Wednesday, September 2, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 29

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 29
(சுஜாதா&வெங்கடேசன்

ஸ்ரீவைகுண்டம்

ஆட்டோலேந்து எறங்கி கோயில்ல நுழையறோம். 

9 நிலைகளும்,110 அடி உயரமும் கொண்டுள்ளது ராஜகோபுரம்.

மூலவர் வைகுண்டநாதர், சந்திர விமானத்தின் கீழ், ஆதிஷேசன் குடை பிடிக்க, நான் கு கரங்களுடன், மார்பில் மாகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சித் தருகிரார்

உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூ தேவி, ஸ்ரீதேவியுடன் காட்சித் தருகிறார்.

இரண்டு தாயார்களுக்கும் டஹ்னித்தனி சன்னிதிகளும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளது.

தலவிருட்சம்-பவளமல்லி
உறசவர், கள்ளபிரான் என அழைக்கப்படுவதற்கும் காரணம் தரும் மரபுவழிச் செய்தி...

ஸ்ரீவைகுண்டம்நகரில் திருட்டுத் தொழில் செய்து வந்த  காலதூஷகன் என்ற திருடன், வைகுண்டநாதரை வழிப்பட்டு பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான்.கிடைத்தப் பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்தி விட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான்.ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்ற போது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக் கொள்ள இவன் மட்டும் தப்பி விட்டான்.அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான்.காலதூஷகன் வைகுண்டநாதரை வேண்ட, பெருமாளே காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார்.அரசனிடம், அவன் தன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறிவிட்டதை உணர்த்தி, பின் அரசனுக்கும், காலதூஷனுக்கும்  காட்சி தந்து அருளினார்.திருடனாக வந்தமையால்பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப் படுகிறார்

நவதிருப்பதியில் முதன்மையானத் தலம்.நம்மாழ்வார், நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாக பாடியுள்ளார்.

இங்குள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்து அற்புதமான சிற்பங்கள் உள்ளன...
விநியோகம் நடந்துண்டு இருக்கு 
மடப்பள்ளி மாமாட்ட 50 ரூ எக்ஸ்ட்ரா கொடுத்து தடி தடியா ரெண்டு கோயில் தோசை வாங்கிண்டு ப்ரெக் ஃபாஸ்ட் முடிச்சிக்கறோம். 
(அழகர் கோயில் தோசை அளவு (ரெசிப்பி கீழே)இல்லேன்னாலும் வயிறு திம்னு ஆயிடறது...
ஆட்டோ கெளம்பரது. அடுத்து எங்க அழைச்சிண்டு போறார் தெரியல..
படம் ஸ்ரீவைகுண்டம்





No comments:

Post a Comment