சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!
சிக்ஸ் பேக்' சத்து மாவு
தேவை : கம்பு, ராகி, தினை அரிசி, சாமை அரிசி, குதிரைவாலி அரிசி, வரகு அரிசி - தலா ¼ கப், பாதம், முந்திரி - தலா 2 டீஸ்பூன்.
செய்முறை: முந்திரி, பாதாம் தவிர மற்றப் பொருட்களை வெறும் வாணலியில் போட்டுத் தனித் தனியாக மிதமான தீயில், நன்கு வறுத்து எடுக்கவும். பாதாம், முந்திரி சேர்த்து, மிக்சியில் நைசாக அரைக்க 'சிக்ஸ் பேக்' சத்து மாவு தயார்.
கஞ்சிக் காய்ச்சும் போது, ஒரு டீஸ்பூன் மாவுக்கு, கால் கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். அடுப்பில் வைத்துக் கூழ் போல் கிளறவும். பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய்ப் பொடி போட்டு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பெரியவர்கள் நன்கு ஆறியவுடன் மோர், உப்பு பெருங்காயம் சேர்த்துப் பருகலாம்.
சுவையான 'சிக்ஸ் பேக்' ஹெல்தி பானம் இது!
No comments:
Post a Comment