வசந்த காலம் வருமோ?-107
By N Krishnamurthy
கல்யாணத்திற்கு முன் தினம் காலை ஐந்தரை மணிக்கே திருவிழா ஜெய்சங்கர் நாதஸ்வர கோஷ்டி டாக்சியில் வந்து இறங்கியது.எல்லோருக்கும் சுடச்சுட காப்பி தரப்பட்டது.
மங்கள வாத்யம் முழங்க,சங்கர க்ருஷ்ணனை கல்யாண மண்டபத்திற்கு வெளியே அனுப்பி, உள்ளே வரச்செய்து,சாரங்கன் ஒரு மல்லிகை மாலையை அவன் கழுத்தில் அணிவித்தார்.
பிள்ளை வீட்டுகாரர்களுக்கு சந்தனம்,குங்குமம் காட்டி ,சர்க்கரை தட்டை நீட்டினார் பத்மநாபன்.
மைதிலி ராஜேஸ்வரியிடம் திரட்டிப்போல் இருந்த எவர்சில்வர் சம்படத்தை அளித்தாள். பெண்கள் எல்லோருக்கும் வசுமதி கால் முழம் குண்டு மல்லிகை பூ கொடுத்தாள்.
எட்டு மணிக்கு டிபன் பந்தி ஆரம்பமானது.
காலை டிபன் மெனு இதுதான்.
டிபனுக்கு பதில் சாஸ்திரிகள் மோர் சேர்த்த கஞ்சியை அருந்தினார்கள்.
டிபன் முடிந்ததும் அன்றையை வைதீக கர்மாக்கள் விரதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டன.
மார்கபந்து, ராஜேஸ்வரி, சங்கர க்ருஷ்ணன் ஒரிடத்திலும், சாரங்கன்,மைதிலி, ம்ருதுளா மற்றோரிடத்திலும் அமர்ந்தார்கள். மஞ்சள் பிள்ளையார் பூஜையை முடித்ததும்,சங்கர
க்ருஷ்ணன் கண்களை பட்டு வேஷ்டியால் கட்டினார் வைத்யநாத சாஸ்திரிகள்.
ரங்கநாயகி விரத அப்ப கூடையை கொண்டு வந்து வைத்தாள். ரங்கநாயகிக்கு ராஜேஸ்வரி மரியாதை செய்தாள்.
ம்ருதுளா, சாரங்கன் பக்கத்தில் அமர ,மைதிலி பின்புறம் நின்றாள். கருணாகர ஸ்வாமிகள் ம்ருதுளாவிற்கு "ஜாத கர்மா", "நாமகர்மா" சொல்ல அதன்படி சாரங்கன் செய்தார்.
இரு சாராரும் ஹோமம் வளர்த்து அக்னியில் மந்திரங்களை சொல்லி நெய் வார்த்தனர்.
சாஸ்திரிகள் மந்திரங்களை சொல்லச்சொல்ல
சங்கர க்ருஷ்ணன் ஹோமத்தில் நெய்யை வார்த்தான். இதே போல,ம்ருதுளாவிற்கு பதில் சாரங்கன் சாஸ்திரிகள் மந்திரம் சொல்லச்சொல்ல அக்னியில் நெய் வார்த்தார்.
இதன் பின் நாந்தி தொடங்கியது.நாந்தி என்பது சுப சடங்குகளின் ஆரம்பத்தில் முன்னோர்களின்(பித்ருக்களின்) ஆசியையும், அனுகிரஹத்தையும் பெற வேண்டி செய்வது.
ஏழு இலைகள் போட்டு அதில் அரிசி, பருப்பு, வாழைக்காய்,வெல்லம் வெற்றிலை, பாக்கு,பழம் தக்ஷிணை வைத்து வாத்தியார் மந்திரம் சொல்ல அங்கிருந்த வைதீகர்களே அவற்றை வாங்கிக்கொண்டனர்.
இரு வீட்டாரும் இவ்வண்ணமே செய்தனர்.
இதன் பின்னர் நல்ல மண்ணை பரப்பி,சந்தனம்,குங்குமம் இட்டு சிறிது முளை வந்திருக்கும் ,மண்ணால் செய்த ஐந்து பாலிகை கிணங்களை நடுவில் ஒன்றும்,ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொன்றாக தாம்பாளத்தின் மேல் வைத்தார்கள். வயதான சுங்கலிகள் பாலிகை தெளித்தனர். இரு வீட்டாரும் தனித்தனியே பாலிகை தெளிப்பதை செய்தனர். பாலிகை தெளித்தவர்களுக்கு வெற்றிலை, பாக்குடன் ஐம்பது ரூபாயும் தரப்பட்டது.
சங்கர க்ருஷ்ணனுக்கு வலது மணிக்கட்டிலும், ம்ருதுளாவிற்கு இடது மணிக்கட்டிலும், மஞ்சள் கயிற்றால் அந்தந்த வாத்யார் மந்திரம் சொல்ல ரக்ஷை கட்டப்பட்டது.
பகல் உணவு ஆரம்பமானது.டைனிங் ஹால் முகப்பில்
என்ற மெனு கார்ட் வைத்திருந்தார்கள்.
வைதீகர்களுக்கு தனியே மடி சமையலை ஏற்பாடு பண்ணியிருந்தாள் ராஜேஸ்வரி.
அனைவரும் சாப்பிட்டு ஒய்வு எடுத்துக் கொண்டனர்.
மூன்றரை மணியிலிருந்து ஐந்து மணி வரை சிதம்பரம் "ஞானானந்த ஸ்வாமிகள்" பற்றி பேசுவதாக இருந்தது.
No comments:
Post a Comment