Tuesday, February 6, 2024

அபய ஹஸ்த ஶ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமி திருக்கோவில்

 அருள்மிகு அபய ஹஸ்த ஶ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமி திருக்கோவில்

 திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ் நாடு🌹

சனாதன தர்மத்தில் நதிகள் எல்லாம் பூஜைக்கு உரியவனையாகும். எல்லா நதிகளும் பூஜைக்குயுரியவையாயினும் கங்கையும், கவிரியும் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. நதியின் ஓட்டம் வடக்கு நோக்கி திரும்புமே ஆனால், எங்கு அப்படி வடக்கு நோக்கி பாய்கிறதோ அவ்விடத்தில் அந்நதியை பூஜிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. அத்தலம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. புனித கங்கை வடக்கு நோக்கி பாயும் தலம் வாரணாசியாகும், அதனால் அத்தலம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. புனித காவிரி வடக்கு நோக்கி பாயும் தலம் திருக்கோடிக்காவலாகும். அதனால் இத்தலம் காவிரியின் விசேஷ தலமாக கருதப்படுகிறது.

திருக்கோடிக்காவல்

திரி-கோடி என்றால் மூன்று கோடி என்று பொருள்படும். மந்திரங்கள் மூன்று கோடி உள்ளன, ஒவ்வொரு மந்திரத்திற்கும் தனி தேவதையுண்டு. இம்மூன்று கோடி தேவர்களும் தங்கள் மகிமையை நினைத்து சற்றே கர்வம் அடைந்தனர். இவர்கள் துர்வாச முனிவரிடம் விவாதத்தில் ஈடுப்பட்டனர் தங்களுடைய சக்தியினால் தான் எல்லாம் நடப்பதாக வாதம். வாதத்தின் ஒரு நிலையில் துர்வாசர் இத்தேவர்களை சபித்து விட்டார். சக்தியிழந்தவர்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்டு பரிகாரமும் கேட்டனர். காவிரி "உத்திரவாஹினி"யாக [வடக்கு நோக்கி பாய்வது] உள்ள இடத்தில் சிவனை குறித்து தவம் இருக்கச் சொன்னார். மூன்று கோடி தேவர்களும் இத்தலத்தை கண்டுபிடித்து இங்கு தவம் எய்தினர்.

மூன்று கோடி தேவர்களும் சிவனாரை குறித்து தவம் செய்து, துர்வாசரின் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றமையால் இத்தலத்து சிவனாருக்கு கோடீஸ்வரர் என்றும் இத்தலம் திரு-கோடி-கா என்று மருவி திருக்கோடிகாவல் என்று வழங்கப்படுகிறது.

வேதவிற்பன்னர்களின் கிராமம்

மந்திரங்களின் தேவர்கள் தங்கள் பெருமை, சாபம் மற்றும் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட இடமே இந்த க்ஷேத்திரம். எனவே வேத அறிஞர்கள், பண்டிதர்கள் இந்த கிராமத்தை தங்களின் வசிப்பிடமாக கொள்ள ஆசைப்பட்டதில் அதிசயம் இல்லை. வேதத்தின் புரவலர்களாக இருந்த ஆட்சியாளர்களும் இந்த இலட்சியத்திற்கு கணிசமாக உதவினார்கள். தஞ்சாவூர் நாயக்கின் ஆட்சியின் போதும், குறிப்பாக அச்சுதப்ப நாயக்கர் மற்றும் ரகுநாத நாயக்கரின் ஆட்சியின் போதும் பல வேத அறிஞர்களும், இசைக்கலைஞர்களும் ஆதரவளிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ஆட்சியாளர்களின் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சதரின் ஆதரவுடன் பல அறிஞர்கள் வந்து திருக்கோடிக்காவலில் குடியேறினார்கள்.

அக்ரஹாரமும் கோவிலும்

இப்படியாக திருக்கோடிக்காவல் அக்ரஹாரம் வேதவிற்பன்னர்களுக்கும், சங்கீத விற்பன்னர்களுக்கும் வசிக்கும் பெரும் தலமாக விளங்கியது. எல்லா அக்ரஹாரத்திலும் கோவில் இருப்பது போல் திருக்கோடிக்காவல் அக்ரஹாரத்திற்கும் ஒரு கோவில் இருந்தது. வேதமும், சங்கீதமும் தழைத்து இருக்கும் இடத்தில் "நவவ்யாக்ரண பண்டிதனு"ம் "கந்தர்வ்வித்யா தத்வஜ்ஞாயனு"மான ஶ்ரீஆஞ்சநேயருக்கு கோவில் இவர்கள் கட்டியது பொருத்தமே. 

