நவ பிருந்தாவனம் -3
By Ramesh
"அவர்கள் அனுமதித்தால் மட்டுமே அவர்களை நாம் தரிசனம் செய்ய முடியும் ..."
ஒன்பது மத்வ மஹநீயர்கள் ஒரே இடத்தில் வெவ் வேறு கால கட்டத்தில் ஜீவ பிருந்தாவனத்தில் அமர்ந்து அவர வர்களின் பிருந்தா வனத்தை தேர்ந்தெடுத்து நடுவில் வியாச ராஜர் ப்ருந்தா வனஸ்தராகி அருள் பாலித்து கொண்டிருக்கும் இடம் தான் நவ பிருந்தாவனம்
..கர்நாடக மாநிலத்தில் கொப்பல் மாவட்டத்தில்,கங்காவதி தாலுகாவில் அமைந்து இருக்கும் மிக அமைதியான கிராமமான ஆனேகுந்தியில் நாற்புறமும் துங்கபத்திரா நதி சூழ நடுவில் ஒரு தீபகற்பத்தில் இருக்கிறார்கள் ஒன்பது மத்வ மஹநீயர்கள்
வெட்ட வெளியில் மேற் கூரைகள் ஏதுமின்றி ப்ருந்தா வனஸ்தர்களாக இருக்கிறார்கள் .
.அவர்களின் நடுவில் ஸ்ரீ கிருஷ்ணதேவ ராயரின் குல குருவாக இருந்த ஸ்ரீ வியாசராஜர் நடுநிலையில் ப்ருந்தாவனஸ்தராக இருக்கிறார்
அவரை சுற்றிலும் 8 மத்வ மஹான்கள் ஜீவ பிருந்தா வனத்தில் அமர்ந்து உள்ளார்கள் .
.ஸ்ரீ ஹனுமான் அவர்களுக்கு எதிரே ஒரு புஸ்தகத்தை படித்து கொண்டு அமர்ந்த கோலத்திலும் , ஸ்ரீ ரங்கநாதர் சயன கோலத்தில் மற்றோரு புறமும் , இன்னொரு இடத்தில் ஸ்ரீ ஹனுமான் சனீஸ்வரனை காலில் மிதித்து கொண்டு தனி சன்னதியில் இருக்கிறார் .
..சரி எப்படி செல்வது நவ ப்ருந்தாவனத் திற்கு ?
பெரும்பாலான இணைய தளங்களில் சொல்வது எல்லாம் ஹோஸ்பேட் ரயில் நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டும் என்று தான் கூறுவார்கள் .
.அதுவும் சரிதான் ஆனால் எளிதாக எப்படி செல்ல வேண்டும் ?
1)திருப்பதியிலிருந்து தினமும் கோல்ஹாப்பூர் வரை செல்லும் ஹரி பிரியா எக்ஸ்பிரஸில் இரவு 9 மணிக்கு கிளம்பினால் மறுநாள் காலை 5 மணிக்கு ஹோஸ் பெட் ரயில் நிலையத்தில் அடைந்து விடலாம்
..2) இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் ஆந்திர மாநில குண்டக்கல் ரயில் நிலையத்திற்கு பல ரயில்கள் இருக்கின்றன ..
அவற்றில் தினமும் ஹோஸ்பெட் செல்லும் ரயில்கள் அமராவதி எக்ஸ் பிரஸ் 5.50 மணிக்கும் மற்றும் ஹம்பி எக்ஸ்பிரஸ் காலை 4.50 மணிக்கும் குண்டக்கல் வழியாக ஹோஸ் பெட் செல்கின்றன
இவற்றிற்கு ஏற்றபடி உங்கள் பயண திட்டத்தை அமைத்து இந்த ரயில்களில் நீங்கள் ஹோஸ் பெட் செல்லலாம்
சிறிது ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் ரயில் நிலைய தங்கும் அறையில் , பின்னர் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தால் தமிழர் திரு கணேஷ் என்பவர் வைத்திருக்கும் கணேஷ் பேக்கரியில் நல்ல காபியும் , டீ யும் கிடைக்கிறது ..
