முற்பகல் செயின்..37
By N Krishnamurthy
அருள்மொழி முன்னால் ஓட, ஆதித்யாவும், தேன்மொழியும் பினால் நடந்து வேனுக்குத திரும்பினார்கள்.
வேன் கிளம்பியதும் ஆதித்யா எல்லோருக்கும் பழங்களை கொடுத்தான்.
வேன் செங்கோட்டையை அடைந்தது. ட்ரைவர் "டீ குடிச்சூட்டு போலங்களா"என்று கேட்டு ஒரு டீக்கடை அருகில் வேனை நிறுத்தினார்.
நமச்சிவாயம் " ஒரு காலத்தில் செங்கோட்டை கேரளாவிற்கு சொந்தமாக இருந்ததல்லவா"என்று சுப்ரமணிய பிள்ளையிடம் கேட்டார்.
அதற்கு சுப்ரமணிய பிள்ளை "1956 வரை கேரள மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து நாகர்கோவிலைச் சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் நாடார், சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது" என்றார்.
ஆறரை மணிக்கு வேன் கடையநல்லூரை அடைந்தது. இவர்களை வீட்டில் விட்டு விட்டு வேனை கிளப்பிச்சென்றார் வேன் ட்ரைவர்.
தேன் மோழியும்,பரம கல்யாணியும் இரவு பலகாரம் செய்வதற்கு முனைந்தார்கள்.
இரவு 8 மணி ஆனதும் இரவு உணவுக்காக எல்லோருக்கும் இலை போடலாம் என்றும் நினைத்த போது வாசலில் "சேகர்" என்ற குரல் கேட்டது. வாசலை எட்டிப் பார்த்துவிட்டு திரும்பிய பொற்கொடி சந்திரசேகரை பார்த்து "அண்ணா,உங்க பிரண்டு வள்ளிநாயகம் வந்து இருக்காரு"என்று கூறினாள். இதற்குள் வள்ளிநாயகமே வீட்டுக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்த சந்திரசேகர் அவரிடம் முகக் கொடுத்து பேச முற்படவில்லை. வள்ளிநாயகம் அவரிடம் "என்ன சேகர்,ரொம்ப கோவமா இருக்க போல" என்றார். அதற்கு சந்திர சேகர் "பின்ன என்ன பண்ண சொல்ற" என்றார்.
" இன்னைக்கு நடந்ததுக்கு நான் உன்கிட்ட சாரி கேட்டுக்கறேன்.நான் டிரைவரை வண்டி எல்லாம் கரெக்டா இருக்கான்னு பலமுறை கேட்டேன். வண்டி எல்லாம் கரெக்டா இருக்குன்னு அந்த மடையன் சொன்னத நம்பினன் பாரு,அது தான் தப்பா போச்சு. அவன் பேச்ச நம்பி தான் நான் உனக்கு வேனை அனுப்பி வச்சேன் .நான் பண்ண ஒரே ஒரு தப்பு வண்டியை நானே பார்க்காதது தான்" என்று கூறினார். அதற்கு சந்திரசேகர் " குற்றாலத்தில் நாங்க பார்த்து அனுபவிச்ச சந்தோஷம் எல்லாம் வண்டி கொடுத்த கஷ்டத்துல மறைஞ்சு போச்சு "என்றார் .வள்ளி நாயகம்" நிச்சயம் அப்படித்தான் இருந்திருக்கும். நான் என்ன செய்ய முடியும் சொல்லு .மன்னிப்பு ஒண்டி தான் கேட்க முடியும்" என்றார். இதற்குள் ஆதித்யா அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தபோது வள்ளிநாயகம் சந்திரசேகரை பார்த்து "சார் தான் தேன்மொழிக்கு பாத்திருக்கற மாப்பிள்ளையா" என்று கேட்டார் .சந்திரசேகர் ஆதித்யாவை வள்ளிநாயகத்திற்கு அறிமுகப்படுத்தினார். பின்பு ஆதித்யா வள்ளி நாயகத்திடம் " இதுல உங்க தப்பு ஒண்ணும் இல்ல. உங்க வேன் இல்லாம வேற வேனை எடுத்துட்டு போயிருந்தாலும் இப்படி ஆயிருக்க வாய்ப்பு இருக்கு"என்று கூறி அவரை தேற்றினான். பின்பு வள்ளி நாயகம் "நாளைக்கு என்ன செய்யப் போறீங்க" என்று கேட்டார்.அதற்கு சந்திரசேகர் சிரித்துக்கொண்டே " நாளைக்கு வேனில்லாமல்,நடந்து அருகில் ஏதாவது சுற்றி பார்க்கலாம் என்றிருக்கிறோம்" என்று கூறினார். இதற்கு வள்ளி நாயகம் "இன்று உங்களுக்கு ஏற்பட்டதற்கு பரிகாரமாக நாளை தயவு செய்து என் வேனையை எடுத்துக் கொண்டு மேக்கரை அடவி நயனார் டேமுக்கு சென்று வாருங்கள். நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒர்க் ஷாப்புக்கு போய் வேனையை விட்டுவிட்டு, எல்லாவற்றையும் சரி பண்ணி கொடுத்துடறேன். உனக்கு வேண்டுமென்றால் சொல்லு. நானே வேனை ஒட்டி வருகிறேன்" என்று சந்திரசேகரை பார்த்து கூறினார். இதை கேட்ட ஆதித்யா" அது என்ன அடவினை நயனார் டேம்" என்று கேட்டான். அதற்கு அதற்கு வள்ளிநாயகம் விளக்க கொடுக்க ஆரம்பித்தார்.
