Saturday, October 24, 2020

வைஷ்ணவ தேவி ஆன்மீகப்பயணம் - 1

 வைஷ்ணவ தேவி ...காஷ்மீர கலவர பூமியில் ஒரு ஆன்மீகப்பயணம்…

ஜம்மு

 இந்தியாவில் அதிக அளவில் பார்வையிடப்படும் இடங்களில் ஒன்றாகும். குளிர்காலத்தில் ஜம்மு, ஜம்மு & காஷ்மீரின் நிர்வாக தலைநகராக செயல்பட்டு வந்தது.  ஏனெனில் குளிர்கலங்களில் ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு இருக்கிறது. தற்போது தனி யூனியன் பிரதேசம்..

இந்த பிராந்தியமானது கி.மு 8 ஆம் நூற்றாண்டில் ஜம்முவை கண்டறிந்ததாக நம்பப்படும் அரசர் ஜம்பு லோசான் என்பவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

எண்ணற்ற கோயில்கள் ஜம்மு முழுவதும் நிறைந்து காணப்படுவதால் 'கோவில்களின் நகரம்' என்ற புனைப்பெயரை பெற்றுள்ளது. இந்த இடமானது ஒரு பிரபலமான புனித யாத்திரை சுற்றுலா தலமாக அமைந்துள்ளது ஏனெனில் புகழ்பெற்ற இந்து மத கோயிலான, வைஷ்ணவ தேவி கோவில் இங்கு அமைந்துள்ளது.

ஜம்மு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளை புனிதயாத்திரைக்காக ஈர்ப்பது மட்டுமல்லாமல், அதன் கண்கவர் இயற்கை அழகை காண்பதற்காகவும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

ஜம்மு இமாலய மலைதொடரின் தெற்கு பகுதியிலும், பஞ்சாப் சமவெளியின் வடக்கு பகுதியிலும் அமைந்துள்ளது. தாழ்வான பகுதியில் செஸ்னட் மற்றும் ஓக் வகை மரங்களால் சூழப்பட்டுள்ளபோதிலும் அதன் வடக்கே உயரே செல்ல செல்ல தேவதாறு மற்றும் பைன் மரவகைகள் என தாவர வகைகள் மாறு படுகின்றன.

ஜம்முவிற்கு வருகை தர திட்டமிடும் சுற்றுலா பயணிகள் வைஷ்ணவ தேவி கோவில், ரகுநாத் கோயில், முபாரக் மண்டி அரண்மனை, மான்சர் ஏரி, பஹு கோட்டை, மற்றும் அமர் மஹால் போன்ற இடங்களை தவறவிட்டுவிட கூடாது.

வைஷ்ணவ தேவி கோவில் ஒரு குகைகோவிலாகும்

இது இந்து மத தாய் கடவுள் வைஷ்ணவ தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 

இந்த கோவிலின் முக்கிய ஈர்ப்பானது வைஷ்ணவ தேவியின் மூன்று அவதாரங்களை, சித்தரிக்கும் சிலைகள் உள்ளன; அதாவது 1)மகாகாளி, நேரம் மற்றும் இறப்பின் இந்து கடவுள், 2)மகா சரஸ்வதி, இந்துக்களின் அறிவு கடவுள் மற்றும் 3)மகாலட்சுமி, இந்துக்களின் செல்வம் மற்றும் அதிர்ஷ்ட கடவுள்.

ஜம்முவின் முற்கால மன்னர்கள் மகாராஜா ரன்பீர் சிங் மற்றும் அவரது தந்தை மகாராஜா குலாப் சிங் ஆகியோரால் கட்டப்பட்டது ரகுநாத் கோவில்; இது இப்பகுதியில் மற்றொரு முக்கிய புனித யாத்திரை தளமாக உள்ளது. கட்டுமான முறை, வளைவுகள், மற்றும் கோவில் மாடமும் முகலாய கட்டடக்கலை பாணியை பிரதிபலிக்கின்றன.

ஜம்முவிற்கு பயணம் மேற்கொள்ளும் போது, பயணிகள் டோக்ரா மன்னர்களின் அரச உறைவிடம் என அறியப்பட்ட முபாரக் மண்டி அரண்மனையை கட்டாயம் பார்க்க வேண்டும்.

