வசந்த காலம் வருமோ?-95
By N Krishnamurthy
சக்ரவர்த்தி அங்கிருந்தவர்களைப்பார்த்து "எல்லாரும் கூடியிருக்கும் போதே நிச்சயதார்த்தம் வெச்சுண்டூட்டா என்ன. நல்ல காரியத்தை தள்ளி போட வேணாமேன்னு பாத்தேன். அத்தோட இல்லாமா, சாரங்கன் சஷ்டி அப்த பூர்த்திக்கு வந்த கூட்டம் அப்படியே இருக்கு. இங்க இருக்கற பெரியாவாள்ளாம் இந்த சின்னம் சிறுசுகள நேரில ஆசிர்வாதம் பண்ணா சிலாக்யமா இருக்கும்னு தோணித்து" என்றார். ரங்க நாயகி "அப்பா எப்பவாவதுதான் ரேரா பேசுவா.அதலயும் முக்யமான பாயிண்ட் இருக்கும்"என்றாள்.
பாம்பு பஞ்சாங்கத்தை பார்த்த பட்டுசாமி "நிச்சயதார்த்தத்தை நாளன்னிக்கு வெச்சிகலாம்" என்றார்.
பத்மநாபன்" ஷார்ட் நோட்டீஸ்ல அவா சொந்தகாராளுக்கு எப்படி இன்பார்ம் பண்ண முடியும்"என்றார்.
அதற்கு ராஜேஸ்வரி "எங்களுக்கு கிட்டிய சொந்தம்னு இப்போ இருக்கறது என் மாமியாரும், என் அப்பாவும் தான். எங்கப்பா கும்பகோணத்ல தனியா ஒரு வீட்ல இருந்திண்டிருக்கார்.அவரையும்,என் மாமியாரையும் நாங்க இந்தியா வந்ததுக்கு அப்புறம் எங்க கூடவே வெச்சிக்கபோறோம். போன் பண்ணீட்டா என் அப்பா கெளம்பி வந்தூடுவா. பகவான் புண்ணியத்ல இப்ப சத்திக்கு அவரோட ஹெல்த் நண்ணாயிருக்கு. என் மாமியாருக்கு ஒரு தங்கை இருந்தா. அவா இப்போ இல்லை.என் சின்ன மாமியாரோட பையன் காஞ்சிபுரத்ல இருக்கார்.அவருக்கு மடத்தல வேல.என் மாமியார் அவா கூடவே இருந்துண்டிருக்கா. மடி, ஆச்சாரம் பாத்துண்டு,கோவில்,கொளம்னு போய்ட்டு வரதுக்கு அவாளுக்கு காஞ்சிபுரம் சௌர்யமா இருக்கு. ஒரு கார் அனுப்சூட்டா அவா புறப்பட்டு வந்தூடுவா.
இவருக்கு கூட பொறந்தவா கெடையாது. நேக்கு ஒரு அக்கா இருந்தா.அவ இப்ப இல்லை. அவ பசங்க ரெண்டு பேரும் யூ.கே ல டாக்டரா இருக்கா.அவா கல்யாணத்துக்கு வேணா வரலாமே தவிர நிச்சயதார்த்தத்துக்கு வர முடியாது. என் தம்பி, அவன் குடும்பத்தோட ஆஸ்திரேலியாவல இருக்கான். அவனும் கல்யாணத்துக்கு மாத்ரம் வர வாய்ப்பு இருக்கு. அதனால நாளனிக்கு நிச்சயதார்த்தம் வெச்சிக்கறதுல எங்களுக்கு வேற ப்ராபளம் இல்ல" என்றாள்.
"கூட்டம் அதிகம் இல்லாததால நிச்சயதார்தத்தை இங்கயே நடத்திடலாம்" என்றாள் ரங்கநாயகி.
"ஆமாம், அம்மா சொல்றதுதான் சரி"என்றாள் வசுமதி.
ராஜேஸ்வரி ருக்மணியிடம் "மாமி நேக்கு நிச்சயதார்தத்தக்கு எங்க சைடுலேந்து என்ன பண்ணனும் அவ்வளவா தெரியல. நீங்கதான் சொல்லி தரணம் "என்றாள். அதற்கு ருக்மணி " சபையில வெக்கற மாறி கொஞ்சம் பழங்கள்,ரெண்டு,மூணு வித ஸ்வீட்டு,முக்கியமா தெரட்டிப்பால்,சாக்லேட், வெத்தல,பாக்கு, புஷ்பம், வேணும்னா வெளி கடையில கெடச்சா பருப்பு தேங்கா ஜோடி வாங்கீடு. உன் மாட்டுப் பொண்ணுக்கு புடவ வாங்கணம். மேக்கொண்டு உன் இஷ்டப்படி அவளுக்கு நகை,நட்டு போடறத பத்தி நான் உனக்கு சொல்லி தெரிய வேணுமா?" என்றாள்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பத்மநாபன் ராஜேஸ்வரியிடம் " தோ பாருங்கோ.பிள்ளையாத்துகாரா, பொண்ணாத்துகாரான்னு பார்மாலிடி பாக்றதுக்கு இப்போ டைம் இல்ல. நடுவுல ஒரு நாள்தான் இருக்கு. நீங்க பொடவ, நக ஆகியவத்த வாங்கறத பாருங்கோ. மீதி அய்ட்டங்களை நான்,சாரங்கன்,ரகு மூணு பேரும் சேர்ந்து வாங்கிண்டு வந்துடறோம். கணக்கு வழக்கெல்லாம் அப்பறமா பாத்துகலாம் "என்றார். ராஜேஸ்வரி தன்னுடைய ஹேண்ட்பேக்கிலிருந்து ஐயாயிரம் ருபாயை எடுத்து பத்மநாபனிடம் கொடுத்து "அதிகமானா நீங்க போட்டுவாங்கீ கோங்கா மாமா.அப்பறமா தந்துடறேன்"என்றாள்.
"சரி மாமி.அப்படியே ஆகட்டும் "என்ற பத்மநாபன் அவள் கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டார்.
பின் குறிப்பு:
என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு என் கதைகள் ரொம்ப பிடிக்கும். ஆனால் அவனுக்கு ஒரு ஆச்சர்யம் .அதாவது, எப்படி என் கதா மாந்தர்கள் அனைவருமே நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று.நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லையே என்பது அவன் ஆதங்கம். கதை என்பது கொஞ்சம் உண்மையை, நிறைய கற்பனை சேர்த்து கொடுப்பதே. நிஜ வாழ்க்கையில் தான் வில்லன்களும், முதுகில் குத்துபவர்களும், கூடவே இருந்து குழி பறிப்பவர்களும் நிரம்பி உள்ளார்கள்.கற்பனை கதையில் அவர்களை நீக்கிவிட்டு எல்லோர்களையும் நல்லவர்களாகவும் ,உப்புக்கு சப்பாணி என்பது போல ரங்கநாயகி போன்ற சாப்ட் வில்லிகளையும் படைக்கிறேன். இது எனக்கு மன நிறைவை அளிக்கிறது.என் கதை ஒரு Utopian society யில் நடக்கிறதாகவே இருக்கட்டுமே. என்ன சொல்கிறீர்கள்?
No comments:
Post a Comment