் அப்பா அம்மா. ஏன் அங்கேயே விஸ்காம் சொல்லித்தர காலேஜ் இல்லையா? வயசுப் பெண் இத்தனை தூரம், தனியா ஹாஸ்டலில் தங்கிண்டு? எனக்கு என் சுதந்திரம் பிடிக்கும்.
இந்த பேச்சாளர் மிகவும் யதார்த்தமா சொல்லி பெரீய விஷயங்களை புரிய வைக்கரார்னு பட்டது. இவர் சொற்பொழிவைக் கேட்ட சிலர் எனக்கு ரெகமெண்ட் செய்ய, வந்தாச்சு. ஆகஸ்ட் 15ஐ ஒட்டி ரெண்டுநா காலேஜும் லீவாப்போச்சு. இன்னொரு காரணம் சொற்பொழிவு தருவது ஸ்ரீராம் என்ற இளைஞர். ஹாண்ட்ஸம். என்னைவிட 6 வயசு ஜாஸ்த்தீ இருக்கணும். என்னத்தை படிச்சுட்டு இந்த வயசில் இப்படி பேச்சளரா மாறிட்டார்? பல யங்க் பீப்பீள், குறிப்பா இளைஞிகள் கூட்டத்தில்.
சரி கேள்விக்கு வரலாம். எந்த கண்டுபிடிப்புக்காக எல்லாரும் ஆவலா காத்திண்டிருப்பா, எது ப்ரேக்துரூ ரிஸெர்ச்சா ஆகும்? இரும்பை தங்கமாக்குவதா? ஐபோன் 47ஏ? செவ்வாய் கிரகத்துக்கு சீப்பா போயிட்டு வரதா? என் ரூம் மேட் வைஷ்ணவீ கிட்டே கேட்டேன். எக்ஸ்போர்ட் கம்பேனியில் வேலை செய்யரா.
சித்தே யோசிச்சுட்டு “எப்போதும் இளமையா, முதுமையே ஏற்படாம இருப்பது எப்படீன்னு கண்டுபிடிச்சா எல்லாரும் சந்தொஷப்படுவா”. உண்மைதான். சரி, நாளைக்கு அவர் கேட்டா இந்த பதிலை சொல்லலாம். படுத்துக்க போரச்சே “டீ ஜெயந்தி, அதை டிலீட் செஞ்சுடு, எனெக்கென்னமோ எல்லாரும் விரும்புவது சாகா வரம். மரணம் ஒரு பெரீய மிஸ்டரீ, செத்ததுக்கு அப்புரம் என்ன? தெரியலை, மரண பயம் சூழ்ந்துக்கறது. சாகாம தீர்காயுஸா இருக்க எத்தையாவது கண்டுபிடிச்சா கல்லா கட்டலாம்.”
முதநாள் கேள்வி “ஏன் மனுஷா இத்தனை கஷ்டப்படரா?”. பலதரப்பட்ட பதில். அதை வச்சே பல விஷயங்களை தெளிவு படுத்தினார். நாளைக்கு கடைசீ நாள். நிச்சயம் நேத்து கேள்விக்கும் சொல்லப்போர விஷயத்துக்கும் லிங்க் இருக்கணும்.
4 மணிக்கு ஆரம்பிச்சு 6 மணி வரைக்கும் 2 மணிநேரம் ஆனந்தமா பொழுதை போக்கித் தரார். சீக்கிரம் போனா முத வரிசையில் உக்காந்துக்கலாம். அவரை கிட்டத்துலேந்தும் ரசிச்சா மாதிரி ஆச்சு.
வழக்கம் போல அரங்கம் நிரம்ப பங்க்சுவலா வேஷ்டி, குர்த்தாவோட வந்து மேடையை அலங்கரிச்சார். விநாயகர் ஸ்துதி, ஒரு பக்திப் பாடல், ஒரு ராக ஆலாபனை செஞ்சுட்டு “யாருக்கு நேத்து கேட்டது ஞாபகம் இருக்கு? பதிலும் வச்சிருக்கேள்? சட்டுன்னு 20 கை உசந்தது. “இவ்ளோதானா!” கோவிச்சுண்டார். கையத் தூக்கினவா 4 பேரை தேர்ந்தெடுத்து மேடைக்கு வந்து பெசக் கூப்பீட, நானும் அதில் 4ஆவதா நின்னுக்கரேன்.