இந்த அரண்மனையின் தனிப்பட்ட அம்சம், இது ராஜஸ்தானி, முகலாய, பரோக், மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை பாணிகளின் கூட்டு கலவையை நிரூபிக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ளே உள்ள ஷீஸ் மஹால் முபாரக் மண்டி அரண்மனையின் பிரதம ஈர்ப்பாக உள்ளது.

மான்சர் ஏரி, ஜம்முவின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. பச்சைப்பசேல் காடுகளால் சூழப்பட்டுள்ளது , ஒரு இந்து மத பாம்பு கடவுளான ஷேஷ் நாக் கோவில்

இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது.

பஹு கோட்டை

 ஜம்முவின் மிகவும் பழமையான கோட்டையாகும் இது சூரிய வம்சத்தை சேர்ந்த, ராஜா பஹு லோசான் மூலம் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது..

ஜம்மு தாவி ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில் சந்திப்பு..இது மற்ற முக்கிய ரயில் நிலையங்களான, புனே, சென்னை, புது தில்லி மற்றும் மற்ற ரயில் சந்திப்புகளோடு இணைக்கப்பட்டுள்ளன.

சாலை வழியாக பயணம் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் புது தில்லி, அம்பாலா, அமிர்தசரஸ், லூதியானா, சிம்லா மற்றும் மணலி உள்ளிட்ட நகரங்களில் இருந்து தனியார் பேருந்துகள் மற்றும் டாக்சி சேவைகளை பயண்படுத்திக்கொள்ளலாம்

.

ஜம்முவை சுற்றிப்பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள், இந்த பிராந்தியத்திற்கு அக்டோபர் மற்றும் மார்ச்க்கு இடைப்பட்ட காலத்தில் எந்த நேரத்திலும் தங்கள் பயணதிட்டத்தை வகுத்து கொள்ளலாம். இந்த காலத்த்தில் வெப்பம் மற்றும் ஈரப்பபதம் நிறைந்த கால நிலைய தவிக்க முடியும்.

வைஷணவ தேவி தரிசிக்கும் எண்ணத்தில் இருந்தாலும் காஷ்மீர் என்பதால் தனியாக போய் மாட்டிக்கொள்ள தயக்கத்தில் இருந்த போது என் ஒன்று விட்ட மைத்துனர் பத்ரி தனது ஒன்று விட்ட மைத்துனி (ஒன்று விட்ட குறை தொட்ட குறை என்பது இதுதானோ?) ஜம்முவில் ரிசர்வ் போலீஸில் பெரிய அதிகாரியாக இருப்பதாகவும் தாமே அழைத்து செல்வதாகவும் அவர் குவார்ட்டர்ஸில் இருப்பதால் தங்குவதற்கும் நல்ல சாப்பாட்டிற்கும் தாமே பொறுப்பேற்பதாகவும் கூறி டிக்கட்டையும் ரிசர்வ் செய்து விட்டார். 

உறவினரின் அன்பு அழைப்பை ஏற்று கலவர பூமி என காஷ்மீர் குறித்த எண்ணத்தை ஒதுக்கி சென்னை -டெல்லி ,டெல்லி -ஜம்மு  என 6 பேர் கொண்ட குழுவாக (நான்,

சுஜாதா,அக்கா,அத்திம்பேர்,ஒ.வி மைத்துனர்,அவர் நண்பர்)டிக்கட் ரிசர்வ் செய்தோம்..

இரண்டு விட்ட உறவினரின் உதவியுடன் தில்லியில் சென்று இறங்கியவுடன் ரிசர்வ் போலீஸ் ஜீப் அழைத்துச்சென்று ரிசர்வ் குவார்ட்ரஸில் ரெஸ்ட் எடுத்தோம். அதிகாரிகளின் விருந்தினர் என்ற முறையில் சூடான உணவு. ஒரு ரிக்‌ஷாவில் ஏறி டில்லியை சுற்றி ஒரு பகல் தங்கி இரவு ஷாலிமார் ரயிலில் ரிசர்வ்செய்தும் ரிசர்வ் கம்பார்ட் மெண்டில் ஏறிய கட்டுக்கடங்காத கூட்டத்திற்கிடையில் பயணித்து ஜம்மு அடைந்து பாதுகாப்புடன் உறவினரின் குவார்ட்டசை அடைந்தோம். 

தொடரும்




No comments:

Post a Comment