"மேக்கரை என்ற ஊருக்கு அருகில், அனுமந்த நதியை தடுத்து அடவி நயனார் அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த அணை தண்ணீர் கரிசல் குடியிருப்பு பண்பொழி, இலத்தூர், ஆய்க்குடி, கம்புளி, சாம்பவர்வடகரை, சுரண்டை பகுதி குளங்களுக்கு செல்லும்.
இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது.
இந்த அணை ஏன் கட்டப்பட்டது தெரியுமா?
செங்கோட்டை தாலுகா மேக்கரையில் 92 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் மழையின் காரணமாக எராளமான சேதங்கள், நிலச்சரிவு, உயிர் பலிகள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மேக்கரையில் தமிழக அரசு 132 அடி உயரத்தில் பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், வாவாநகரம், இடைகால், ஆய்க்குடி, சுந்தர பாண்டியபுரம், உள்ளிட்ட 10 ஊர்கள் நேரடியாகவும், மறைமுகமாக சில ஊர்களும் அப்பகுதியில் உள்ள மொத்தம் 15.ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெரும் விதம் அடவிநயினார் கோவில் அணையை கட்ட திட்டமிட்டு 1994 ஆம் ஆண்டு அதற்கான பணிகளையும் தொடங்கியது. 2002 ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது"என்று வள்ளி நாயகம் முடித்தார்.
பின்பு வள்ளிநாயகம் சந்திரசேகரை பார்த்து "என்னப்பா சேகர். கோபம் தீர்ந்ததா? நாளைக்கு அடவி நயினார் அணைக்கு போயிடலாமா" என்று கேட்டார். உடனே ஆதித்யா அவரிடம் "நீங்க வேனை ரெடி பண்ணிட்டு வாங்க. நீங்களும் எங்கள் கூட ஜாயின் பண்ணிக்கோங்க. டிரைவரா வேணாம். எங்க கூடவே ட்ராவல் பண்ணலாம்" என்று கூறினான். அதற்கு வள்ளிநாயகம் " நானே ட்ரைவ் பண்ணறேன். எனக்கு ஒரு ச்ரமும் இல்லை" என்றார். மறுநாள் அடவி நயினார் அணை கட்டிற்கு செல்வது என்று முடிவானது.
விடைபெற்றுக் கொண்டு திரும்பிப் போவதற்கு முன் வள்ளிநாயகம் பரமகல்யாணியிடம் "அம்மா.நீங்க மதியத்துக்கு மட்டும் ஏதாவது சாப்பிட கொண்டு வாங்க. காலைல நான் எங்க வீட்டம்மா கிட்ட சொல்லி ஏதாவது பண்ணி எடுத்துட்டு வந்துடுறேன்" என்று கூற,தேன்மொழி அவரிடம் "அண்ணே.அண்ணியையும்,வினோதினையையும் நாளைக்கு கூட்டிட்டு வாங்க" என்றவள் "வினோதினி பயங்கரமா அலத்றாலாமா, அண்ணன் சொல்லிச்சு"என்றாள்
(அலுத்துதல் என்பது பேசுவதற்கு திருநெல் வேலி சீமையின் வட்டார வழக்கு)
No comments:
Post a Comment