Thursday, September 17, 2020

நெல்லை சுற்றுலா 8

நெல்லை சுற்றுலா 8
Prestige Vacation ...
No 1 Fraud company னு
(நெல்லை சுற்றுலா)

அந்த கமண்ட் பாத்தவுடன் இவர் ஷாக் ஆகி அதில் போட்டிருந்த  நம்பர்ல ஒரு லாயர் நம்பர போன் பண்றார்..அவர் எடுத்து ஆமாம் நான் அவங்க லாயர்தான் கட்டாயம் ரூம் பார்த்து புக் பண்ணுவாங்கன்றார்.கம்பெனி சீஃப்னு இருக்கற மானேஜரும் அதான் சொல்றார்..

இவர் ராத்திரி பூரா கூகுள  தேடி அத்தனை கமண்டையும் படிச்சதுல கம்பெனி இருக்கறது உண்மைதான்..ஆனா அவங்க சொன்ன மாதிரி இவங்களுக்குன்னு எங்கேயும் ஓட்டல் கிடையாது. அங்கங்க ஓட்டலோட லிங்க் வச்சுண்டு அவங்க ஒரிஜனல் வாடகைய மெயின்டன்ன்ஸ் சார்ஜுன்னு வசூல் பண்றாங்கன்னு தெரிஞ்சிக்கறார்...அதுக்கு இவனுக்கு எதுக்கு 40,000 தெண்டம் அழணும்..நேரடியா OYO லயே வேண்டிய ஊர்ல புக் பண்ணலாமேன்னு புத்தி வரது....

அவன் சொன்ன 2 கிராம் தங்க காசாவது கிடைக்குமான்னு நாலு நாள் மண்டை குடைஞ்சு கடைசில அவங்க வேளச்சேரி வரசொல்லி 2 கிராம் சரவணா செல்வரத்தினம் னு போட்ட காசை (40000)கொடுத்து😝
வாங்கிண்டு வரார்...

இது நடந்த 2018 க்கு அப்பறம் பஞ்ச த்வாரகா போகும்போது ரூம் புக் பண்ண பார்த்தார். ஆனா 15 நாள் முன்னாடி  ஃபுல் பணத்தை முன்னாடியே கட்டி புக் பண்ணிக்கனும்னு சொன்னதால நேரம் ஒத்து வராது அது வேற தெண்டமாயிடும் நாம தமிழ்நாட்ல ஊட்டி கொடைக்கானல்னு காஸட்லியான  ஊர் போகறச்சே புக் பண்ணிக்கலாம்னுட்டார்...இப்ப ரொம்ப யோசிச்சு 2019 குற்றாலத்துல ரெண்டு நாள்( ஒரு நாளைக்கு 900 மெயிண்டன்ஸ்)புக் பண்ணி இருக்கார்...
அந்த தேதி மாட்ச் ஆறாப்பல நாங்க நெல்லை வந்து நவ திருப்பதி தரிசனம் முடிஞ்சு குற்றாலம் மத்யானம் ஒருமணிக்கு மேல  போய் ரூம் செக் இன் பண்ணனும்..

வழியில் இருக்கற கோயில் சேவிக்கலாம்னு முதல்ல அம்பாசமுத்திரத்தில் எறங்கறோம்...

ஒரு ஐயர் ஓட்டல்ல இட்லி சாப்பிடறோம்..அங்க விசாரிச்சு லஷ்மி நாராயண பெருமாள் கோயில் ஷேர் ஆட்டோல போய் தரிசனம் பண்றோம்..பக்கத்துலேயே புருஷோத்தம பெருமாள் கோயில் இருக்குன்னு நடந்து போய் தரிசனம் பண்றோம். 

முற்காலத்தில் இக்கோயிலில் சிவன், இலிங்கரூபமாக எழுந்தருளியிருந்தார். ஒரு சமயம் பொதிகை மலைக்கு அகத்தியரை சந்திக்கச் சென்ற சனகாதி முனிவர்கள், இங்கு வந்தனர்.அப்போது அவர்களுக்குள் சிவன்,திருமால் இருவரும் ஒன்றா? என்ற சந்தேகம் வந்தது. தங்கள் குழப்பத்தை தீர்க்கும்படி சிவனிடம் முறையிட்டனர். உடன் இங்கிருந்த இலிங்கத்தில் பெருமாள்,மகாலட்சுமியுடன் காட்சி கொடுத்தார்.இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு, இலட்சுமி நாராயணர் சிலை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பப்பட்டது.

மூலஸ்தானத்தில் பெருமாள், மடியில் மகாலட்சுமியை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.பெருமாள், புதன் கிரகத்திற்கும்,தாயார் சுக்ரனுக்கும் அதிபதி ஆவர்.எனவே இத்தலம், “புதசுக்ர பரிகார க்ஷேத்ரம்” என்றும் அழைக்கப்படுகிறது. புதன் கிரக தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும்,சுக்ரதோஷம் உள்ளவர்கள் மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு புதன்கிழமைகளில்,பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள பெண்கள் சுவாமி முன்பு பச்சரியின் மீது தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.

பெருமாள்கிட்ட ப்ரகுற்றாலத்துலயாவது ஏமாத்தாம நல்ல ரூம் கிடைக்கணும்னு பெருமாள வேண்டிக்கறோம். 

அங்க இருந்த பட்டரிடம் வேறு பெருமாள் கோயில் பற்றி கேட்டவுடன் மன்னார்கோயில் ரொம்ப விசேஷம்..குலசேகர ஆழ்வார் பரம்பதித்த தலம்..

10 கிமீன உடனே ஆட்டோல ஏறரோம்...
அங்க இருந்த பட்டரிடம் வேறு பெருமாள் கோயில் பற்றி கேட்டவுடன் மன்னார்கோயில் ரொம்ப விசேஷம்..குலசேகர ஆழ்வார் பரம்பதித்த தலம்..ங்கறார். 

10 கிமீன உடனே ஆட்டோல ஏறரோம்...


No comments:

Post a Comment