Sunday, September 20, 2020

நெல்லைச்சுற்றுலா 14

 நெல்லைச்சுற்றுலா 14

குற்றாலம் பகலில் மட்டும்தான் காணக்காண திகட்டாத இயற்கை அழகை வாரி வழங்கும் சுரங்கம்..இரவு வந்ததும் மற்ற கிராமங்களைப்போல அமைதியாகி விடுகிறது..பெரிய கடைத்தெருவோ,சுவையான ஓட்டல்களோ இல்லை. எனவே மிக அருகில் உள்ள தென்காசியில் தங்குவது சிறப்பு..

நாங்களும் தென்காசி புறப்படுகிறோம்...

தென்காசியில் விசுவநாதரை தரிசிக்கும் முன் இரண்டு பெருமாளையாவது சேவிக்கனும்னு சொல்றேன்..

கூகுளைப்பார்த்து முதலில் பொருந்தி நின்ற பெருமாளை

சேவிக்க வழி கேட்டு செல்கிறோம்...

இக்கோயிலில் பொருந்திநின்ற பெருமாள் சன்னதியும், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. 

அடுத்து வழி விசாரித்து ஒரு பர்லாங்க் தூரத்தில்  விண்ணகர பெருமாள் கோயில் செல்கிறோம்...பழைய மருத்துவமனை அருகில் பழங்கால கோயில்...

அங்கிருந்து பஜார் வழியே விசுவநாதர் கோயில்...பஜாரில் திருநெல்வேலி அல்வா வாங்கி சாப்பிட்டு கோயிலில் நுழைகிறோம்..

முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான்தோன்றி, தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும் போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர்அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று *பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம் ஆகும். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.முற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலகட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பலமுறை வென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

மொட்டைக் கோபுரம்

கி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இடி விழுந்து தீ வாய்க்கப்பட்டு மொட்டையாய், இருகூறாய் பொலிவிழந்து நின்றது. 1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1963-ல் இராஜகோபுரத்திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 

1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது.

இக்கோபுரத்தின் சிறப்பு " இக்கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும் பாதி பகுதி நுழைந்தபின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசுகிறது. இது போன்ற சிறப்பு வேறெந்த கோவிலிலும் கிடையாது..

அதற்குமுன் இவரிடம் ஆசிரியராக வேலை பார்த்து தென்காசி மாற்றல் வாங்கி சென்ற ஆசிரியர் ஐயப்பனுக்கு போன் செய்கிறார்..

தென்றலை அனுபவித்த வண்ணம் பழைய நண்பருடன் பேசிவிட்டு கோயிலில் நுழைகிறோம்..

 படம் பெருமாள் கோயில்கள், விசுவநாதர் கோபுரம் 

நண்பருடன்...




No comments:

Post a Comment