இந்த கோவிலும் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரால், அவரது திக்விஜயத்தின் போது ஒரு வித்வத்சபை நடந்தது,  அது வெற்றிகரமாக நடைபெற்றதின் நினைவாக, கூடவே இருந்து அந்த வித்வத்சபையை வெற்றிகரமாக நடத்திக்கொடுத்ததற்க்கு ஶ்ரீ ஆஞ்சநேயருக்கு

நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஸ்ரீ வியாசராஜரின் கரகமலங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள்.

ஶ்ரீஆஞ்சநேயர் கோவில்

அக்ரஹாரத்திற்கு நுழையும் பொழுதே இருக்கிறது, திருகோடீஸ்வரின் கோயிலில் இருந்து அதிக தூரமில்லை. கிரமத்தின் தபால் நிலையத்தின் எதிரில் இருக்கிறது. சுற்று சுவருடன் மேற்கு நோக்கி கோவில் அமைந்துள்ளது. கோவில் நுழைவில் அழகிய வளைவும் அதில் ஶ்ரீராம பரிவாரத்துடன் கூடிய புடைப்பு சிலையும் கோவிலுக்கு அழகை கூட்டுகிறது. பின் நீண்ட ஓடு வெய்த பாதை, அதன் நடுவில் பலி பீடம், பின் முன் மண்டபம். மண்டபத்தின் முகப்பு வளைவில் ஶ்ரீஆஞ்சநேயரின் புடைப்பு சிலை. பின்பு கர்பகிரஹம். கோவிலை வலம் வர பாதையுள்ளது. கர்பகிரஹத்தின் மேல் அழகிய பெரிய விமானம், பக்த, சஞ்சீவி, வீர ஆஞ்சநேயர் சிலைகள் விமானத்தின் மூன்று புறமும் அலங்கரிக்கின்றன. கோவிலில் சுவாமியின் அபிஷேகத்திற்கு நீர் எடுக்க கிணறும், துளசி மாடமும் உள்ளது.

கோவிலில் நுழை வாயிலில் இருந்தே மூலவரை தரிசனம் செய்யலாம். முன்பு ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில்கள், ஶ்ரீசஞ்சீவிராயர் கோவில் என்று அழைக்கப்பட்டதோ அப்படி தான் இக்கோயிலும் அழைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது "ஶ்ரீ அபய ஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோயில்" என்று அழைக்கப்படுகிறது. உற்சவ மூர்த்தியும் கர்பகிரஹத்தில் உள்ளது.

ஶ்ரீ ஆஞ்சநேயர்

திர்பங்கா என்னும் மூன்று வளைவுகளுடன் ஶ்ரீஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் வசிகரமாக காட்சி தருகிறார். அவரது தாமரை திருபாதங்களை தண்டை, கால் வடம் அலங்கரிக்கிறது. இடுப்பில் அலங்காரமான அரையணி உள்ளது. இடது திருக்கரம் இடது தொடையை ஒட்டியுள்ளது, கையில் சௌகந்திகா புஷ்பத்தின் தண்டை பிடித்துள்ளார். முப்புரி நூல், மூன்று மணி மாலைகள் மார்பில் காணப்படுகிறன. சற்றே உயர்ந்து காணப்படும் வலது திருகரம் அபய முத்திரையை காண்பிக்கின்றது. ஒளிரும் முகம் சற்றே சாய்ந்து ஒயிலாக காணப்படுகிறது. காதுகளில் தோளை தொடும் குண்டலம் அணிந்துள்ளார். அவரது தலை முடி அழகாக சீவிவிடப்பட்டு முடிச்சு போடப்பட்டுள்ளது. காருண்ய மயமான கண்கள் பக்தர்களை ஆசீர்வதிக்கிறது. நேரில் நிற்கும் போழுது அவரது கண்கள் கருணையை பொழிவதை பக்தர்கள் உணர முடியும்.

அனுபவம்

காருண்யமயமான அபய ஹஸ்த ஆஞ்சநேயரை நாம் வணங்கி, என்றும் தழைக்கும், நிலைக்கும் ஆனந்தத்தையும், கூடும் அன்பையும் வாழ்வில் நாம் பெருவோமாக.

இது ஆன்மீக பூமி, சித்தர்களும், மகான்களும்,முனிவர்களும்,யோகிகளும், மகரிஷிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஸ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ ஶ்ரீ ராமஜெயம், 

ராம நாமமே சொன்னால் அங்கே வருவார் ஹனுமார், க்ஷேமங்கள் யாவையும் தருவார், ஶ்ரீ ராம பக்த ஹனுமார்.

ஜெய் ஸ்ரீ சீதாராம்🙏

🟥🟥🟥🔥🟥🟥🟥

எல்லாம் அவன் சித்தம்

       சர்வம் சிவமயம் 

   🟥🟥🟥🔶🟥🟥🟥

No comments:

Post a Comment