🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு - 27 🌹🌹🌹
துவாரகைக்கு நிகரான தலம்!!! கிருஷ்ணன் பாமா, ருக்மணியுடன் தம்பதி சமேதராக காட்சி தரும் திருத்தலம்!!! சத்தியபாமாவிற்காக கண்ணன் இந்திர லோகத்திலிருந்து பாரிஜாத மலரைக் கொண்டுவந்த திருத்தலம்!!!!
அருள்மிகு கோபால கிருஷ்ணன் திருக்கோவில் :-
மூலவர்: கோபால கிருஷ்ணன், இராஜ கோபாலன்
தாயார்: மடவரல்மங்கை, செங்கமல நாச்சியார்
உற்சவர்: கண்ணன், இராஜகோபாலன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சுயம்பு விமானம்
தீர்த்தம்: தடமலர்ப் பொய்கை
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ மடவரல்மங்கை ஸமேத ஸ்ரீ கோபாலக்ருஷ்ணாய நமஹ.
ஊர்: திருநாங்கூர்
🌺🌺 திருக்காவளம்பாடி பெயர்க் காரணம் :-
ஆயர்பாடியிலே ஆனந்தமாய் வளர்ந்து அற்பூத லீலைகள் பல செய்த வேணுகோபாலனான பகவான் கண்ணபரமாத்மா அன்னையர்களான பாமா ருக்மணியுடன் இங்கு கோவில் கொண்டு அருள்கிறார்.
அக்காலத்தில் இத்தலத்தின் அமைவிடம் பூச்செடிகள் நிறைந்து பூஞ்சோலையாக காட்சி தந்தது. இன்றும் அவ்வாறே காட்சி தருகிது. "காவளம்" என்ற சொல்லுக்கு "பூஞ்சோலை" என்பது பொருள்.
ஆயர்பாடி கண்ணன் இங்கு வந்து கோவில் கொண்டதால் இவ்விடத்திற்கு "திருக்காவளம்பாடி" என்று பெயர்.
இங்கு பாமா, ருக்மணியுடன் தம்பதி சமேதராக கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கிறார் கோபால கிருஷ்ணன்.
🌺🌺 தலவரலாறு :-
கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசூரனை அழித்தான். இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களைஅவர்களுக்கே மீட்டுக்கொடுத்தான்.
வெகுநாளைக்குப் பின்பு இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுத்தான்.
எனவே, சினம் கொண்ட கண்ணன் இந்திரனுடன் போரிட்டு அவனது காவளத்தை அழித்தான். பின் தான் இருக்க "காவளம்" போன்ற பொழிலைத் தேடினான். இந்த காவளம்பாடியில் நின்று விட்டான்.
🌺🌺 சிறப்புகள் :-
துவாரகாபுரியிலிருந்து கண்ணபிரான் சத்தியபாமாவுடன் இங்கு வந்ததால் இத்திருத்தலம் துவாரகைக்கு நிகரான தலம்.
காவளம் என்னும் சொல்லிற் கொப்ப அழகிய பொழில்கள் சூழ்ந்து துவாரகாபுரியைப் போலவே செழித்து திகழ்கிறது.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம்
செய்யப்பட்டுள்ளது. மடல்வரல்மங்கை என்ற தாயாரின் திருநாமத்தையும் சேர்த்து இங்கு மங்களாசாசனம் செய்திருக்கிறார் திருமங்கையாழ்வார்.
திருநாங்கூரில் நடைபெறும் புகழ் பெற்ற 11 திருத்தல கருட சேவைக்கு இந்த துவாரகாபுரி நாதனும் எழுந்தருள்வார்.
🌺🌺 மடவரல்மங்கை :-
இத்திருக்கோவிலில் உள்ள நாச்சியாரின் திருநாமம் இனிக்கும் தமிழ்ச் சொல்லான “மடவரல் மங்கை” என்பதாகும். இதனைத் திருமங்கையாழ்வார்,
படவரவுச்சி தன் மேல்
மடவரல் மங்கை தன்னை
மார்வகத் திருத்தினானே
என்று பாடியுள்ளார்.
🌺🌺 மங்களாசாசனம் :-
""ஏவிளங் கன்னிக் காகி
காவளம் கடிதிறுத்துக்
கற்பகம் கொண்டு போந்தாய்
பூவளம் பொழில்கள் சூழ்ந்த
புரந்தரன் செய்த நாங்கை
காவளம் பாடி மேய
கண்ணனே களை கனீயே!""
- திருமங்கையாழ்வார்.
🌺🌺 வழித்தடம் :-
சீர்காழி - பூம்புகார் சாலையில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். திருநாங்கூரிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
அருள்மிகு கோபால கிருஷ்ணன் திருவடிகளே சரணம்.
அருள்மிகு செங்கமல நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு திரிவிக்கிரம நாராயணர் திருக்கோவில் - சீர்காழி என்ற காழிச்சீராமவிண்ணகரம் திருக்கோவிலைத் ததரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:"
No comments:
Post a Comment