நவ பிருந்தாவனம்- 2
By Ramesh
ஆனேகுந்தி .👇
ஸ்ரீ ராகவேந்திரரின் மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் பயணம் செய்து நவபிருந்தாவனம் இருக்கும் ஆனே குந்தி (anegondi) பகுதிக்கு செல்ல வேண்டும்.
அதன்பின் படகு பயணம். துங்க பத்திரா நதிக் கரையின் நடுவே ஒரு ரம்யமான தீவை போல் காட்சியளிக்கும் அழகும், தெய்வீகமும் நிறைந்த பகுதியாக இந்த நவ பிருந்தாவனம் பகுதி இருக்கிறது.
இந்த பகுதியில் உள்ள மலைகளை துண்டு துண்டு களாக நம் ஆஞ்ச நேயர் சிறு வயதில் தன் கதையால் அடித்து அடித்து விளையாடி மலைக்கு மலை தாவி விளையாடிய இடம் இது ..
ஆதலால் மலைகள் அனைத்தும் சிறுசிறு பாறை துகள்களாக காட்சி அளிக்கின்றன.
துங்கபத்ரா நதி அதிக ஆழம் கொண்டுள்ளதால் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ள காரணத்தால் படகில்தான் நவ பிருந்தாவனம் செல்லமுடியும்.
துங்கபத்திரா நதியின் நடுவே அமைந்திருக்கும் இந்த மணற்திட்டு சுமார் 300 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கார்பன் டேட்டிங் ஆய்வுகள் சொல்கிறது.
அதாவது 30 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
அதீத அதிர் வலைகளை தன்னகத்தே கொண்ட ராகவேந்திரரின் 9 குருமார்களது ஜீவசமாதிகளை அங்கே நாம் தரிசிக்கலாம்.
ராகவேந்திர சுவாமியை நமக்கு தந்தருளிய ஸ்ரீ ராகவேந்திரரின் குரு சுதீந்திர தீர்த்தர் முதலான 9 மகான்கள் துங்கபத்திரா நதிக்கரையின் நடுவே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள்.
துங்கபத்திரா வின் நடுவே👇
1] பள்ளிகொண்ட அரங்கநாதர்
2] ஹனுமார் கோவில்
ஆகிய இரண்டு கோவில்கள்
மற்றும் ஒன்பது மகான்களின் ஜீவசமாதிகள்
துங்கபத்திரை நதியில் மிக ஜாக்கிரதையாக நீராடியும் நாம் தரிசனத்தை ஆரம்பிக்கலாம்.
நவபிருந்தாவனத்தில் முதன்மையாக ஸ்ரீ அரங்கநாதர் அருள்பாலிக்கிறார்.
அரங்கநாதர் சன்னதியும், ஜாக்ரதை அனுமன் சன்னதியும் சிறிது உயரமாக அமைந்துள்ளதால் படியேறி சென்றால்
பாம்பணையில் யோக நித்திரையில் உள்ள அரங்க நாதரை சேவிக்கலாம்.
இம்மூர்த்தத்தின் ஒரு தனி சிறப்பு பெரிய பிராட்டியார் ஆதிசேஷனில் அமர்ந்து சேவை செய்யாமல் கீழே நின்று சேவை செய்யும் வண்ணம் அமைந்துள்ளது.
இச்சன்னதியின் அருகே ஜாக்ரதை அனுமனின் சன்னதி உள்ளது.
இச்சன்னதியில் அனுமன் இராவணனின் மகன் அக்ஷய குமாரனைத் தன் காலில் இட்டு வதம் செய்யும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
இந்த இரண்டு சன்னதிகளுக்கு இடையில் ஒரு குகை உள்ளது
இந்தக் குகையில் அமர்ந்து நாம் தியானம் செய்யலாம்
பின்னர் மகான்களை 11 தடவை வலம் வந்து நமஸ்காரம் செய்யவேண்டும்.
வியாச ராஜ தீர்த்தருக்கு எதிர் பக்கம் இருந்து நமஸ்காரம் செய்தல் வேண்டும்.
நவ பிருந்தா வனத்தை சுற்றி இடப்பட்டுள்ள மஞ்சள் கோட்டிற்கு வெளியே வலம் வர வேண்டும்.
பின்னர் அவதார த்ரய ஹனுமான் சன்னதி சென்று அவரை வணங்க வேண்டும்.
அவதாரத்ரய ஹனுமான்👇
மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த ஹனுமான் இவர். ஸ்ரீ வாயு பகவான் த்ரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக ஸ்ரீ அனுமனாகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய் வதற்காக ஸ்ரீ பீமனாகவும், இக்கலியுகத்தில்
ஸ்ரீ வியாச சேவை செய்ய ஸ்ரீமத்வ ராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங் களும் ஒன்றாக இனைந்தவர்தான் அவதாரத்ரய ஹனுமான்.
ஹனுமன் முகமும், பீமனை குறிக்கும் புஜங்களும், மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார்.
இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸ ராஜர் பிரதிஷ்டை செய்தார்.
பட்டர் ஒருவர் அங்கே காலை முதல் மாலை வரை இருக்கிறார்.தினமும் பட்டர் நவபிருந்தா வனத்தில் நவ பிருந்தாவனங் களுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்து பின்னர் மாலை திரும்பி செல்வார்.
மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் போது நவபிருந்தா வனத்திற்கு பட்டர் செல்ல முடியாது அப்போது ஆற்றின் இக்கரையிலிருந்தே கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.
பட்டர் பக்தர்களுக்காக இறைவனுக்கு சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து அட்சதையால் ஆசிர்வாதமும் செய்கிறார்.
மேலும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.....2
No comments:
Post a Comment