வசந்த காலம் வருமோ?-96
By N Krishnamurthy
ராஜேஸ்வரி உடனடியாக ஒரு செவன் சீட்டர் டாக்சியை மூன்று நாளைக்கு புக் செய்தாள்.
பின்னர் கும்பகோணத்திலிருக்கும் தன் தந்தை சபேச ஐயருக்கு போன் செய்து விவரத்தை கூற, மறு நாள் டே ட்ரைனை பிடித்து மாலைக்குள் சென்னை வருவதாகவும், எக்மோர் வந்து யாராவது அழைத்து செல்ல வேண்டும்" எனக் கூறினார்.
அன்று மாலையே ராஜேஸ்வரி, மைதிலி,ம்ருதுளா,வசுமதி,ரங்க நாயகி சகிதம்(ரங்க நாயகி இப்போதெல்லாம் ஒன்றயும் விட்டு வைப்பதில்லை. செய்தவற்றிற்கு பரிகாரமாக ஓவர் டைமில் ராஜேஸ்வரிக்கு ஜே போடாத குறையாக வேலை செய்தாள்) தி.நகர் சென்று ம்ருதுளாவிற்கு நல்லியில் புடவை வாங்க சென்றாள். ஒரு மணி நேரம் செலவிட்ட பின் கரும் பச்சை கலர் பட்டுப்புடவை(ஜாக்கெட் துணியுடன் கூட)யை வசுமதியும், ம்ருதுளாவும் சேர்ந்தே தேர்ந்தெடுத்தனர்.
தங்க மாளிகையில் நுழைந்து இரண்டரை பவுனில் சங்கிலியும், கைக்கு வாடமல்லி கலரில் கல் பதிக்கப்பட்ட நெளி மோதிரமும் வாங்கிக்கொண்டார்கள்.
நிச்சயதார்தத்துக்கு மாப்பிள்ளை ட்ரஸ்ஸை ம்ருதுளா செலக்ட் செய்தாள்.சங்கர க்ருஷ்ணனிடம் அளவு மாத்திரம் தெரிந்து கொண்டாள்.நேவி ப்ளு கலர் பேண்ட்டும்,சந்தன கலரில் முழுக்கை சட்டையையும் தேர்ந்தெடுத்தாள்.
மறுநாள் மார்கபந்து டாக்சியில் புறப்பட்டு காஞ்சிபுரம் சென்று, அவரது அம்மா மரகதத்தை அழைத்துக்கொண்டு அன்று இரவே சென்னை திரும்பினார்.
அன்று மாலை சங்கர க்ருஷ்ணனும், ஸ்ரீ வத்சனும் எக்மோர் சென்று சபேச ஐயரை அழைத்து வந்தனர்.வரும் வழியில்,சங்கர க்ருஷ்ணன் அவருக்கு ஸ்ரீவத்சனை அறிமுகப்படுத்தினான்.
அன்று இரவு ராஜேஸ்வரி குடும்பத்தினருக்கு சுப்புலக்ஷ்மி வீட்டில் சாப்பாடு. சூடான அரிசி உப்புமாவும், கத்தரிக்காய் கொத்சும் தேவாம்ருதமாக இருந்தன.
இதற்குள் பத்மநாபனும் ,சாரங்கனும் பழங்கள், ஸ்வீட் முதலியன வாங்க மாம்பலம் சென்றார்கள். அங்கு விஜாரித்ததில், மூர்த்தி தெருவில் ஆர்டரின் பேரில் ஒரே நாளில்,ஒரு மாமி, பருப்பு தேங்காய் செய்து கொடுப்பதாக கேள்விப்பட்டு,அந்த மாமியின் இடத்தை தேடி கண்டுபிடித்தனர்.
நிச்சயாதார்த்தத்தன்று காலை எட்டு மணிக்கு ஜோடி பருப்பு தேங்காய் ரெடியாகி விடும் என்றும், அட்ரஸ் கொடுத்தால் தானே அனுப்பி விடுவதாகவும் அந்த மாமி சொன்னாள்.
அந்த மாமியிடம் நிச்சயதார்த்த சாப்பாட்டை ஏற்பாடு செய்யமுடியுமா என கேட்க, அதற்கு அந்த மாமி "எத்தனை பேர் சாப்பிடணம்" என்று கேட்டாள்.
சாரங்கன்"சுமார் இருபது பேர் தேறும்"என்றார்.ஐயரா, ஐயங்காரா என்று அந்த மாமி கேட்டபோது அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சுதாரித்துக்கொண்ட பத்மநாபன் ரெண்டுக்கும் பொதுவா பண்ணணம் என்றார். "ஒ.பையன் ஐயங்கார்,பொண்ணு ஐயரா" என்று அந்த மாமி கேட்க, பத்மநாபன் "இல்ல மாமி.பையன்ஐயர், பொண்ணு ஐயங்கார்" என்றார்.
அந்த மாமி மெனுவை சொல்ல, கேட்டு எழுதிக்கொண்ட சாரங்கன் அந்த மாமியின்டெலிபோன் நெம்பரை மறக்காமல் வாங்கிக்கொண்டான்.
வீட்டுக்குப் போய் மெனுவில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெருவிப்பதாக கூறி,அட்வான்சாக இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தான்."எல்லாவற்றையும் பத்தரை மணிக்கு கொண்டு வந்து எறக்கி வெச்சிடுவோம்.நீங்கதான் பரிமாற ஏற்பாடு பண்ணிக்கணம். சாயங்காலமா வந்து பாத்ரங்களை எடுத்துண்டு போயிடுவோம்" என்று சொல்லி சாப்பாட்டிற்கு, ஆட்டோவிற்கு, சாப்பிட்ட பாத்திரங்ளை க்ளீன் செய்ய மொத்தம் எவ்வளவு ஆகும் என்று சொன்னாள்.
பின்பு சாரங்கன் ஆத்து வாத்யரை பார்த்து முஹுர்தத்துக்கு நாள் குறிக்க வேண்ட அவர், நிச்சயதார்தத்துக்கு அரை மணி முன்பே வந்து விடுவதாகவும், பையன் வீட்டாரையும் கலந்து கொண்டு முஹுர்த்த தேதியை நிச்சயம் செய்து கொள்ளலாம் என்றார்.
வீட்டிற்கு சாரங்கனும்,பத்மநாபனும் திரும்பி வந்தனர்.மாலைகளை ஆர்டர் செய்து விட்டு ரகுவும் வீட்டிற்கு திரும்பினான். சாப்பட்டு மெனுவை சாரங்கன் படித்துக்காட்ட மைதிலி அதில் ஒன்றிரண்டு மாற்றங்களை கூற, சாரங்கன் மாம்பலம் மாமியை போனில் கூப்பிட்டு விவரம் சொன்னான்.
No comments:
Post a Comment