முற்பகல் செயின்..40
By N Krishnamurthy
ஆறேகால் மணிக்கு சந்திர சேகர் இரண்டு ஆட்டோக்களை பிடித்துக் கொண்டு வந்தார். எல்லோரும் ஆட்டோக்களில் ஏறி ஸ்டேஷனுக்கு சென்றார்கள்.
வண்டி 10 நிமிடம் லேட்டாக வந்தது. நமச்சிவாயத்தையும் கோமதியையும் ஏசி காம்பார்ட்மென்ட்டில் ஏற்றுவிட்ட பின்பு தேன்மொழியை அவளுடைய
காம்பார்ட்மென்ட்டில் ஏற்றிய ஆதித்யா திரும்பி தன் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
எட்டு மணிக்கு வண்டி ஸ்ரீவில்லிபுத்தூரை அடைந்ததும் இரவு உணவுக்கான சப்பாத்தியை மூவரும் சாப்பிட்டார்கள். பிளாட்பாரத்தில் விற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவாவை வாங்கினான் ஆதித்யா.
ஒன்பது பத்திற்கு வண்டி மதுரையை அடைந்தது. கீழே இறங்கிய ஆதித்யா, தேன் மொழியை பார்த்துவிட்டு வரலாம் என்று நடந்தபோது பாதி வழியில் அவளே நடந்து வந்து கொண்டிருப்பதை கண்டான். அவள் அருகில் வந்ததும்"என்ன சாப்பிட்டாயா.இடம் சௌகர்யமா இருக்கா "என்று கேட்டான். அவள் "எடத்தல ஒரு ப்ராபளமும் இல்ல.சாப்பாடும் ஆயிற்று.தக்காளி சட்னி கொஞ்சம் உப்போ"என்றாள். உண்மையிலேயே தக்காளி சட்னி கொஞ்சம் உப்புதான். ஆனால் ஆதித்யா அவளிடம் "இல்லேயே. உப்பு சரியாகத்தான் இருந்தது "என்றான். தன் மனது நோகக்கூடாது என அவன் பொய் சொல்வதை அவள் புரிந்து கொண்டாள்.இருவரும் தத்தம் இடத்திற்கு திரும்பினர்.
கோமதிக்கும் நமச்சிவாயயத்திற்கும் படுக்கையை விரித்து அவர்களை படுக்கச் செய்த பின், தன்னுடைய படுக்கையை விரித்து படுத்தான் ஆதித்யா.வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தவன், மார்பின் மேல் புத்தகத்தை வைத்துக்கொண்டு, அப்படியே தூங்கி விட்டான்.
காலை வண்டி பெருங்களத்தூரை தாண்டும் போது, அலார்ம் அடித்து முழித்த ஆதித்யா தாம்பரத்தில் இறங்க எண்ணி ,அவர்கள் இருவரையும் பாத்ரூம் அழைத்துச்சென்று வருவதற்கும்,ட்ரெயின் தாம்பரம் அடைவதற்கும் சரியாக இருந்தது. மூவரும் இறங்கினார்கள். தேன்மொழியும் இறங்கி இவர்களை பார்த்து கை அசைத்தாள். நால்வரும் வெளியே வந்து, டாக்சி பிடித்து, நமச்சிவாயத்தின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் பல்துல க்கிய பின் காப்பி கலந்து கொடுத்த தேன்மொழி, குளித்துவிட்டு வந்து,சாமி கும்பிட்ட பின், சமையல் அறையில் புகுந்து குக்கரில் அரிசியை களைந்த பாத்திரத்தை வைத்து , கேஸை பற்ற வைத்தாள். வெண்டைக்காய் சாம்பாரையும், கத்திரிக்காய் பொரியலையும் செய்தாள். எட்டு மணிக்கு ஆதித்யாவும் , தேன் மொழியும் காலை உணவாக, வெண்ணை, ஜேம் தடவிய, பிரட்டை எடுத்துக்கொண்டார்கள்." உங்க ரெண்டு பேருக்கும் தோசை குத்தலாமா" என்ற தேன்மொழியிடம் கோமதி" வேண்டாம்மா. நாங்க ஒரேடியா பத்தரை மணிக்கு சாப்டூடரோம்"என்றாள். ஒன்பது மணிக்கு டாக்ஸி புக் செய்த ஆதித்யா, தேன்மொழியை அழைத்துக்கொண்டு ஆபீசுக்கு கிளம்பி சென்றான். போகு முன் தேன்மொழியிடம் நமச்சிவாயம் சாயங்காலம் இங்கே வந்தூடேன்.இந்த வாரம் இங்கேயே இருந்தூடலாமே" என்றார்."சரி.பாக்கறேன் தாத்தா"என்றாள் தேன்மொழி.
No comments:
Post a Comment