சிதம்பரம் கத்தரிக்காய் கொத்ஸு :
(side dish)
இட்லி, பொங்கல், அரிசி நொய் உப்புமாவுடன் தொட்டுக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:👇
கொத்ஸுப் பொடிசெய்ய தேவையான பொருட்கள்
*செய்முறை* : முதலில் கத்திரிக் காயை நறுக்கிக் கொண்டு, அதனை இட்லி தட்டில் எண்ணெய் தடவி 5 நிமிடம் வேக வைக்கணும்,
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள், சிவப்பு மிளகாய், கடலபருப்பு மல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி வைத்துபொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு வெந்த கத்திரிக்காயை மசித்துக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்கா யத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் புளிச் சாறு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அத்துடன் மசித்த கத்திரிக்காய், மிளகாய் மல்லி வறுத்து பொடி செய்தது மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு மற்றும் கறி வேப்பிலை சேர்த்து தாளித்து, கத்திரிக் காய் கலவையில் ஊற்றினால்,👇👆
சிதம்பரம் கத்திரிக்காய் கொத்ஸு ரெடி🌹
No comments:
Post a Comment