சாப்பிட்டு விட்டு ஒரு ஆட்டோவில் ரூ 50 கொடுத்தால் ஹோஸ் பெட் பேருந்து நிலையத்தில் விடுவார்கள்
..அங்கிருந்து ஹுலிகே என்னும் இடத்திற்கு பேருந்து செல்கிறது 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிடைக்கிறது
..கட்டணம் ரூ 30- தூரம் நேரம் 30 நிமிடம் ..ஹுலிகே சென்ற பின் தவறில்லை வயிற்றிற்கு சிறிய உணவிடுங்கள் காலையில்.பின்னர் ஹுலிகேயிலிருந்து ஆனேகுந்தி வரை ஒரு பேருந்தில் மாறி செல்ல வேண்டும் 35 கி.மீ தூரம் , பயண நேரம் 45 நிமிடம் .
.அருமையான கிராம பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள தார் ரோட்டில் பயணம் .
.காலை நேர காற்றினை நுகர்ந்து செல்லலாம்
..நீங்கள் ஆனே குந்தியில் இறங்கியவுடன் 5 நிமிட நடையில் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தினை சென்றடையலாம்
..அங்கு தங்குவதற்கு 10 அறைகள் இருக்கின்றன ..
அதற்கு எதிர் புறம் துளசி கார்டன்-ல் தமிழ் அறிந்த ஒரு பிராமணர் தங்கும் வசதிகளையும் உணவு வசதி களையும் சேர்த்து அளிக்கின்றார்.
நீங்கள் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் பூஜை கட்டண விபரங்களை அறிந்து கொள்ளலாம்
காலை 6.30 மணிக்குள் பூஜைக்குரிய கட்டணங்களை செலுத்திவிட வேண்டும் ஏனெனில் காலை 7 மணிக்கு பூஜைக்கு பூஜாரிகள் கிளம்பி விடுவார்கள் .
. அவர்கள் தமிழ் பேசுகிறார்கள் உங்களது சந்தேகங்களை தமிழிலேயே தீர்ப்பார்கள்
ஸ்ரீ ராகவேந்திரா மடத்திலிருந்து 5 நிமிட தூரத்தில் படகு துறை உள்ளது மோட்டார் படகில் 15 நபர் வரை ஒரு முறை செல்ல முடியும்... 10 நிமிட பயணம் ரூ 30 கட்டணமாக வசூலிக்க படுகின்றது .
. ஒரு தீவின் கரையில் இறக்கி விடுவார்கள் அங்கு கடைகள் ஏதும் இருக்காது ...எனவே நீங்கள் பூஜைக்கு வேண்டிய சாமான்களை துளசி கார்டானிலோ அல்லது அருகில் அமைந்துள்ள கடைகளிலோ தான் வாங்கி கொள்ள வேண்டும் ....
..படகில் தீவினை அடைந்த நீங்கள் அங்கு பயணிக்கும் துங்கபத்ரா நதியில் குளிக்க வேண்டும் .
.அதன் பின்னர் உங்கள் ஈர துணிகளை அருகில் உள்ள பாறைகளில் காய போடலாம்
..நவ பிருந்தா வனத்திற்குள் நுழையும் போது ஆண்கள் மேலாடையை அணியக்கூடாது
பெண்கள் புடவை அல்லது நமது பாரம்பரிய உடைகளை அணிந்து வருவது நல்லது
..அமைதியாக இருக்கவேண்டிய இடம் ..
ஏனெனில் மாத்வ மஹான்கள் பிருந்தா வனத்தில் ஜீவனுடன் யோகத்தில் இருக்கும் இடம்
...பூஜாரிகள் அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகளை தினமும் கடை பிடிக்கிறார்கள் சுமார் 2 மணி நேரம் ஆகும்......
காண கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவே மனதை அலைய விடாமல் அமைதியாக உங்களது பிரார்த்தனைகளை சொல்லுங்கள் மனதில் ..
11 முறை மஞ்சள் கோட்டை தாண்டாமல் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும்
11 அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும் ..
அருமையான அருள் பாலிக்கும் தலம் தரிசனம் செய்து வாருங்கள் நவ பிருந்தாவனத்தில் ..
குறைந்த பட்சம் 60 நாட்களுக்கு முன்னரே உங்களது ரயில் டிக்கெட்டு க்களை பதிவு செய்வது நலம் ..
மேலும் சொல்கிறேன் ......4
No comments:
Post a Comment