Saturday, February 3, 2024

முற்பகல் செயின்..27

 முற்பகல் செயின்..27.

By N Krishnamurthy 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழி" ஐயா. அக்காவுக்கு கல்யாணம்" என்று கத்தினான். "சும்மா இருடா வாலு "என்று அவனை அன்புடன் தட்டிக் கொடுத்தாள் தேன்மொழி.

" சரி எல்லோரும்  குளித்துவிட்டு வந்து விடுங்கள்.சாப்பாடு தயார் பண்ணி விடுகிறேன்" என்றாள் பரமகல்யாணி. இதை கேட்ட ஆதித்யா " என்ன தேன்மொழி உன் குட்டு உடைந்து விட்டது. லீவுக்கு வந்தா நீ தான் சமைப்பேன்னு சொன்ன. இப்போ உங்க அம்மா சமையல் பண்ண போறேன்னு சொல்றாங்க" என்று கேலி செய்தான். ஆதித்யாவிடம் பரம கல்யாணி " இல்லைங்க அவதான் சமைப்போ. நான் அவளுக்கு உதவியா இருப்பேன். அவ்வளவுதான்" என்றாள். 

"போதுமா" என்றாள் தேன்மொழி.

இதற்குள் கோமதியின் அண்ணன் சந்திரசேகரன், ஆதித்யாவை பார்த்து ஐந்சு கிலோமீட்டர்ல கல்லாறு இருக்கு. என் டூ வீலர்ல அங்க போய் குளிச்சிட்டு வந்துடலாமா" என்று கேட்டான்."நான் ரெடி" என்று சொன்னான் ஆதித்யா."நானும் வரண்ணா",என்று அருள்மொழியும் கிளம்பினான்.

அருள்மொழியை பார்த்து பரம கல்யாணி

 "ஆத்து கிட்ட பைய நடக்கணம். ஓடக்கூடாது"என்று அறிவுறுத்தினாள்.

அவர்கள் மூவரும் சந்திரசேகரின் மோட்டர் சைகிளில் கிளம்பினார்கள்.

செல்லும் வழி முழுவதும் பச்சை கம்பளம் போர்த்தியது போல் இருந்தது. பார்க்குமிடங்களெல்லாம் மலையும், வயலும் மட்டுமே இருந்தன..  வழி முழுவதும் பச்சை பசேல் என்ற வயல்கள், தென்னை மரங்கள், வாழை தோப்பு என இரு புறமும் பார்த்து வியந்து கொண்டே போனான் ஆதித்யா.

சுமார் 5  கிலோமீட்டர் சென்றதும் கல்லாறு கண்ணில் பட்டது. 

ஆற்றில் பாயும் பளிங்கு போன்ற நீரும், ஊடே தெரிந்த கூழாங்கற்களும்,

ஆற்றின் இரு மருங்கிலும் வஞ்சனையின்றி வளர்ந்திருந்த கோரைப் புல்லையும்,செடி கொடிகளையும் பார்த்த ஆதித்யா "My God. இதுதான் பூலோக சொர்கம் போல இருக்கு " என்றான்.

மூவரும் ஆற்றில் இறங்கி, துணிகளை துவைத்து, பின்னர் குளிக்கத் தொடங்கினார்கள்.

 நமச்சிவாயமும் கோமதியும் குளிப்பதற்கு,வீட்டின்  பின்பக்கம் இருந்த  தரை அடுப்பில், விறகையும், சுள்ளிகளையும் போட்டு எரித்து, ஒரு பெரிய அண்டாவில்  தண்ணீர் நிரப்பி வெந்நீர் தயார் செய்தார்கள். அரைமணியில் நமச்சிவாயமும், கோமதியும் குளித்து முடித்தனர்.

இதற்குள் ஆற்றிற்கு குளிக்க சென்றிருந்த மூவரும் திரும்பி வந்தனர்.

No comments:

Post a Comment