எதிர்பார்த்த மாதிரி பெசினா. ஒருத்தர் “சக்கரம் கண்டுபிடிச்சா மாதிரி அபூர்வமான கண்டு பிடிப்புகள் சமீப காலத்தில் இல்லை, அதுமாதிரி வேணும்.”. இன்னொருத்தன் வியாதி வெக்கயில்லாம வாழ்க்கை”. அடுத்ததா மாமி, ஸ்ரீராமை புகழ்ந்து பேசிட்டு “என்னைப் பொருத்தவரை எல்லாருக்கும் தேவை காசு பணம். அது சிரமப்படாம எல்லாருக்கும் கிடைக்கணும்”. ஆடியன்ஸ் சிரிச்சுட்டா. என் பாரி வந்தது. வாய்ப்புக்கு நன்றி சொல்லிட்டு “மரணத்தை வெல்லும் தந்திரமும், வேணும்கிறப்போ கிளம்பிப் போகணும், இருக்கும் வரை இளமை குன்றாம இருக்கத்துக்கும் ஏத்த கண்டுபிடிப்பு, மந்திரமோ தந்திரமோ, இல்லை மாத்திரையோ எல்லாரும் விரும்புவா”. கைதட்டல் அதிர்ந்தது.
சொல்லிட்டு கீழே வந்து சீட்டில் உக்காந்ததும் ஸ்ரீராம் “ஜெயந்தி சொன்னதை வச்சு இன்னைக்கு பெசலாம்”. சொன்னவன் என்னைப் உத்துப் பாத்து, பண்டைய காலங்களில் இளமையா இருக்க காயகல்பம் பற்றிய குறிப்புகள் இருப்பதை சொல்லிட்டு, “மாந்த்ரீகத்தில் சில வழிமுறைகளை செஞ்சு சில தேவதைகளை வசியப்படுத்தி மரணத்தை தள்ளிப்போட முயற்சி எடுத்தா. அதெல்லாம் மனித குலத்துக்கு நல்லதைச் செய்யாதுன்னு வித்தைகளெல்லாம் வெளிவராம அழிச்சுட்டா. பல சித்தர்கள் 800 வருஷம் 1200 வருஷம்னு வாழ்ந்திருக்கா. மஹாபாரதத்தில் பீஷ்மருக்கு அவர் விருப்பப்பட்ட போது மரணம் சம்பவிக்க வரம் வச்சிருந்தர்.”
திடீர்னு “ஜெயந்தி! உங்களுக்கு நரபலி பத்தி தெரியுமா?” பக்குன்னுது. எங்கேயோ படிச்சேன், சினிமாவில் வரும். “அதெல்லாம் இப்போ எதுக்கு?” இதையெல்லாம் ஞாபகப் படுத்தினா ராத்திரி தூக்கம் வராதே!. “உண்மையிலேயே அரை குறையா கண்டெடுத்த ஓலைச்சுவடிகளில் எழுதியிருக்காப்போலே செஞ்சா மரணம் சம்பவிக்காம நீடூழி வாழலாம்னு நம்பிண்டு சில காரியங்களை சில மாந்த்ரீகர்கள் செஞ்சதை வச்சு சட்டத்தில் தண்டனையை கொண்டுவந்தா நம் நாட்டில். ஆனா உண்மையிலேயெ இங்கே எத்தனை பேருக்கு சாகாமலே இருக்கணும்னு ஆசை?”
300பேரில் ஒரு 10 பேர் கையைத் தூக்க, அதிலேயும் 5 பேர் சட்டுன்னு கையைக் கீழே போட்டுட, அதில் ஒருத்தனை இவர் எழுந்துக்கச் சொல்லி, “ஏன் கையைக் கீழே போட்டீங்க? எல்லாருக்கும் சொல்லுங்க!”
“சாகாம இருந்து என்னத்தை சாதிக்கப் போரோம்? எனக்கு இப்போவே 65 ஆச்சு, மூட்டு வலி, கொலஸ்ட்ரால், சுகர், இப்படியே ஒண்ணுக்கும் ஆகாம உயிர் வாழ்வதில் யாருக்கு லாபம்? “இளைமையா கடைசீ வரைக்கும் இருப்பீங்கன்னு உத்திரவாதம் தந்தா சாகாம இருக்க ஆசையா?” அவர் கேட்டதும் இன்னும் ஒரு 30 பேர் கையைத் தூக்க, கையையே தூக்காம இருந்த ஒருவரை எழுந்துக்கச் சொல்லி, “நீங்க ஏன் தூக்கலை. இளமை + சாகா வரம் உங்களுக்கு பிடிக்காதா?” அவர் ஹவுஸ் வைஃப். “ஒருத்தரோட வாழ்க்கையிலே 20-25% காலகட்டம்தான் இளமைக் காலம். முழு வாழ்க்கையும் அப்படியே இருந்தா கசந்து போகும். பிற்காலத்தில் அசைபோடன்னு ஒண்ணும் இருக்காது. ஆயுசுபூரா இளமை தேவையில்லை.”
“நீடூழி வாழ ஆசையில்லையா?” “இருந்தது, இப்போ இல்லை. என் வாழ்க்கை போல் அமைஞ்சதுன்னா இப்பவே போயிட மாட்டாமோன்னு இருக்கு”.
