முற்பகல் செயின் - 41
By N Krishnamurthy
அன்று மாலை ஆதித்யா அலுவலகத்தில் இருந்து திரும்பியவுடன் நமச்சிவாயம் அவன் தனியாக வந்ததைப் பார்த்து "என்னப்பா தேன்மொழி உன் கூட வரலையா" என்று கேட்டார்.அதற்கவன் "இல்ல தாத்தா. அவள் இன்னிக்கு இரவு அவ வீட்டில பர்மிஷன் வாங்கீட்டு நாளைக்கு சொல்வதாக கூறி இருக்கிறாள்" என்று கூறினான்.
"அதுவும் நல்லது தான்" என்று கூறினார் நமச்சிவாயம்.
அன்று இரவு 9:30 மணி இருக்கும், அமெரிக்காவிலிருந்து போன் வந்தது. முன்னதாக ஆதித்யாவும் நமச்சிவாயமும் ஆதித்யாவுடைய ஃப்ரெண்ட் வீட்டாரை பார்க்க கடையநல்லூர் செல்வதாக கூறியிருந்தார்கள்.
வேறு எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. முதலில் பேசிய திரு "போன ட்ரிப் எப்படி இருந்தது" என்று ஆதித்யாவிடம் கேட்டுவிட்டு நமச்சிவாயத்திடமும் கோமதியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் போனை நித்யாவிடம் கொடுத்தார்.
நித்யா சிறிது நேரம் மாமனார் மாமியாருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு, ஆதித்யாவிடம் பேச ஆரம்பித்தாள் .
"ஆதித்யா, உனக்கு ஞாபகம் இருக்கா உன் கூட ஹரிணீன்னு ஒரு பொண்ணு படிச்சாளே" என்று கேட்டாள்.
"ஏம்மா ஞாபகம் இல்லாம. நல்லா ஞாபகம் இருக்கு. என்ன அவளுக்கு ?
கல்யாணம் பிக்ஸ் ஆயி இருக்கா?" என்று கேட்டான். அதற்கு நித்யா " ஹரிணியின் பெற்றோர்களும், ஹரிணியும் இரண்டு நாள் முன்பு நம்ப வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் பிராமின் கம்யூனிட்டியை சேர்ந்தவர்கள் என்று எனக்கு தெரிந்தது.
ஹரிணியின் தந்தை எங்களிடம், ஹரிணி உன்னை காதலிப்பதாகவும், நீயும் அவளை காதலிப்பதாக அவள் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கூறி மேற்கொண்டு பேசலாமா" என்று எங்களை கேட்டார். நீ ஒரேடியாக இந்தியா போயிருக்கும் விஷயத்தை நான் அவரிடம் கூறினேன். அதற்கு ஹரிணி "பர்மனண்ட்டாக இந்தியா போயிருப்பதில் எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை" என்று கூறினாள். பெண் நன்றாக இருக்கிறாள். தன்மையாக பழகுகிறாள். என்ன நம்ப கம்யூனிட்டி இல்ல, அவ்வளவுதான். ஏற்கனவே நீ அவள பாத்திருக்க, அவ கூட பழகி இருக்க. நீ சரின்னு சொன்னயானால் மீண்டும் அவர்களை கூப்பிட்டு பேசி முடித்துவிடலாம்" என்றாள். இதை கேட்ட ஆதித்யா "எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை" என்று கூறினான். அதற்கு நித்யா "யோசித்து சொல்ல வேண்டுமென்றால், ரெண்டு மூன்று நாட்கள் டைம் எடுத்துக் கொள்" என்று கூறினாள். அப்போது ஆதித்யா அவளிடம் "நாங்கள் கடையநல்லூரில் ஒரு பிரண்டு வீட்டுக்கு போயிருந்தாக சொன்னோமே , அவள் எங்கள் ஆபிஸில் வேலை செய்யும் தேன்மொழி. எதேச்சையாக அவர்களும் நம் கம்யூனிட்டி சேர்ந்து வர்களாக இருக்கிறார்கள். மிக இனிமையான பெண். என்னுடைய ரசனையும், அவளுடைய ரசனையும் பல விஷயங்களிள் ஒத்துப் போகின்றன. அத்தோடு இல்லாமல் பெரியவர்களுக்கு மிகவும் மதிப்பளித்து நடந்து கொள்கிறாள். அவளை மணந்து கொள்ளலாம் என்று நான் எண்ணியிருக்கிறேன். இதை கிட்டத்தட்ட தாத்தாவும், பாட்டியும் கூட அங்கீகரித்து இருக்கிறார்கள் என்று நீ வைத்துக் கொள்ளலாம்" என்று கூறினான். இதைக் கேட்டு நித்யா இரண்டு நிமிடம் பதிலே சொல்லவில்லை. பின்னர் " என்ன ஆதித்யா, திடுதிப்பென்று முடிவு எடுக்கிறாய். எங்களை எல்லாம் கலந்து ஆலோசிக்க வேண்டாமா" என்று கேட்டாள். அதற்கவன் "நிச்சயம் அம்மா.அப்படித்தான் நான் முடிவெடுப்பேன். ஆனால் நீங்களும் என் முடிவில் ஒத்துப் போவீர்கள் என்று நம்பிக்கை எனக்கு உண்டு. அப்படி உங்களுக்கு இந்த சம்பந்தத்தில் சம்மதம் இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை நீங்கள் எனக்கு கூற வேண்டும். அந்த காரணம் சரி என்று எனக்கு பட்டால் தான், நான் நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ள முடியும்" என்று கூறினான். இதைக் கேட்டு நித்யா "என்னவோப்பா. உன் நடவடிக்கைகள் கொஞ்சம் காலமாகவே சரியாகவே இல்லை" என்று கூறினாள். அதற்கு ஆதித்யா "பிறருடைய நடவடிக்கைகள் நாம் பார்க்கும் பார்வையில் தானம்மா இருக்கிறது. உங்களுக்கு தெரியாதா என்ன" என்று கூறினான்.
