இப்படி ஒரு பூரி : இதுக்கு முன்னாடி சாப்பிடிருக்க மாட்டீங்க
ஷாஹி பட்டுரா, இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – ஒரு கப்
மைதா மாவு – அரை கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்- அரை டீஸ்பூன்
ஈஸ்ட்
ஓமம்- தலா ஒரு டீஸ்பூன்
மோர்- 1 ½ கப்
சூடான பால் – அரை கப்
எண்ணெய்
உப்பு
செய்முறை: முதலில் ஈஸ்ட்டை இளம் சூடான பாலில் போட்டு பொங்கி வரும் வரை வைக்கவும். பின் இந்த கரைசலுடன் கோதுமை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, ஓமம், மோர், உப்பு சேர்த்து பிசையவும். சிறிது நேரம் ஊற வைத்தால் பொங்கி வரும். பின்னர் மாவை எடுத்து சற்று கனமாக பூரிகளாக இட்டு எண்ணெய்யில் பொரிக்கவும்.
No comments:
Post a Comment