Tuesday, October 27, 2020

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்

 கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் காஞ்சி மகா பெரியவா நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய "விஜயதசமி அன்னிக்கு அக்ஷராப்யாசம் செய்யணும் .நவராத்திரியின்போது,வீட்டை விட்டு வர முடியாது. பெரியவா அனுக்ரஹம் செய்யணும். குழந்தைக்கு படிப்பு நன்றாக வரணும்.

.பெரியவா...! ஏதாவது ஒரு வார்த்தைகுழந்தைக்கு சொல்லிக் கொடுக்கணும்"

(வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்.-ஔவை பாட்டி பாடிய பாட்டை சொல்லச் சொன்ன பெரியவாளின் தமிழ்ப் பற்று)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஐந்து வயதுக் குழந்தையுடன் வந்து பெரியவாளைநமஸ்காரம் செய்தனர் தம்பதியர்.

"விஜயதசமி அன்னிக்கு அக்ஷராப்யாசம் செய்யணும்.. நவராத்திரியின்போது,வீட்டை விட்டு வர முடியாது. பெரியவா அனுக்ரஹம் செய்யணும்.குழந்தைக்கு படிப்பு நன்றாக வரணும்.." என்று தம்பதியர் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

தகப்பனார், மிகவும் பவ்யமாக, "பெரியவா...! ஏதாவது ஒரு வார்த்தை. குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கணும்" என்று குழைந்தார்.

பெரியவர் குழந்தையைத் தன் அருகில் அழைத்தார்கள்.

"சொல்லு...வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்..நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. இது ஔவை பாட்டி பாடினது,தெரியுமா? தினம் சொல்லு.." என்று கூறிக் கல்கண்டு கொடுத்து அனுப்பினார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சில தமிழறிஞர்களும் இருந்தார்கள். பெரியவர் வட மொழியின்பால் பெரும்பற்றுக் கொண்டவர்கள் என்ற கருத்து பரவியிருந்ததால் (மூஷிக வாஹன... என்பது போன்ற) ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தைச்  சொல்லிக் கொடுப்பார்கள்    என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, 'வாக்குண்டாம்...' என்றுதிருவாய்  மலர்ந்தருளியதால் தமிழறிஞர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

"இது எங்களுக்கு ஓர் உபதேசம் மாதிரி; இனிமேல் எங்கள் வீடுகளில் வாக்குண்டாம்தான் முதல் பாடம்" என்று உள்ளார்ந்த பூரிப்புடன் பெரியவர்களிடம் தெரிவித்துக் கொண்டார்கள்

ஜெயஜெய ஸங்கர..

ஹரஹர ஸங்கர..

ஶ்ரீஶ்ரீஶ்ரீ மஹாபெரியவா திருவடித் தாமரைகளே ஸரணம்..

குருவின் குரல்

உன் அன்புக்கு ஈடு உண்டோ இந்த உலகில் என்பது எங்களுக்கு மிக நன்றாக தெரியும்

இதைத் தவிர எதுவும் சுகமில்லை என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்

ஓம் ஸ்ரீ மஹாபெரியவா திருவடிகளே சரணம் 

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.

No comments:

Post a Comment