"இப்பொழுது அவர்கள் வந்து கேட்டால் என்ன சொல்வது" என்று கேட்டாள் நித்யா. "விஷயத்தை சொல்லி அவர்களுக்கு விளக்கி விடுங்கள் அம்மா. உங்களுக்காக சொல்வதில் ஏதேனும் தயக்கம் இருந்தால் சொல்லுங்கள் நானே ஹரிணியிடம் பேசிக் கொள்கிறேன். அவள் முதிர்ச்சடைந்த பெண்.
அவள் நிலைமையை புரிந்து கொள்வாள். என்னை விட சிறந்த மாப்பிள்ளை அவளுக்கு கிடைப்பான்" என்று கூறி முடித்தான் ஆதித்யா.
இரண்டு நிமிடம் கழித்து திரு லைனில் வந்தார். அவர் ஆதித்யாவிடம் " ஆதித்யா, அம்மா எல்லா விஷயத்தையும் என்னிடம் கூறினாள். உனக்கு மனதிற்கு பிடித்து, தாத்தா பாட்டிக்கும் பிடித்திருந்தால், எனக்கு இதில் முழு சம்பந்தமே அம்மாவும் இரண்டு நாட்களில் சம்மதம் கொடுத்து விடுவாள் என்று நினைக்கிறேன். முடிந்தால் அந்தப் பெண்ணுடைய ஃபோட்டோவை அனுப்பி வைக்க முடியுமா" என்று கேட்டார்.
" சரி அப்பா.அப்படியே செய்கிறேன்" என்று கூறி ஆதித்யா லைனை துண்டித்தான். N Krishnamurthy
அன்று மாலை ஆதித்யா அலுவலகத்தில் இருந்து திரும்பியவுடன் நமச்சிவாயம் அவன் தனியாக வந்ததைப் பார்த்து "என்னப்பா தேன்மொழி உன் கூட வரலையா" என்று கேட்டார்.அதற்கவன் "இல்ல தாத்தா. அவள் இன்னிக்கு இரவு அவ வீட்டில பர்மிஷன் வாங்கீட்டு நாளைக்கு சொல்வதாக கூறி இருக்கிறாள்" என்று கூறினான்.
"அதுவும் நல்லது தான்" என்று கூறினார் நமச்சிவாயம்.
அன்று இரவு 9:30 மணி இருக்கும், அமெரிக்காவிலிருந்து போன் வந்தது. முன்னதாக ஆதித்யாவும் நமச்சிவாயமும் ஆதித்யாவுடைய ஃப்ரெண்ட் வீட்டாரை பார்க்க கடையநல்லூர் செல்வதாக கூறியிருந்தார்கள்.
வேறு எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. முதலில் பேசிய திரு "போன ட்ரிப் எப்படி இருந்தது" என்று ஆதித்யாவிடம் கேட்டுவிட்டு நமச்சிவாயத்திடமும் கோமதியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் போனை நித்யாவிடம் கொடுத்தார். நித்யா சிறிது நேரம் மாமனார் மாமியாருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு, ஆதித்யாவிடம் பேச ஆரம்பித்தாள் .
"ஆதித்யா, உனக்கு ஞாபகம் இருக்கா உன் கூட ஹரிணீன்னு ஒரு பொண்ணு படிச்சாளே" என்று கேட்டாள்.
"ஏம்மா ஞாபகம் இல்லாம. நல்லா ஞாபகம் இருக்கு. என்ன அவளுக்கு ?
கல்யாணம் பிக்ஸ் ஆயி இருக்கா?" என்று கேட்டான். அதற்கு நித்யா " ஹரிணியின் பெற்றோர்களும், ஹரிணியும் இரண்டு நாள் முன்பு நம்ப வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் பிராமின் கம்யூனிட்டியை சேர்ந்தவர்கள் என்று எனக்கு தெரிந்தது.
