வசந்த காலம் வருமோ?-100
By N Krishnamurthy
எல்லோரிடமிருந்துவிடைபெற்றுக்கொண்டு, மார்கபந்து குடும்பத்தினர் வீடு திரும்பினார்கள்.
ஒருவாரம் அவர்களுடனே தங்கியிருந்த சபேச ஐயரும், மரகதமும் முறையே கும்பகோணத்திற்கும்,காஞ்சிபுரத்திற்கும் திரும்பினார்கள். அவர்கள் இருவரும் சங்கர க்ருஷ்ணன் கல்யாணத்திற்கு பிறகு தங்களுடனே இருந்து விடுமாறு ராஜேஸ்வரி கேட்டுக்கொள்ள,
சபேச ஐயர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.ஆனால் மரகதம் மாற்றி மாற்றி, மூணு மாதம் அவர்களுடனும்,மூன்று மாதம் காஞ்சிபுரத்தில் இருக்கப் போவதாகவும் கூறினாள்.
அந்த சீசனில் ம்ருதுளாவிற்கு ஐந்து கச்சேரிகளும், சங்கர க்ருஷ்ணனுக்கு நான்கு கச்சேரிகளும் கிடைத்தன. இதில் ஒரு ம்ருதுளா கச்சேரிக்கு சங்கர க்ருஷ்ணன்தான் வயலின். சங்கர க்ருஷ்ணன் வாய்பாட்டில் மெருகு ஏறி வருவதாக சுப்புடு மற்றும் S .V.K போன்ற விமர்சகர்கள் எழுதினார்கள். அவன் கச்சேரிகளில் நிறைய தீக்ஷதர் கிருதிகள் இடம் பெற்றன. ஒவ்வொரு கச்சேரிக்கும் 'டிப்ஸ் எடுத்துக்கொள்கிறேன்' என்ற சாக்கில் ம்ருதுளாவை அடிக்கடி சந்தித்தான்.ம்ருதுளாவும் இதை ரசித்தாள்.
ஜனவரி இருபது தேதிக்கு மார்கபந்து, ராஜேஸ்வரி,சங்கர க்ருஷ்ணன் மூவரும் அமெரிக்கா கிளம்பினார்கள். ஏர்போர்ட்டுக்கு சாரங்கன், மைதிலியுடன் சென்றிருந்த ம்ருதுளா அவனுக்கு பிரியா விடை கொடுத்தாள். அவளிடம் பேசிவிட்டு டெர்மினல் உள்ளே சங்கர க்ருஷ்ணன் சென்ற போது இருவர் கண்களும் கலங்கிப் போனது.
திட்டமிட்டபடி எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு மார்கபந்து குடும்பம் ஏப்ரல் பதிமூன்றாம் தேதி சென்னையை அடைந்தனர். அவர்களை ஏர்போர்ட்டுக்கே சென்று
சாரங்கன் குடும்பம்,ம்ருதுளாவையும் சேர்த்து, வர வேற்றது. ம்ருதுளாவின் கண்கள் அவன் மேல் ப்ரேமையை பொழிந்தன.
இரு வீட்டாரும் தனித்தனியே பத்திரிக்கை அடித்தனர்.கிட்டிய சொந்தங்களுக்கு நேரில் சென்று, பத்திரிக்கை கொடுத்து அழைத்தும்,மற்ற சொந்தகளுக்கு போஸ்டும் செய்தனர்.
மார்கபந்து, ராஜேஸ்வரி, சங்கர க்ருஷ்ணன் ஆகியோர் காஞ்சிபுரம் சென்று புது பெரியவரிடம் பழங்களுடன், பத்திரிக்கையை வைத்து நமஸ்கரித்தனர்.
பத்திரிக்கையை படித்தவர்" ஒஹோ. அத்வைதத்தோட த்வைதம் இணையறதோ "என்று சொல்லி சிரித்து விட்டு பின்னர் பிரசாதம் வழங்கினார்.
மாமியாரையும்,மைத்துனர்குடும்பத்தையும் பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்திற்கு அழைத்த ராஜேஸ்வரியுடன் மார்கபந்துவும் கலந்து கொண்டார். மாலை பச்சையப்பா சில்க்ஸுக்கு சென்று, பலவித டிசைன்களை பார்வையிட்டு,கல்யாணத்திற்கு வேண்டிய மொத்த புடவைகளுக்கு ஆர்டர் கொடுத்து,பத்து பர்சன்ட் அட்வான்சும் கொடுத்தனர்.
மாமியாரை தங்களுடனே சென்னை வந்துவிடுமாறு ராஜேஸ்வரி கேட்டுக் கொள்ள, மரகதம் ஒரு சூட்கேசில் தன் துணிமணிகளை திணித்துக்கொண்டு அவர்களுடனே கிளம்பினாள்.இரவே நால்வரும் சென்னை திரும்பினர்.