“ஜெயந்தி! இப்போ உங்களுக்கு என்ன சொல்லத் தோணித்து?” “குழப்பமா இருக்கு. எல்லாரும் இளமையா 500 வருஷம் இருக்க பிரியப் படுவான்னு நினெச்சேன், அப்படி இல்லைன்னு இவங்க சொன்னதை வச்சு சொல்லலாம்”. “உங்க விருப்பம்?” “சொல்லத் தெரியலை. இன்னும் சிந்திக்கணும்”.
“பேஷா சிந்திங்கோ” கர்ணன் சினிமா பாத்திருக்கீங்களா?” :பிஃபோர் ஐ வாஸ் பார்ன் வந்து சக்கை போடு போட்ட படம். சிவாஜி நடிச்சது. சமீபத்தில் ரீமாஸ்டர் பண்ணி திரையிட்டா? டிவீலே பார்த்தேன்.” “அதில் கர்ணன் அம்படி பட்டு, தேர் சக்கரத்தை பள்ளத்துலேந்து எடுக்க முடியாம உயிரும் போகாம கிடப்பான். அவன் தர்ம பலன்கள் அவங்கிட்டே எமனை நெறுங்காம காக்கும். கிருஷ்ணரா நடிச்ச என்டி ராமாராவ் சிவாஜியைப் பாத்து “வருவதை எதிர் கொள்ளடா’ம்பார். அப்புரம் மாறு வேடத்தில் வந்து ‘நீ செஞ்ச தர்மத்தின் பலனை எல்லாம் தானமாக் கொடூ’ன்னு எடுத்துண்டதும்தான் அவன் உயிர் பிரியும்”. “பிரதிபலன் பாக்காம அள்ளித் தந்தவனும் கிளம்பிப் போய்த்தான் ஆகணும்னு வல்லவன் வகுத்ததுன்னு சொல்வார்”.
“இன்னொண்ணும் கவனிக்கணும். போர் ஆரம்பிக்கறத்துக்கு மின்னாடி சாகப் போர சொந்தக்காராளை நினெச்சு கலங்கிப்போய் அர்ஜுனன் நிக்க அதே என்டி ராமாரவ் பாட்டுப் பாடுவர். ‘மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’ன்னு ஆரம்பிச்சு ‘காண்டீபம் எழுக, நின் கை வன்மை எழுக, இக்களமெல்லாம் குறுதியில் திளைக்க’ன்னு உசுப்பி விடுவர். ஆன்மா சாகாது, மரணத்தை பத்தி கவலைப் படாம தர்மத்துக்கு எதிரா யார் நிக்கராளோ எல்லாரையும் வெட்டிச் சாய்’னு”
நான் கையைத் தூக்கினேன். “நிஜமாவே கிருஷ்ணர் சொன்னதா?” அதுக்கு ஸ்ரீராமன், “ஆமாம், அப்படித்தான் வியாசர் சொல்லியிருக்கார். முக்காலமும் அறிந்த வியாசரின் எழுத்தில் நமக்கு இவை பகவானின் வார்த்தைகளா சொல்லப்பட்டிருக்கு” பின்னாடி வரிசையிலேந்து ஒருத்தன் “இதெல்லாம் கண்ணதாசன் சொன்னது.”
“இருந்துட்டுப் போட்டம். முக்கியமா கவனிக்க வேண்டியது மஹாபாரதத்தில் கீதோபதேசத்தில் திளைச்சு வளர்ந்த நாம மரணம் எய்யாத மாதிரி கண்டு பிடிப்பை வேண்டுவது ஆச்சர்யம்”. “எந்தக் கண்டுபிடிப்பு யாரை ஆகர்ஷிக்கும்னு சொல்லவே முடியாது. ஜெயந்தி வயசில் ஐபோன் லேடஸ்ட் மாடல் வேணும்போல இருக்கும். ஜெயந்திக்கே கொஞ்சநாள் கழிச்சு ஐபோன் அலுத்துப் போகும். உலகத்தை சுத்திப் பாத்துட்டவனுக்கு அக்கடான்னு ஆத்தங்கரையில் உக்காந்துக்க பிடிக்கும். நலங்கில் திருஷ்டிக்கு உடைக்கற சுட்ட அப்பளத்தை எடுத்துச் சாப்பிட குழந்தைகளுக்கு கை நமநமன்னு இருக்கும். வயசானவாளுக்கு சொச்ச நாட்கள் உபாதையில்லாம, வேஷ்டீலேயே உச்சா போகாம கழிச்சா போதும்னு. ஆசைகளும் விருப்பங்களும் மாறிப் போவதுதான் விசித்திரம். சரிதானே ஜெயந்தி?”