ஹரிணியின் தந்தை எங்களிடம், ஹரிணி உன்னை காதலிப்பதாகவும், நீயும் அவளை காதலிப்பதாக அவள் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கூறி மேற்கொண்டு பேசலாமா" என்று எங்களை கேட்டார். நீ ஒரேடியாக இந்தியா போயிருக்கும் விஷயத்தை நான் அவரிடம் கூறினேன். அதற்கு ஹரிணி "பர்மனண்ட்டாக இந்தியா போயிருப்பதில் எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை" என்று கூறினாள். பெண் நன்றாக இருக்கிறாள். தன்மையாக பழகுகிறாள். என்ன நம்ப கம்யூனிட்டி இல்ல, அவ்வளவுதான். ஏற்கனவே நீ அவள பாத்திருக்க, அவ கூட பழகி இருக்க. நீ சரின்னு சொன்னயானால் மீண்டும் அவர்களை கூப்பிட்டு பேசி முடித்துவிடலாம்" என்றாள். இதை கேட்ட ஆதித்யா "எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை" என்று கூறினான். அதற்கு நித்யா "யோசித்து சொல்ல வேண்டுமென்றால், ரெண்டு மூன்று நாட்கள் டைம் எடுத்துக் கொள்" என்று கூறினாள். அப்போது ஆதித்யா அவளிடம் "நாங்கள் கடையநல்லூரில் ஒரு பிரண்டு வீட்டுக்கு போயிருந்தாக சொன்னோமே , அவள் எங்கள் ஆபிஸில் வேலை செய்யும் தேன்மொழி. எதேச்சையாக அவர்களும் நம் கம்யூனிட்டி சேர்ந்து வர்களாக இருக்கிறார்கள். மிக இனிமையான பெண். என்னுடைய ரசனையும், அவளுடைய ரசனையும் பல விஷயங்களிள் ஒத்துப் போகின்றன. அத்தோடு இல்லாமல் பெரியவர்களுக்கு மிகவும் மதிப்பளித்து நடந்து கொள்கிறாள். அவளை மணந்து கொள்ளலாம் என்று நான் எண்ணியிருக்கிறேன். இதை கிட்டத்தட்ட தாத்தாவும், பாட்டியும் கூட அங்கீகரித்து இருக்கிறார்கள் என்று நீ வைத்துக் கொள்ளலாம்" என்று கூறினான். இதைக் கேட்டு நித்யா இரண்டு நிமிடம் பதிலே சொல்லவில்லை. பின்னர் " என்ன ஆதித்யா, திடுதிப்பென்று முடிவு எடுக்கிறாய். எங்களை எல்லாம் கலந்து ஆலோசிக்க வேண்டாமா" என்று கேட்டாள். அதற்கவன் "நிச்சயம் அம்மா.அப்படித்தான் நான் முடிவெடுப்பேன். ஆனால் நீங்களும் என் முடிவில் ஒத்துப் போவீர்கள் என்று நம்பிக்கை எனக்கு உண்டு. அப்படி உங்களுக்கு இந்த சம்பந்தத்தில் சம்மதம் இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை நீங்கள் எனக்கு கூற வேண்டும். அந்த காரணம் சரி என்று எனக்கு பட்டால் தான், நான் நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ள முடியும்" என்று கூறினான். இதைக் கேட்டு நித்யா "என்னவோப்பா. உன் நடவடிக்கைகள் கொஞ்சம் காலமாகவே சரியாகவே இல்லை" என்று கூறினாள். அதற்கு ஆதித்யா "பிறருடைய நடவடிக்கைகள் நாம் பார்க்கும் பார்வையில் தானம்மா இருக்கிறது. உங்களுக்கு தெரியாதா என்ன" என்று கூறினான்.
"இப்பொழுது அவர்கள் வந்து கேட்டால் என்ன சொல்வது" என்று கேட்டாள் நித்யா. "விஷயத்தை சொல்லி அவர்களுக்கு விளக்கி விடுங்கள் அம்மா. உங்களுக்காக சொல்வதில் ஏதேனும் தயக்கம் இருந்தால் சொல்லுங்கள் நானே ஹரிணியிடம் பேசிக் கொள்கிறேன். அவள் முதிர்ச்சடைந்த பெண். அவள் நிலைமையை புரிந்து கொள்வாள். என்னை விட சிறந்த மாப்பிள்ளை அவளுக்கு கிடைப்பான்" என்று கூறி முடித்தான் ஆதித்யா.
இரண்டு நிமிடம் கழித்து திரு லைனில் வந்தார். அவர் ஆதித்யாவிடம் " ஆதித்யா, அம்மா எல்லா விஷயத்தையும் என்னிடம் கூறினாள். உனக்கு மனதிற்கு பிடித்து, தாத்தா பாட்டிக்கும் பிடித்திருந்தால், எனக்கு இதில் முழு சம்பந்தமே அம்மாவும் இரண்டு நாட்களில் சம்மதம் கொடுத்து விடுவாள் என்று நினைக்கிறேன். முடிந்தால் அந்தப் பெண்ணுடைய ஃபோட்டோவை அனுப்பி வைக்க முடியுமா" என்று கேட்டார்.
" சரி அப்பா.அப்படியே செய்கிறேன்" என்று கூறி ஆதித்யா லைனை துண்டித்தான்.
No comments:
Post a Comment