கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பிரசாதம் கும்மாயம் - செய்வது எப்படி தெரியுமா?
பண்டைய தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு வகையான கும்மாயம் சுமார் 2000 வருட பழமையானதாகும். இன்றைய கோதுமை அல்வா, ரவா கேசரி, மைசூர் பாகு ஆகிய அனைத்திற்கும் முன்னோடி இந்த கும்மாயம்!
கும் > குமை > குமைதல் - என்றால் புழுங்குதல் என்று பொருள். கும் > கும்மாயம் என்றால் புழுங்கிக் குழைந்த பருப்பு என்று பொருள்.
கோயில் கல்வெட்டுகளும் தமிழ் இலக்கியங்களிலும் கும்மாயம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
'பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம், இயற்றி' - என்ற மணிமேகலைப் பாடலும்,
'கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
குடத் தயிர் சாய்த்துப் பருகி...' - பெரியாழ்வார் திருமொழியின் பாசுரமும்,
அம்பாசமுத்திரத்திலுள்ள பழமையான கோயிலான எரிச்சாவுடையார் கோயிலில் காணப்படும் கல்வெட்டும் கும்மாயத்தின் பெருமைக்கான சான்றுகள் சில.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பெருமாளுக்கு பிரசாதமாகப் படைக்கப்பட்டு வரும் கும்மாயத்தின் செய்முறையைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
ஒரு அடி கனமான வாணலியில் உளுந்து, பாசிப்பருப்பு, அரிசி ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து, அவை ஆறியதும் ஒன்றாகக் கலந்து மிக்ஸியிலிட்டு நன்றாக பொடித்து எடுக்க வேண்டும்.
அதே வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றி கருப்பட்டியைக் கரைத்து நன்கு வடிகட்டவும் . அரைத்து வைத்துள்ள மாவையும் கருப்பட்டிக் கரைசலையும் கட்டியில்லாமல் கலக்கவேண்டும்.
அடுத்து வாணலியில் நெய்விட்டு கரைசலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி விடவும். நடுநடுவே நெய் சேர்த்து, களி பதமாக வெந்ததும் ஏலக்காய் பொடி தூவி, நெய்யை ஊற்றி, இறக்க வேண்டும். அவ்வளவுதான் அற்புதமான ருசியில் கும்மாயம் தயார்.
No comments:
Post a Comment