Sunday, September 20, 2020

பெரியவா வேறு, பாதுகை வேறல்ல

 ஜய ஜய சங்கரா....

நான் சொல்லப் போகும் இந்த சம்பவம் நடந்து சுமார் மூன்று வருஷங்கள் இருக்கும். எனக்கு நெருங்கிய நண்பர் வீட்டில் நடந்தது.

அவர்கள் வீட்டில் பிறந்த பெண் குழந்தை , பிறந்து பல மாதங்கள் சென்றும், அசைவில்லாமல், திரும்பப் படுக்கவோ, குப்புறக் கவிழவோ இல்லாமல் இருந்து அனைவருக்கும் பெரும் மனக் கவலையைக் கொடுத்து வந்தது.ஸதா இதே கவலை, பெரியவாளிடம் பிரார்த்தனை. டாக்டர்கள் 2 வயதான பின் சோதனைகள் செய்து பார்க்கலாம் ரொம்ப சின்னக் குழந்தை என்று சொல்லிவிட்டார்கள்.

அந்தத் தருணம் வந்து டாக்டரும் மரு நாள் டெஸ்ட் எடுக்க நேரமும் குறித்து விட்டார்கள்!

இதற்கிடையில் பெரியவா பாதுகை நியூஜெர்சி யில் மணிமண்டபத்தில் புறப்பட்டு ஒவ்வொரு state  ஆக பயணம் வந்து கொண்டிருந்த சமயம்! 

இவர்கள் கலிஃபோர்னியாவில் தங்கள் அகத்துக்கும் பெரியவா வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் டாக்டர் appointment க்கு முதல் நாள்!

பெரியவாளும் வந்தா எல்லா மனுஷாளும் புடை சூழ தூம் தாமாக!

வந்த மனுஷா நிறைய நேரம் பந்ததியா பூஜை, naevaedhyam ஹாரத்தி முடிஞ்சு புறப்படும்போது , குழந்தையின் அப்பாவை பாதுகையை சிரசில் தாங்கி வருமாறு சொல்ல, குழந்தை தானாக நடந்து வர முடியாததாக இருந்ததால் பக்கத்தில் இருந்த நண்பரிடம் விட்டுச் சென்றார் பாதுகைகளைத் தாங்கியபடி! திரும்ப வந்து, குழந்தையை எடுத்துக் கொண்டு, ஒர் இடத்தில் இறக்கி வைத்து விட்டு வந்த விருந்தினரை உபசரிக்க சென்றார். குழந்தையின் அம்மாவும் வந்தவர்களுக்கு விருந்து உபசாரம் செய்ய குழந்தை நடை பழக , எழுந்திருக்க ஒர் walker பக்கத்தில் இருந்தது! ஒரு இயக்கமும் இல்லாமல்.இருந்த குழந்தை திடீரென தானாக எழுந்து, ஒரு பிடிமானமும் இல்லாமல் பூமியிலிருந்து கால் உயரக் கிளம்ப உற்சாகமாகக் குதித்து விழையாடியதைக் கண்டுப் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்! பெரியவா வேறு, பாதுகை வேறல்ல! அவர் வந்து அந்தத் தூளி குழந்தையைக் குணப்படுத்தியது பெரியவா பக்தர்களுக்கு அதிசயம் இல்லை ! 

பக்தி என்றால் வெறும் பூஜை ஸ்லோகம்.மட்டும்.அல்ல ,! அவன் அருளால் அவன் தா ளைச் சிக்கெனப் பிடிப்பது, எங்கு எழுந்தருள் வ்து இனியே  என்று நம்மிடமே தக்க வைத்துக் கொள்ளும்.பக்தி இருந்தால் எதுவும் சாதிக்கலாம் என்பதன் எடுத்துக் காட்டு இந்த சம்பவம்,!

எங்கும் நிறைந்த பரம்பிரம்மம்!!

கூடுதலான செய்தி இந்தக் குழந்தை பிறக்கும் முன்பே பெரியவா அதன் பாட்டியிடம் சொப்பனத்தில் வந்து, பெண் குழந்தை பிறக்கும், காமகோடி என்ற நாமகரணம் செய் என்ற உத்தரவுடன், பிடி குங்குமமும்.கொடுத்திருக்கிறார் ! காலையில் பார்த்தால் உள்ளங்கை முழுதும் சிவப்பாக குங்கும அடையாளத்துடன் காணப்பட்டது ஒரு அதிசயம் இல்லை பெரியவா விஷயத்தில் !!

அவர் உத்தரவின்படி காமகோடி என்ற நாமகரணம் சூட்டப் பட்டதாம் !!

பாக்யசாலிகள்!

No comments:

Post a Comment