🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 25🌹🌹🌹
காடு என்னும் ஈற்றடி வரப்பெற்ற திவ்யதேசம். சந்திரன் சாப நிவர்த்தி பெற்ற தலம். ஆழ்வார்கள் எம்பெருமானின் அழகைப் போற்றும் தலம்.
அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோவில் :-
திருச்சலைச்சங்க நாண்மதியம் (தலைச்சங்காடு).
மூலவர்: நாண்மதியப் பெருமாள், வெண்சுடர்ப் பெருமாள்
உற்சவர்: வியோமஜோதிபிரான், வெஞ்சுடர் பிரான், லோகநாதன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சந்திர விமானம்
தீர்த்தம்: சந்திர புட்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார் ஸமேத ஸ்ரீ நாண்மதியம் ஸ்வாமிநே நமஹ
ஊர்: தலைச்சங்காடு
🌺🌺 தலவரலாறு:-
மாலவனாக, மதுசூதனாக விளங்கும் இறைவன் நாராயணன், சந்திரனுக்கு சாபம் தீர்த்த தலமாக இத்தலத்தைப் பற்றிப் பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.
அக்காலத்தில் இவ்வூர் தலைச்சங்காடு எனப் பெயர் பெற்று விளங்கியது. "மதி" என்பதற்கு "சந்திரன்" என்பது பொருள்.
சந்திர பகவான் வரம் பெற்ற தலம் ஆதலால் "தலைச்சங்க நாண்மதியம்" எனப் பெயர் பெற்றது.
மேலும், சிவபெருமானைப் போல சந்திரனை தலையிலௌ சூடியுள்ளமையால் "நாண்மதியப் பெருமாள்" என்ற திருநாமம் பெற்றார்.
🌺🌺 சிறப்புக்கள்.
இவ்விடத்தில் எம்பெருமானுக்கு அமைந்துள்ள பெயர் மிகவும் ஆழ்ந்து ரசிக்கத்தக்கதாகும். எம்பெருமானின் திருமுகத்தை தண் என்னும் சந்திர ஒளிக்கு உவமானமாக ஆழ்வார்கள் பகிர்ந்துள்ளனர்.
சந்திரனின் சாபம் தீர்த்ததால் பெருமானுக்கு இப்பெயர் உண்டாயிற்றென்றாலும், எம்பெருமானின் திருமுகவொளியும் நிலவொளி போன்றதென்று ஆழ்வார்கள் புகழவில்லையா?.
அதற்குத்தான் எம்பெருமானும் இப்பெயர் தோன்ற நின்றாரோ என்னவோ? ஆழ்வார்கள் எம்பெருமானின் திருமுகப் பொலிவில் மயங்கி நின்றதை இப்போது பார்க்கலாம்.
🌺🌺 ஆண்டாள் :-
" திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்” - என்றும்
- என்றும் ஆண்டாள் மயங்குகிறாள்.
🌺🌺 நம்மாழ்வார் :-
"நேமியும் சங்கும் இருகைக் கொண்டு
பால்மதியேந்தி, ஓர் கோல நீல
நன்னெடுங் குன்றம் வருவதொப்பான்".
- என்று நம்மாழ்வார் நயங்காட்டுகிறார்.
🌺🌺 பெரியாழ்வார் :-
"திருநீர்ச் சந்திரமண்டலம் போல
- என்று பெரியாழ்வார் பெரிதுபடுத்துகிறார்.
🌺🌺 திருமங்கையாழ்வார் :-
திருமங்கையாழ்வார் இத்தலத்தை 2 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
"சலம்பொதியுடம் பில் தழலுமிழ்ப் பேழ்வாய்ச்
மலர்ந்தெழுந் தணவி மணி வண்ண உருவில்
மால் புருடோத்தமன்", என்றும்
“வாணிலா முறுவல்” என்றும்
திங்களப்பு வாணெரி கா
லாகி திசை முகனார் தங்களப்பன்.
- என்று திருமங்கையாழ்வாரும் கொண்டாடுகிறார்.
இவ்வாறெல்லாம் எம்பெருமானைக் கதிர்களுக்கு உவமைப்படுத்தி சந்திர முகமாக ஆழ்வார்கள் கொண்டாடின அழகை தனக்குப் பெயராகவே சூட்டிக்கொண்டு திகழ்கிறார் இந்த "நாண்மதியார்".
சந்திர முகமாக ஆழ்வார்கள் கொண்டாடின அழகை தனக்குப் பெயராகவே சூட்டிக்கொண்டு திகழ்கிறார இந்த நாண்மதியார்.
🌺🌺 தலைச்சங்காடு :-
சங்க காலத்திலேயே இப்பகுதி பெரும் புகழ் பெற்றிருந்தது. அப்போது இந்நகரில் தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்டன. இன்றைய காவிரி பூம்பட்டிணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூர் பண்டைய நாளில் சங்கு வாணிகத்தில் தலைசிறந்திருந்தது.
இங்கு சங்குகள் குவித்துவைத்து விற்கப்பட்டதை சங்க நூல்கள் பரக்கப்பேசுகின்றன. இவ்விடத்தைச் சுற்றிலும் புரசமாக விளங்கியதால் (பலாச மரக்காடுகள் இருந்தமையால்) இவ்விடத்தைக் "காடு" என்று சுட்டினர்.
தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்ட இடமும், காடும் சேர்ந்து "தலைச்சங்காடு" ஆயிற்று. காடு என்னும் ஈற்றடி வரப்பெற்ற திவ்யதேசம் இது ஒன்றுதான்.
🌺🌺 வழித்தடம் :-
சீர்காழியிலிருந்து அண்ணன் கோவில் வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலையில் 15 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் சென்று அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் இத்திருக்கோவிலை அடையலாம். தலைச்சங்காடு என்றால் மட்டுமே அனைவருக்கும் தெரியும்.
அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு தலைச்சங்க நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில் - திருஇந்தளூர் (திருநாங்கூர்) திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:"
No comments:
Post a Comment