Thursday, February 15, 2024

முற்பகல் செயின்..39

 முற்பகல் செயின்..39

By N Krishnamurthy 

பகல் ஒரு மணிவரை அணையின் அருகிலிருந்த இயற்கை வனப்பினை சுற்றிப்பார்த்தனர். 

பின்பு கொண்டு வந்திருந்த பகலுணவான தேங்காய் சாதம்,மர வள்ளி சிப்ஸ்,தயிர் சாதம்,எலுமிச்சை ஊற்காயை,பாக்கு மட்டை தட்டுக்களில் வைத்து அனைவருக்கும் தேன்மொழியும், வெண்ணிலாவும் வினியோகித்தார்கள்.

உண்ட மயக்கம் தீர ஒரு மணி ஒய்வெடுத்துக்கொண்டு,இரண்டரை  மணிக்கு எல்லோரும் வேனில் ஏற, வேன் கிளம்பி, மூன்று மணிக்கு கடய நல்லூரை அடைந்தது.

வள்ளி நாயகம் குடும்பம் விடை பெற்று சென்றது.

"உனக்கு இன்று இரவு என்ன ட்ரெயின்" என்று ஆதித்யா தேன் மொழியிடம் வினவ "அவள் எனக்கும் பொதிகை எக்ஸ்பிரஸ்தான், ஆனா செகண்ட் க்ளாஸ் ஸ்லீப்பர்" என்றவள்"ஏழைக்கேற்ற எள்ளுருண்டை"என்று சொல்லி நகைத்தாள்.

வண்டி ஏழு மணிக்கு கிளம்புவதால் "ஆறு மணிக்கு சாப்பிட்டு விடலாம்" என்றாள் பரம கல்யாணி.

"மத்யானம் சாப்பிட்டதே திம்ன்னு இருக்கு. பேசாமா ஆளுக்கு ரெண்டு சப்பாத்தி கட்டி கொடுத்தூடுங்க. ட்ரெயின்ல சாப்டுக்கலாம்" என்றாள் கோமதி.

"அப்படியே செஞ்சூட்டா போச்சு "என்றாள் 

பரம கல்யாணி.கிளம்புவதற்கு முன் சுப்ரமண்ய பிள்ளை நமச்சிவாயத்திடம் "உங்க மகனையும், மருமகளையும் கலந்தோ பேசி சேதி சொல்லுங்க "என்றார்.

"நிச்சயம் செய்யறேன் என்றார் நமச்சிவாயம்.

கிளம்பும்போது கோமதிக்கு குங்குமம் கொடுத்து, ஒரு தட்டில் சுங்கடி புடவையும், ரவிக்கை பிட்டையும் வைத்துக்கொடுத்தாள்

பரம கல்யாணி."புடவையெல்லாம் எதுக்கு" என்ற கோமதியிடம் பரம கல்யாணி "வராதவங்க வந்திருக்கீங்க.இது கூட செய்யலேன்னா எப்படி" என்றாள். 

ஆதித்யா பொற்கொடி, வெண்ணிலா, அருண்மொழியிடம் "நல்லா படிக்கணம் "என்றான்.

அவர்கள் தலை ஆட்டினார்கள்.

பின்பு ஆதித்யா சந்திரசேகரை பார்த்து "நீங்க எப்போ திருநெல்வேலி போறீங்க" என்று கேட்டான். சந்திரசேகர் 

" உங்களையெல்லாம் ஊருக்கு அனுப்பிவிட்டு நாளைக்கு காலைல ஏழு மணி பஸ் பிடிச்சா போதும். டைரக்டா ஆஃபீஸுக்கே போய்விடுவேன்"என்று கூறினார். கிளம்பு முன் ஆதித்யா சுப்ரண்ய பிள்ளை மற்றும் பரமகல்யாணியின் கால்களில் விழுந்து கும்பிட்டான். "பத்திரமா போயிட்டு வாங்க" என்றார் சுப்பிரமணிய பிள்ளை.

தங்கைகளும், தம்பியும் தேன்மொழியை பார்த்து "மறுபடியும் எப்ப வருவ அக்கா"என்று ஏக்கத்துடன் கேட்டனர்.

"சீக்கரம் வருவேன் "என்று சொன்னவள், அருள் மொழியை பார்த்து "நல்லா படிக்கணம். யார் கிட்டயும் வம்பு,தும்பு வெச்சுக்காத.அக்காங்க கிட்ட சண்ட போடாத"என்றாள்.

"சரிக்கா" என்றவன் அவள் அருகில் வந்து அவள் காதை கடித்தான்.

"என்னவாம்" என்றாள் பரம கல்யாணி, தேன் மொழியை பார்த்து.

"எப்ப கல்யாணம்னு கேக்ககறான். குறஞ்சது பத்து நாள் ஸ்கூலுக்கு லீவு போடணமாம்"என்றாள் தேன்மொழி. இதைக்கேட்டதும் அனைவரும் சிரித்தனர்.

No comments:

Post a Comment