ஏப்ரல் முப்பதாம் தேதி வசுமதிக்கு ப்ரசவம் ஆனது. சிசேரியன் தான். ஸ்ரீவத்சன், வசுமதி எதிர் பார்த்தாற்போல் ஆண் குழந்தையே பிறந்தது. புண்யாகவாசனத்திற்கு சாரங்கன் குடும்பத்துடன், ராஜேஸ்வரி குடும்பமும்
மதுரைக்கு சென்று கலந்து கொண்டது. ருக்மணியும், அவள் கணவரும் சாரங்கன் சஷ்டிஅப்த பூர்த்திக்கு வந்தவர்கள், பத்மநாபனுடன் மதுரைக்கு சென்றிருந்தார்கள்.
வசுமதி, சங்கர க்ருஷ்ணன் கல்யாண விஷயத்தில் செய்த மாபெரும் உதவியை பாராட்டும் விதமாக குழந்தைக்கு தங்க சங்கிலியை அணிவித்தாள் ராஜேஸ்வரி. ரங்க நாயகி இதையெல்லாம் கண்டு ராஜேஸ்வரி மேல் பெரு மதிப்பு கொள்ள ஆரம்பித்தாள்.
குழந்தைக்கு *மதுசூதனன்* என்று பெயரிடப்பட்டது.
முதலில் ம்ருதுளா,சங்கர க்ருஷ்ணன் கல்யாணத்திற்கு ரங்கநாயகி, பத்மநாபன்,வசுமதி,ருக்மணி , அவள் கணவர் ஆகியோர்
மதுரையில் இருந்து நேராக கோயம்புத்தூர் வந்து விடுவதாக கூறினர். இதே போல ஸ்ரீ வத்சனும் தன்னுடைய பெற்றோர்களையும் அழைத்துக் கொண்டு திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் வருவதாக கூறினான். ஆனால் ராஜேஸ்வரி மிகவும் வற்புறுத்தியதின் பேரில் இவர்கள் அனைவரும் சென்னைக்கு வந்து விடுவதாகவும், எல்லோரும் ஒன்றாக கோயம்புத்தூர் மற்றும் குருவாயூர் சென்று விடலாம் என்றும் ஒத்துக் கொண்டார்கள்.
இதற்கிடையில் ஒரு நாள் மார்கபந்து ராஜேஸ்வரி, மைதிலி, சாரங்கன் ஆகியோர் ஒரு டாக்ஸியில் குருவாயூர் போய் சேர்ந்தார்கள். பத்மநாபனும், ரங்கநாயகியும் மதுரையிலிருந்து நேராக குருவாயூர் வந்து விட்டிருந்தார்கள். எல்லோரும் அங்குள்ள கல்யாண மண்டபங்களை பார்த்து அதில் உள்ள மிகச் சிறந்த கல்யாண மண்டபமான ருக்மணி கல்யாண மண்டபத்தை புக் செய்து, மார்கபந்து அட்வான்ஸ் கொடுத்தார். குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்த கோவிலைச் சேர்ந்தவர்களிடம் மே 27ஆம் தேதி கல்யாணம் பற்றி குறிப்பிட்டு அன்று மாப்பிள்ளை பெண்ணிற்கு ஸ்பெஷல் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து செய்தார்கள்.
அன்றைய அன்னதானத்திற்குரிய கட்டணத்தை ராஜேஸ்வரி கட்டினாள். கோவில் தேவஸ்தானத்தை சேர்ந்தவர்களிடம் ஆலப்புழாவை சேர்ந்த பிரபல வித்வான் திருவிழா ஜெய்சங்கரின் போன் நெம்பரை வாங்கிய ராஜேஸ்வரி அங்கிருந்தே அவரிடம் பேசி கல்யாணத்திற்கு அவர் கோஷ்டியை நாதஸ்வரத்திற்கு ஏற்பாடு செய்தாள்.
கோவிலை அடுத்துள்ள கடைகளில் கல்யாணத்துக்கு வேண்டிய பூமாலைகளை பற்றி ராஜேஸ்வரி விஜாரிக்க, கல்யாணத்திற்கு முதல்நாள் ஆர்டர் செய்தால் போதும் என்று தெரிந்தது. மறக்காமல் மம்மியூர் மகாதேவனை வழிபட்டு திரும்பினர்.
அடுத்த பத்து நாட்களில் ராஜேஸ்வரியும், மார்கபந்துவும் பம்பரமாக சுழன்றார்கள். ஏற்கனவே ராஜேஸ்வரியின் தம்பியும்,தங்கையும் வந்து விட்டிருந்ததால் அவர்களும் சில வேலைகளை எடுத்துப்போட்டுக்கொண்டு செய்தனர்.
பலமுறை பர்சேசுக்காக வெளியில் செல்ல வேண்டி இருந்தது.
சமையலுக்கும்,சீர் பக்ஷணங்களுக்கும் ஞானம்பிகா கேட்டரிங்கை ஏற்பாடு செய்தாள் ராஜேஸ்வரி.
கேட்டரிங் கோஷ்டி, கல்யாணத்திற்கு இரண்டு நாள்முன்பு, காலையில் வேனை வைத்துக்கொண்டு குருவாயூர் கல்யாண மண்டபத்தை அன்று மாலைக்குள் அடைந்து விடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment