Tuesday, September 29, 2020

முக்தி நாத் பகுதி 3

 🙏🙏🙏🙏🙏

முக்திநாத்

....ஒரு முரட்டுப்பயணம் பகுதி 3

 கேசவனுக்கு அக்டோபர் 27 அன்று முழுவதும் பலவித போன் போட்டும் போனை அணைத்து வைக்கிறார். இரண்டு நாளில் கிளம்ப பயண ஏற்பாடுகள் நான் செய்வதுடன் மைத்துனி ஷட்டகரிடமும் சொல்ல வேண்டி உள்ளதுடன் இவர் ஏமாற்றா என திடீரென லேசான சந்தேகமும்கிளம்பி அன்று முழுவதும் 85,000 ஐ எண்ணி  தலையை பிய்த்துக்கொள்கிறேன். அவர் நம்பருக்கு வாட்சப் உண்டு என்பதால் மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்புகிறேன்

அக்டோபர் 28

திடீரென கீழ்க்கண்ட மெசேஜ்கள் வருகிறது..,

முதலில் என் ஷட்டகர் (சகலை) அவருக்கு அனுப்பியது.  

1)We saw the revised  tour programme. Kindly confirm know this be the final and no change will be there. When will you book tickets for revised programme? Based on your reply we have to book tickets to Chennai.

After booking tickets for both upward and downward, kindly send details of train, departure from time ,etc also return . 

In the travel schedule you have mentioned 8 th as departure to Allahabad and reaching Allahabad on 9th. Please clarify

அவர் நேரடியாக அனுப்பாமல் கீழ்க்கண்ட மெசேஜ் அனுப்புகிறார்.

These two numbers are tour operator and his wife's. Call him and enquire about his tour programmes. Inform him that you r calling from BLR and you are interested in his tour,  Details about payment,mode of payment  etc., Don't inform you r related to us.. if he ask for money tell him that your friend in Chennai will make payment in person and collect his address

மேற்கண்ட மெசேஜ் ஒன்றும் புரியாமல் நாங்கள் விழிக்க

இன்னொரு மெசேஜ்....

3)Mama 8th நாள்  seriyelai tkt book panaudana ungaluku program anuparean

Organaised program tkt purchase panautanea anupamudiyum

4)டிக்கெட் வாங்கிவிட்டாச்சு

9 நவம்பர்..

மேற்கண்ட பார்வர்ட் மெசேஜ்படி டூர் நவம்பர் 8 என புரிந்து கொள்ளணுமாம். மீண்டும் சிறு நம்பிக்கை வந்து போன் அடித்தால் நேரில் வருவதாக சொல்லி வந்து அன்று மாலை வந்து காபி சாப்பிட்டு ஒரு மணி நேரம் பேசி அக்டோபர் 8 நிச்சயம் என நம்பிக்கை தந்து பழைய டிக்கட்டை வாங்கிப் போகிறார்.  

8 ம்தேதி கிளம்பி 20 திரும்புவதாக டூர் ப்ளான் அனுப்புகிறார்.  மீண்டும் மனம் லேசாகிறது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் 8 ந்தேதி கிளம்ப டிக்கட் வரவில்லை. கேட்டால் டிக்கட் இல்லை கடைசி நிமிடத்தில்தான் தட்கல் டிக்கட் வாங்க முடியும் என்கிறார். ஐயோ பாவம் அது வேறு நஷ்டமாச்சே என பரிதாபப்படுகிறேன்.  

அடுத்தடுத்த நாட்களில் டூர் சந்தோஷம் +கவலை என மாறி மாறி நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் கழிகிறது. 

நவம்பர் 4…, கேசவனிடமிருந்து ஒரு ஃபைல் மெசேஜ் வருகிறது.  ஆனால் அந்த ஃபைலை என் போனில் திறக்க முடியாததால் என் பாழாய்ப்போன போனை திட்டிக்கொண்டே அதற்குள் என்ன வெடிகுண்டோ என்ற கவலையில் அதனை அக்காவிற்கும் ஷட்டகருக்கும் அனுப்புகிறேன். 

ஷட்டகர் தன் போனில் திறந்து cancellation charges are borne by the company என எழுதியிருப்பதாக சொல்கிறார். 

என்ன கான்சலேஷன் ? என்ன சொல்ல வருகிறார் என தெரியாமல் அவர் போனையும் எடுக்காததால் மீண்டும் மன் உளைச்சலில் தடுமாறுகிறேன். 

             தொடரும்…

No comments:

Post a Comment