இந்த மாதம் முழுவதும் புரட்டாசியில் தினம் ஓர் வைணவ ஆலயம் பற்றி தெரிந்து கொள்வோம்*
🌿 * புரட்டாசி மாதம் வைணவ மாதம், பெருமாள் மாதம் * 🌿
*இன்று 🔔 *புரட்டாசி 2🌹 (18.09.2020),
🌿🌿 *திருக்கோயில் 108 திவ்யதேசத்தின் அருள்மிகு அமிர்தநாராயணப் பெருமாள் திருக்கோயில்,திருக்கடையூர் ஏழாம் ஸ்தலம் 🌿🌿 ஆலயம் பற்றி பார்ப்போம்,
அன்புடன் சேலம் மணிகண்டன்இளங்கோ &
கார்த்திகேயன்தெட்சணமுர்த்தி, *
சுவாமி : அமிர்தநாராயணப் பெருமாள்.
அம்பாள் : அமிர்தவள்ளி.
ஊர் பெயர்கள்:
திருக்கண்டியூர்,திருமூர்த்தி சேத்திரம்,கமாலாரண்யம்
மற்ற தெய்வங்கள்:
கமலநாதன்
பிறசன்னதிகள்:சப்தஸ்தான, பஞ்சபூதலிங்கங்கள். ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர், சக்ரத்தாழ்வார், பிரம்மா-சரஸ்வதி.கல்பசூரியன். ரிஷபத்தில்-அர்த்தநாரீஸ்வரர், சுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை.
தீர்-பத்ம(பலி)-கமல,கபாலபுஷ்கரணி(கதா).
வி-கமலாக்ருதி.
3நிலைராஜகோபுரம்
தலச்சிறப்பு :
ராமானுஜர் வழிபட்ட தலம். அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரரை தரிசித்த பிறகு, அமிர்த நாராயண பெருமாளையும் தரிசனம் செய்தால் தான், திருக்கடையூர் வழிபாட்டு பலன் முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. ராகு–கேது பரிகார தலமாகவும் கருதபடுகிறது.
திருத்தல வரலாறு :
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தனர். அசுரர்களை ஏமாற்றி விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார். மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது. பார்வதிதேவியின் அருள் இல்லாததால் தான் இவ்வாறு மாற்றம் ஏற்பட்டதாக விஷ்ணு கருதினார். தனது மார்பில் அணிந்திருந்த திருவாபரணங்களை கழற்றி, அவற்றைப் பார்வதிதேவியாகக் கருதி பூஜித்தார். அப்போது அம்பாள் அபிராமி என்ற திருநாமத்துடன் அங்கு தோன்றி, அமிர்தம் கிடைக்க அருள்பாலித்தாள். அமிர்தத்தை தேவர்களுக்கு விஷ்ணு பங்கிட்டு கொடுத்தார்.இதனை அறிந்த ஒரு அசுரன், தேவரைப் போல வடிவம் தாங்கி அமிர்தத்தை பருகினான். சாகாவரமும் தேவபலமும் பெற்றான். அவனை வெட்டினார் விஷ்ணு. அமிர்தம் பருகியதால் அவனுக்கு உயிர் போகவில்லை. துண்டான உடல்கள் ராகு, கேது என்ற பெயர் பெற்று, நவக்கிரக மண்டலத்தில் இணைந்தனர். அபிராமி அம்மையின் தோற்றத்திற்கும், தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க காரணமான விஷ்ணு திருக்கடையூரில் அமிர்த நாராயண பெருமாள் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவியும் உள்ளனர். அமிர்தவல்லித் தாயாரிடம் திருமணமாகாத பெண்கள் வேண்டிக்கொண்டால் சிறந்த மணமகன் அமைவார் என்பது நம்பிக்கை.
சிறப்புகள்:
கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது தலையை கிள்ளி எறிந்த சிவனின் கையிலே அந்த பிரம்ம கபாலம் ஒட்டிக்கொள்ள பூமியில் இங்கு கதாதீர்த்தத்தில் நீராட பிரமனின் கபாலம் நிறைந்து அரன் கையைவிட்டு நீங்கிய தலம்-அரசாபவிமோசனப்பெருமாள். காசியில் 1லிங்கம் காணாதது கண்ட வசிஷ்ட்டர் சூரியனையும், சனியையும் சபிக்க இங்கு வழிபட்டு அரை சாபம் தீர்ந்த தலம். பஞ்ச கமல ஷேத்திரம்-கமலநாதன், கமலவல்லி, கமலதீர்த்தம், கமலாக்கிருதி, கமலாரண்யம். சரஸ்வதி நதிக்கரையில் யாகம் செய்த முனிவர்கள் யாகத்தின் பலனை யாருக்கு கொடுப்பது என்ற நிலையில் ப்ருகு பிரம்மாவைக் காணச் செல்ல அவர் ப்ருகுவை கண்டு கொள்ளவில்லையாதலால் பிரம்மாவிற்கு தமோ குணம் என்று சிவனைப் பார்க்கச் செல்ல சிவன் ராஜோ குணம் உள்ளவர் என்று எண்ணி வைகுண்டத்தில் பெருமாளை பார்க்க அவரும் கண்டுகொள்ளாமல் இருக்க அவர் மார்பில் எட்டி உதைக்க பெருமாள் அவர் கால் வலிக்கும் என அவர் காலில் இருந்த கண்ணை அமுக்க தன் நிலையடைந்த ப்ருகி தான் செய்த தவறுக்கு வருந்த அவருக்கு ஆறுதல்-ப்ருகுநாதன்.மகாபலி தன் பாவங்கள் போக குளத்தில் நீராடி வழிபட்டு அருள்-பலிநாதன். சந்திரன் வழிபட்டு தன் ரோகம் தீர்ந்தது.
நடைதிறப்பு : காலை 6.00 முதல் 8.30 மணி வரை, மாலை 4.30 முதல் 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு அமிர்தநாராயணப் பெருமாள் திருக்கோயில்,திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
No comments:
Post a Comment