நெல்லைசுற்றுலா பகுதி10
தென்காசி பஸ் ஸ்டாண்ட் போற வரைக்கும் ப்ரஸ்டிஜ் காரன் கிட்ட பேசறார் அவன் புக் பண்ணியிருக்கறதா சொன்ன
ஓட்டல் கான்சலாயிட்டதாவும் இப்ப வேற ஒரு ஓட்டல் பண்ணியிருக்கேன். இது ஊருக்குள்ளேயே ...பேரு க்ரீன் ஹில்ஸ்னு சொல்லி பீதிய கிளப்புறான்...மறுபடியும் ப்ரஸ்டிஜ் காரன்கிட்டயும்,
க்ரீன் ஹில்ஸ் வில்லா காரன்டயும் மாத்தி மாத்தி பேசிண்டே வரார்.
பாத்தியா,இஷ்டப்பட்ட ஊருக்கு போனமா,கெடச்ச ஓட்டல்ல தங்கினமா ஊர சுத்திட்ட்டு அடுத்த ஊருக்கு போனமான்னு இருந்தோம். நீ மத்தவா மாதிரி ரூம் புக் பண்ணிட்டு அழைச்சிட்டு போனாதான் வருவேன்னு சொன்னதால இப்ப பணமும் தெண்டம் அழுது இந்த பாடு பட வேண்டியிருக்குன்னு என்ன முறைக்கறார்...
தென்காசி குற்றாலம் பஸ்ல பராசக்திகாலேஜ்கிட்ட எறங்க சொல்றான் க்ரீன் ஹில்ஸ்காரன். லேசா மழை வேற. ஒரு ஆட்டோகாரன்ட்ட. சொல்லி அரை கிமீ ல எறங்கறோம். வாசல்ல *OYO னு போட்டிருக்கு.
இப்ப இது ஒரு கம்பெனி எல்லா ஊர் ஓட்டல்லயும் கான்ட்ராக்ட் போட்டு புக் பண்ணித்தராங்க.
ப்ரஸ்டிஜ் காரன் ஓயோ காரனோட டீல். எப்படியோ ஒரு ரூம் ஒதுக்கி தராங்க. அவன் சொன்ன ஃபைவ் ஸ்டார் இல்லாட்டியும் ஓரளவு சுத்தமா டீசன்டா இருக்கு. கௌன்டர்ல நேரடியா வந்தா எவ்ளவ்னு கேக்கறார் /- ரூ1500 /-ன உடனே (நாங்க கட்டினது 800/-)வெற்றிகரமா 40000/-கொடுத்ததுக்கு இரண்டு வருஷம் கழிச்சு ரூம் புக் பண்ணிட்டோம்னு சந்தோஷப்படறார்கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டு மெயின் அருவிக்கு போறோம்.
இனி இவர் பேசுவார்.
பச்சை பசேலென சுற்றிலும் மரங்களும், கொடிகளும், குளு குளு வென மலையிலிருந்து வீசும் காற்று, சங்கீதம் பாடும் மலை அருவிகள், சிலிர்க்க வைக்கும் நீர் வீழ்ச்சியின் சாரல் ...குறு ஆல் என்னும் பெயரிலான ஒருவகை ஆலமரங்கள் மிக அதிகமாகக் காணப்படும் செழித்த வனப்பகுதி என்பதனால், இந்த ஊருக்கு குற்றாலம் எனும் பெயர் வந்ததாக நம்பப்படுகிறது.
கடலின் ஆர்ப்பரித்துப் பொங்கி வழியும் ஓசைகளின் வழியாகத்தான் குற்றாலத்தின் முகம் பெரும்பாலான குழந்தைகளுக்கும் ஞாபகத்தில் இருக்கக்கூடும். பிரவாகம் எடுத்து வரும் பேரருவியின் உள்ளும் புறமும் கூட்டம் முட்டிமோதி அலைபாய, அருவியின் ஓரங்களில் வழிந்துவரும் சிமிண்ட் கால்வாய்கள் குழந்தைகளின் குற்றாலங்களாக உருவெடுத்து நிற்கிறது வெறித்துப் பார்க்கும் குரங்குகளும் வேடிக்கைக் காட்டும் குரங்குகளும் வீட்டின் திண்ணைகளின் வழியாக நுழைந்து பிஸ்கட்டைத் தூக்கிச் சென்ற குரங்குகளாகத்தான் காலடியில் சுற்றிக் கொண்டிருக்கும்.
குற்றாலத்தின் மாம்பழங்களும், நாவல் பழங்களும், ஊறவைத்த நெல்லிக்காய்களும் தேன் ஒழுகும் பாலாப் பழங்களும் அந்த நினைவுகளின் நீட்சிகளே. நாவலின் துவர்ப்பும் நெல்லியின் புளிப்பும் பலாவின் இனிப்பும் குற்றாலத்தின் சுவைகளாகவே நினைவுகளில் தங்கி இருக்கின்றன.
மூலிகை மட்டுமே மணத்துக் கிடப்பதில்லை. குற்றாலத்தின் அருவிகளில் தலை நனைக்கும் அத்தனைத் தலைகளும் மணத்துக் கிடக்கும் ஊர் இது. சீயக்காய் மணமும், ஒரு ரூபாய் ஷாம்பும் கொடுத்த மணம் சன்னதி வீதியைக் கடந்து இறங்கும் போது, வயிற்றுப் பசிக்கு ஒரு வாய் டீயும், அலறி அழும் பிள்ளைக்கு பாதாம் பாலும், முன்பசிக்கு ஒரு கடி மிளாகாய் பஜ்ஜியுமாக அந்த வீதியை நிறைத்து நிற்கும். பால் அல்வாவும் நேந்திரங்க்காய் சிப்ஸும் மலை வாழைப்பழமும், அதிசியச் சித்தர் தயாரித்துக் கொடுத்த களிம்புகளும் ஊருக்குப் புதியவர்களின் பைகளில் நிறைந்து கொண்டிருக்கிறது...
படம் 1)அருவியின் அருகில் குரங்குகள்
2)அருவியின் அழகு வீடியோ
தொடரும்....


No comments:
Post a Comment