அருள்மிகு_வைத்தீஸ்வரர்_ஆலயம்
வைத்தியநாதர்_கோவில் 🙏
வைத்தீஸ்வரர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வைத்தீசுவரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் புராதனப் பெயர் வேளூர்வாயில் என்பதாகும். இந்த வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்றொரு பெயரும் உண்டு . 'வேள்' என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கும். 'புள்' என்னும் சொல் கருடனையும், ரிக் என்னும் சொல் ரிக் வேதத்தையும் குறிக்கும் .
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இக்கோவிலின் இறைவன் சிவபெருமான் வைத்தியநாதர் என்றும் அம்பாள் தையல் நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
நவக்கிரகங்களின் ஒன்றான புதன் கிரகத்தையும் அதனுடன் அங்கராகனையும்(செவ்வாய்) சேர்த்து வழிபடும் தளமாகும். அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாகக் கருதப்படுகிறார். இவ்விடம் நாடி ஜோதிடர்கள் நிறைந்திருக்கும் புகழ்பெற்ற இடமாகும்.
வைத்தீஸ்வரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்தும். வைத்தீஸ்வரரை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்பது உறுதி. எனவே தான் இங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமான் "நோய்தீர்க்க வல்லவர்" என்ற பொருளில் வைத்தீஸ்வர் எனப் போற்றப்படுகிறார்.
இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய்கள் நீங்குகின்றன.
இராமாயணத்து சம்பாதி, ஜடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், முருகப்பெருமானும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இத்தலம் புள்ளிருக்கு வேளூர் எனப் பெயர் பெற்றது. (புள்=பறவை; வேள்=முருகன்) இப்பெயர் பெற்றது.
இத்தலத்துச் சிவபெருமானைப் பற்றிய பாடல்களில். ஜடாயு, சம்பாதி வழிபட்ட செய்திகள் உள்ளன.
ஜடாயு என்னும் புள் (பறவை), ரிக் வேதம் , முருகவேள் சூரியன் ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தலம் புள்ளிருக்குவேளூர் எனவும் திருபுள்ளிருக்குவேளூர் எனவும் தனிச்சிறப்புடனும் அழைக்கப்படுகிறது.
நவக்கிரகங்களுள் ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டு சிவபெருமானை வேண்டினாராம். சிவனாரும், வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அங்காரகனின் நோயைத் தீர்த்தாராம். ஆகையால் இக்கோயில் செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது. இதைப் பற்றி அப்பர் பெருமான் தேவாரத்தில் பாடியுள்ளார்.
திருநாவுக்கரசர்(அப்பர் பெருமான்) தீவிர சூலை நோயகனால்(வயிற்று நோய்) அவதியுற்றபொழுது அவரது தமக்கையான திலகவதியார், வைத்தியநாதரை நினைந்து நோய் தீரதொழுதார். அவ்வாறே சிவபெருமானும் திருநாவுக்கரசரை காத்தருளினார் . அன்று முதல் இத்தல சிவனார், வைத்தீஸ்வரர் என்று பக்தர்களால் அன்புடன். போற்றப்படுகிறார்.
இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரது சரிபாதியான அம்பாள், தையல்நாயகியாக மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தந்தருளுகின்றனர். இக்கோயிலுக்கு ஶ்ரீராமர், இலட்சுமணர் மற்றும். சப்தரிஷிகளும் வந்து வணங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
ஶ்ரீராமரின் வனவாசத்தின் போது சீதாதேவியை கொடிய இராட்சதன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது, கழுகரசனான #ஜடாயு இடைமறித்து தடுத்தார். அப்பொழுது ஈவுஇரக்கமற்ற கொடிய இராட்சதன் இராவணன், ஜடாயுவின் இறக்கைகளையும், கால்களையும் வெட்டி வீழ்த்திவிட்டு சீதாதேவியைக் கவர்ந்து சென்றான்.
இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவைகத் தூக்கி வருடி கொடுக்க ஜடாயு அரக்கன் சீதையை கவர்ந்து சென்றதை கூறிவிட்டு உயிரை விட்டது. பின்னர் இராமபிரான் மற்றும் இலட்சுமணர் இருவரும் இணைந்து இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து ஜடாயுவின் சிதைக்கு தீமூட்டி இறுதிச் சடங்குகளை செய்தனர். எனவே இக்கோயிலில் அமைந்துள்ள குளம் #ஜடாயு_குந்தம் என்றே அழைக்கப்படுகிறது.
இக்கோயிலினுள் உள்ள சிறிய தலத்தில் தன்வந்தரி பகவானும், முருகப் பெருமானும், முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்.. கடவுளுக்கு படைக்கப்பட்ட பிரசாதங்களாக திருநீறும் , திருச்சந்தன உருண்டையும் நோய்தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றது. இது ஹோமகுண்டத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையான மருந்தாக சந்தனம், குங்குமப்பூ கலந்து வழங்கப்படுகின்றது.
பக்தர்களுக்கு மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த் உப்பு இவற்றை சித்தாமிர்தத்த குளத்தில் வைத்து நோய்தீர்க்க வேண்டி கடவுளுக்கு படைக்கின்றனர்.
வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கைகளாகப் பிணிதீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர். பக்தர்கள் . இக்கோயிலின் பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் தை மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை மாதத்திலும் விழா எடுக்கப்படுகின்றது. முத்துகுமாரசுவாமிக்கு (முருகன்) தனி விழாவாக அமாவசை அல்லது பௌர்ணமிக்குப் பின்வரும ஷஷ்டியன்று விழா எடுக்கப்படுகின்றது.
வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடம் என்பது இங்கே புகழ்பெற்ற ஒன்றாகும். திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தர், வள்ளலார் வைத்தியநாத சுவாமியான சிவபெருமானைக் குறித்து பாடியத்தலம் இதுவாகும். இந்த வைத்தீஸ்வரன் கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
முற்காலத்தில் இந்த குள கரையில் சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்த போது ஒரு பாம்பு தவளையை முழுங்க முயலும் போது, தன் தவம் கலைந்ததால், அவற்றை சபித்தாராம் சதானந்த முனிவர். இதன் காரணாமாக இன்றளவும் இக்குளத்தில் தவளை, பாம்பு போன்றவை காணப்படுவதில்லை.
இக்கோவிலில் மூலவர் சந்நிதிக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆனால் இரண்டு கொடிமரங்கள் உள்ளன. மற்ற கோவில்களிலில் எல்லாம் நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இருக்கும். ஆனால் இக்கோவிலில் நவகிரகங்கள் அனைத்தும் இக்கோவிலின் மூலவரான வைத்தியநாதரின் சந்நிதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் அமைந்து இறைவனின் கட்டளைக்கு பணிந்து பக்தர்களின் நோய்களையும், தோஷங்களையும் போக்குவதாக நம்பிக்கை.
இக்கோவிலுக்கு கிழக்கில் பைரவ மூர்த்தியும், தெற்கில் விநாயகர், மேற்கில் வீரபத்திரர், வடக்கில் காளி ஆகியோர் காவல் புரிகின்றனர். தேவாரபாடல் பாடப்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. ஐந்து பிரகாரங்களை கொண்ட இந்த கோவில் ஏழு நிலை இராஜகோபுரம் கொண்டது. இக்கோயில் தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
4448 நோய்களை தீர்க்கும் சித்த மருத்துவத்தை கண்டுபிடித்த சித்தர்களின் தலைமை பீடமாக இந்த கோவில் கருதப்படுகிறது. பக்தர்களின் எத்தகைய நோய்களையும் தீர்ப்பதற்காக இக்கோயிலில் புற்று மண், அபிஷேக தீர்த்தம், அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி,வேப்பிலை ஆகியவற்றை கலந்து “திருச்சாந்து” உருண்டை தயாரித்து வழங்கப்படுகிறது. இதை உண்பவர்களின் எத்தகைய நோய்களும் நீங்கி முழு குணம் அடைவர் என்பது இங்கு வந்து குணமடைந்தோரின் நம்பிக்கையாக உள்ளது.
தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு விற்கப்படும் புனுகு எண்ணையை வாங்கி தேய்த்து, நீராடி வைத்தீஸ்வரரை வழிபட்டால் தோல்நோய் நீங்குகிறது. இங்கு தரப்படும் விபூதி, வில்வம், புற்றுமண் தைலம் கலந்து தயாரிக்கப்படும் மருந்து வெண்குஷ்ட நோய்க்கு சிறந்த நிவாரணமாகிறது.
உடல் பிணி மட்டுமன்றி நமது பிறவி பிணியையும், கல்வித் தடை, குழந்தையின்மை, திருமண தடை, தொழில் வியாபார நஷ்டம் ஆகிய அனைத்து கஷ்டங்களையும் வைத்தியநாதசுவாமி தீர்த்து வைக்கிறார் என்பது இங்கு வந்து பலனடைந்த பக்தர்களின் நம்பிக்கையாகும்
இக்கோவிலில் இருக்கும் கற்பக விநாயகர் பக்தர்களின் எத்தகைய கோரிக்கையையும் நிறைவேற்றும் சக்தி கொண்டவர். .இங்குள்ள அங்காரகன் ( செவ்வாய் பகவான்) சந்நிதியில் செவ்வாய் தோஷத்திற்கான நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன.
இங்குள்ள முருகப்பெருமான் "செல்வ முத்துக்குமாரர்' என அழைக்கப்படுகிறார். அர்த்த ஜாம பூஜையின் போது புனுகு, சந்தனம், பச்சைக்கற்பூரம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால், பால் சாதம் ஆகியவற்றுடன் விஷேஷ பூஜைகள் செய்யப்படுகிறது.
இங்கிருக்கும் அம்மனான தையல் நாயகியை வழிபடுவதால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலாரிஷ்டம் தோஷம் நீங்கும். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் ஏராளமாக வந்து வழிபாடும் சக்தி வாய்ந்த கோவிலாகும் இது. தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினால் மொட்டை அடித்தல், காது குத்துதல், அன்னதானம் போன்ற நேர்த்தி கடன்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.
இத்தனை மகிமையுடைய அருள்மிகு ஸ்ரீ வைத்திய நாதர் திருக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில்
காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரையும் இறைவனின் அருளைப் பக்தர்கள் பெற திறந்திருக்கும் நேரமாகும்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது அதில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டு உலக உயிர்கள் அனைத்தையும் காத்தருளிய எம் குலதெய்வமே சிவபெருமானே! வைத்தீஸ்வரராக வீற்றிருந்து அனைவரது நோய்களையும் தீர்த்தருளும் எம்பெருமானே! கருணைக்கடலே! கொடிய நோய்கள் மக்களைத் தாக்காது காத்தருள்வாய் வைத்தியநாத சுவாமியே.
நீயே சரணமென்று உனை நம்பிய பக்தர்களைக் காத்தருள்வாய் கருணாமூர்த்தியே. இப்பிரபஞ்சதிற்கே தலைமை மருத்துவனான வைத்தீஸ்வரனே! எங்களைக் காத்தருள்வாய் கருணாமூர்த்தியே! வைத்தீஸ்வரனே. 🙏
#ஓம்_வைத்தீஸ்வரா_சரணம்
#ஓம்நமசிவாய 🙏
No comments:
Post a Comment