என் முகத்தைப் பாத்து ஸ்ரீராம் கேக்கரார். நானும் சும்மா இல்லாம “எல்லாத்துக்கும் ஆசைப்படுன்னு ஒரு சாமியார் சொன்னாரே?” கேட்டுட்டேன்.
“ஆமாம், அதுவும் சரியாத்தான் சொல்லியிருக்கா. ஆசைப்படுன்னா அதுக்கு அர்த்தம் எல்லாத்தையும் க்ரெடிட் கார்டில் வாங்கி ஆத்தில் சேர்த்து வச்சுக்கோன்னு இல்லை. நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கணும், உண்மை என்னன்னு புரிஞ்சுக்கணும், அதுக்கு எல்லாத்துக்கும் ஆசைப்படுன்னு அர்த்தமாகும். அந்த மாதிரி உண்மையைத் தெடிப்போக அடங்காத அறிவுப்பசி, தாகத்தை அந்த ஆசைங்கிர சொல் குறிக்கும்”. “அட”ன்னு பட்டது. திரும்பவும் கையைத் துக்கினேன்.
“ஜெயந்திக்கு இன்னும் சந்தேகம் தீரலை. அறிவுப் பசீன்னு வச்சுக்கலாம்.” சொன்னதும் எல்லாரும் கை தட்டினா.
“மரணத்துக்கு பயப்படப் பிடாது வாழ்க்கை முடிவை இயல்பான ஒண்ணா ஏத்துக்கணும்னு இருக்கப்போ யாராவது பெரியவாளை நமஸ்கரிக்கச்சே ‘தீர்காயுசா இரு’ன்னு ஏன் ஆசீர்வாதம் செய்யணும்?” அட! பொண்ணு நல்ல கேள்வியான்னா கெட்டுட்டா! கூட்டத்தில் சலனம். இதுக்கு ஸ்ரீராமன் என்ன பதில் தரப்போரார்? எல்லாரும் ஆவலா.
“தீர்காயுஸா இருன்னா நீண்ட நாள் உயிர்வாழ், தீந்துபோகாத ஆயுஸா உனக்கு பிராப்த்தம் ஆகட்டும்னு அர்த்தமில்லை. தீர்க்கம்னா முழுமை, அறிவுத் தெளிவும் கவர்ச்சியும் மிக்க தோற்றம், துணிவான எண்ணங்கள் நிறைஞ்ச வாழ்க்கைன்னு வச்சுக்கணும். உனது வாழ்க்கை முழுமை அடையட்டும் – அதான் தீர்கம், இருக்கும் சொல்ப அறிவிலும் தெளிவா இரு அது தீர்க்கம்னும் துணிச்சலையும் உள்ளடக்கினு ஆசீர்வாதம் பண்ணுவா. நம்பளைவிட வயசில் முதிர்ந்தவா இப்படி சொல்ரச்சே அவா வாக்கு பலிக்கும்னு நம்பரோம். இப்படி ஆசீர்வாதம் காதில் விழணும்னே நாம அவா காலில் விழணும். நம்மேல் குரோதமோ விரோதமோ முன்பகையோ இல்லாத முதியவர்களின் எதேச்சயான, அதிகம் யொசிக்காம வந்து விழும் ஆசீர்வாதம் நம்மை மேம்படுத்தும்”.
“யாரும் நம்ம ஆயுளை நீடித்து விடமுடியாது. அவாளும் நாம வாழப்போவதை கூடவே இருந்து பாக்கப் போவதில்லை. குழந்தையாவே போன உயிர்களும் தீர்க்கமான ஒரு வாழ்வை வாழணும், 70 வயசில் இல்லை 90இல் போயிருந்தாலும் தீர்க்கமான வாழ்க்கை வாழ்ந்துட்டுப் போணம் இது எல்லாருக்கும் அமைய ஏதாவது கண்டுபிடிப்பு ஏற்பட்டதுன்னா அதை எல்லாரும் விரும்புவார்கள். நம் வாழ்வை தீர்க்கமா ஆக்கிக்கொள்வது நம் கையில். இதுக்கு கண்டுபிடிப்பு தேவையில்லை.” சொல்லி முடிச்சான் ஸ்ரீராமன்
இத்தனை தெளிவா இருக்கார். இப்படி ஒருத்தர் கணவனா அமைந்தால் என் வாழ்க்கை தீர்கமாப்போகும்னு பட்டது. ஆசைப்படுவதில் என்ன தப்பு? எல்லாத்துக்கும் ஆசைப்படுன்னு சொல்லிட்டாளே. சொற்பொழிவு முடிஞ்சதும் மேடையில் நின்னிண்டு ஆர்கனைஜர்ஸோட பேசிண்டிருந்த ஸ்ரீராமனை திரும்பிப் பாத்துண்டே வந்தேன்.
No comments:
Post a Comment