நெல்லை சுற்றுலா
நேற்றைய தொடர்ச்சி...
அவங்களோட பில்டப் பார்த்த உடனே ஸ்டெர்லிங் ரிசார்ட் போல அத்தனை ஊர்லயும் இவங்க ஓட்டல் கட்டி எங்களுக்காக காலியா வச்சிருக்காப்போல...
இவர் உடனே அவ்ளவ்லாம் முடியாது நாங்க பின்னாடி யோசிச்சு சொல்றோம்ன உடனே அந்த பெண் வேற ஸ்கீம் இருக்கு 10 வருஷம் 50,000/- அப்டீங்கறது.
சரி நாங்க வீட்டுக்கு போய் பணம் ஏற்பாடு பண்ணிட்டு வரோம்னு இவர் எழுந்திருக்க இன்னியோட இந்த ஸ்கீம் ஓவர்... நாளையிலேர்ந்து ஒரு லட்சம்..ங்கறது...இவர் மறுபடியும் எழுந்தவுடன் ஒருத்தர் வந்து கைக்குள் 2000/- நோட்டை அடுக்கிண்டு வந்து ஒத்தர் இன்னிக்கு ஸ்பெஷல் ஸ்கீம்ல சேர்ந்துட்டார் பில் போடுங்கறா...இவரைப்பார்த்து கடைசி சான்ஸ் 40000/- பத்து வருஷம் 140 நாள் ஃபைவ் ஸ்டார் ஓட்டல் ஒரு நாள் மெயின்டனன்ஸ் மட்டும். just 900-2000 ங்கறா....இவர் அதற்கும் மசியலன்ன உடனே உங்க ஒய்ஃப் பேர்ல பணம் கட்டினா 2 கிராம் தங்க காசு தருவோம்ங்கறா..இவருக்கு நப்பாசை துளிர் விடறது. கண்ணெதிரே ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ்,ஊட்டி,சிம்லா,குலு ,மணாலி,ஃபைவ்ஸ்டார் ஓட்டல்,நீச்சல் குளம்,சுடச்சுட மார்னிங் ப்ரெக்ஃபாஸ்ட்னு இதுவரை சினிமால பார்த்த காட்சிகள் வந்து போறது...
இவர் இப்ப கையில் 5000/-தான் இருக்கு. இன்னிக்குள்ள ஏற்பாடு பண்ண முடியாது. வீடு கூடுவாஞ்சேரி ங்கறார்..அதற்கென்ன உங்களோட இதோ இவரை வீட்டுக்கே அனுப்பறோம் ..இன்னிக்கே புக் பண்ணிக்கனும்ங்கறா....இதென்னடா வம்பா போச்சுன்னு இவர் ஏடி எம் கார்ட எல்லாம் எடுத்து பார்த்து மனசுக்குள்ள எதோ கணக்கு போடறார். அவள் உடன் பக்கத்துல மிஷின் இருக்குன்னு ஒரு பையன அனுப்பறா...இவர் இருக்கற கார்டை எல்லாம் சொருகி எல்லாப்பணத்தையும் சுரண்டி எடுத்துண்டு வந்து பணத்தை கட்டறார்..
உடனே எங்கள அழைச்சிண்டு போய் பிரஸ்டிஜ் வெகேஷன்னு பில் போட்டு தராங்க..இவர் ரொம்ப சாமர்த்தியமா நீங்க சொன்ன கிப்ட் வவுச்சர் எங்கன்ன உடனே .கொஞ்சம் இருங்கன்னு சொல்லி கோவா பாக்கேஜ்னு ஒரு சர்ட்டிபிகேட் ,ஒரு பிளாஸ்டிக் டப்பா கிப்ட் ரெண்டையும் கொடுக்கறத ஒரு போட்டோ வேற எடுத்துக்கறா...அப்ப அந்த 2 கிராம் gold coin னு ?விடாம கேக்கறார். இரண்டு நாள்ள போன் பண்றோம் கறார்.
ரொம்ப கன்ஃப்யூஷனோட மறுபடியும் வீட்டுக்கு வரோம்...அப்பப்ப கூகுள் செக் பண்ற இவர் ரொம்ப சாமர்த்தியமா பிடுங்கிண்டுடப்போறாங்கன்னு ஸ்மார்ட் போன் வீட்ல வச்சுட்டு வந்ததால எதையும் செக் பண்ணிக்க முடியாம குழப்பத்தோட வீடு வந்து
இவர் கூகுள் தொறந்து ப்ரஸ்டீஜ் வெகேஷன்னு போட்டு search பண்றார்..
No 1 fraud companyனு யாரோ கமண்ட் எழுதி இருக்கான்...🤣🤣😄😄😄😄😬😬😬😳😳😭😭
அனுபவம் தொடரும்...
No comments:
Post a Comment