வாழ்வில் வசந்தம் தரும் சேலம் ஓமலூர் ஸ்ரீவசந்தீஸ்வரர்
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில
2018 வாக்கில் வீட்டு சூழ்நிலை மன நிலை ரொம்ப கடினமான சூழ்நிலை வேலையும் பிடிக்கல இனி வாழ்வில் என்ன செய்வதுனு தெரியாமல் ஓமலூர் பகுதியில் சுத்திட்டு இருக்கும் போது ஒருவர் வசந்தீஸ்வரர் கோயில் போர்டு பாத்துட்டு அங்கு போய் உட்கார்ந்துட்டார்
அங்குள்ள இறைவனை வேண்டிகிட்டு ரொம்ப நேரம் அழுதது இன்னும் ஞாபகம் இருக்கு அந்த கோயில் அவர்க்கு ரொம்ப பிடிச்சு போச்சு அடிக்கடி போக ஆரம்பித்தார்
அடுத்தடுத்து பிரச்சினைகள் ஆயிரம் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் சக்தியை அவருக்கு இறைவன் கொடுத்தாராம்.
சுயத்தொழில் தொடங்கியதும் அந்த கால கட்டத்தில் தான்.அடுத்தடுத்த வருடங்களில் திருமணம் குழந்தை என்றாகி அடுத்த டுத்து அவர் வாழ்வில் வசந்தத்தை கொடுத்தார் இந்த வசந்தீஸ்வரர்
இந்த கோயிலில் தான் சரபங்க முனிவர் ஜீவசமாதி உள்ளது👆👆மேலே போட்டோவில் உள்ளது !!!
இவர் அருகில் ஒரு பெருமாள் கோயிலும் உள்ளது
ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு சரபங்க முனிவர் உதவியாக இருந்ததால் அவருக்கு வரம் அளித்ததாகவும் பௌர்ணமி அமாவாசை அன்று பகவான் ஸ்ரீராமர் பெருமாள் கோயில் வந்து காட்சி கொடுத்து அருள்பாலிக்கிறார்
எந்த கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு கோயில் பூட்டி இருந்தாலும் அம்மையையும் அப்பனையும் தரிசனம் செய்யும் வகையில் கட்டி உள்ளனர்
எனக்கு தெரிந்து பழமையான கோயில்களில் நவகிரகங்கள் அவரவர் மனைவிகளுடன் இருப்பது இந்த கோவில் தான்...
திருமண தடை நீங்க ,குடும்ப ஒற்றுமைக்கு சிறந்த தலம், விவாக ரத்து சூழ் நிலைக்கு போன திருமண தம்பதிகள் இங்கே வேண்டிக் கொண்டால் இணைவது கண் கூடாக நடக்கும் நிகழ்ச்சி !!!
இதில் என்ன ஒரு வேடிக்கை என்னவென்றால் ஓமலூரில் புகழ் பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் அருகில் தான் வசந்தீஸ்வரர் கோயில் மற்றும் பெருமாள் கோயில் உள்ளது நிறைய பேருக்கு தெரியவில்லை
13-ஆம் நூற்றாண்டு காலத்தில் கெட்டி முதலி மன்னர் வம்சாவளியினர் கட்டிய கோயில்கள்
சேலம் அருகே சிற்ப கலைக்கு புகழ் பெற்ற தார மங்கலத்தில் நடை பெற்ற கயிலாச நாதர், சிவகாமி அம்மன் திருமணத்திற்கு, இந்தப் பகுதியில் ஹோமம் வளர்த்ததாகவும், இதில் சரபங்க முனிவர் கலந்து கொண்டு ஹோமபூஜை செய்ததாகவும் தல வரலாறு கூறுகிறது.
சேலத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் வடமேற்கு திசையில் *சரபங்கா நதியோரம்* ( *இங்கு கோவிலை ஒட்டி ஒரு நதி இன்றும் ஒடுகிறது . அதற்கு அந்த முனிவர் சரபங்க ரிஷியின் பெயர் தான்* ) இருக்கிறது
இங்குள்ள ஓமலூர் கோட்டை. இது 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கெட்டி முதலி வம்ச மன்னரான வணங்கா முடி என்பவரால் எழுப்பப்பட்டதாக கருதப்படுகிறது.
இந்தக் கோட்டையில் தான் வசந்தீஸ்வரர், விஜயராகவ பெருமாள், கோட்டை மாரியம்மன் கோவில்கள் உள்ளன.
கி.பி.1641 முதல் கி.பி.1768 வரை நடந்த தொடர் போர்களால் கோட்டை சிதைவுற்றது.
வசந்தீஸ்வரர் கோவிலும், விஜயராகவ பெருமாள் கோவிலும் மட்டுமே தற்போது கோட்டையின் சின்னங்களாக விளங்கிக் கொண்டிருக் கின்றன. இது ஒரு சித்தர் வாழ்ந்த பூமி :
நீங்களும் சென்று வாருங்கள் உங்கள் வாழ்விலும் நிச்சயம் வசந்தம் தருவார் வசந்தீஸ்வரர் !!!
Written & Compiled by
M.S.Ramesh - Salem
Mob - 8754780924
No comments:
Post a Comment