திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்
புனித தீர்த்தங்கள்
காயத்ரி மத்திரத்தின் 24 எழுத்துகளுமே இங்கு புனித தீர்த்தங்களாய் அமைந்துள்ளன
நாழிகிணறு முருகப்பெருமான் சூரசம்காரம் முடித்த பின் வேலாயுத்த்தில் உருவாக்கிய நாழிகிணற்றில் கங்கைநீர் போல் பெருகியது இதில் நீராடினால் தீவினைகள்தீரும் வறுமை வியாதி பாவங்கள் நீங்கி ஞானம் ஏற்ப்படும்
கீழ்கண்ட புனித தீர்த்தங்கள் வள்ளிகுகை முதல் மூவர்சமாதி வரை வங்க கடலில் உள் அமைந்துள்ளது.
இதில் 21 தீர்த்தங்கள் கடலின் உள்ளேயே அமைந்துள்ளது கடலில் நீராடும்போது 21 தீர்த்தங்களில் நீராடிய பலனையடைகின்றோம்
1. வதனாரம்பதீர்த்தம்:- கலிங்கராஜன் மகள் கனகசுந்தரி சாபத்தின் பயனாக உக்கிரமபாண்டியன் மகளாக குதிரை முகத்துடன் பிறந்து வதனாரம்பதீர்த்தில் நீராடி குதிரைமுகம் நீங்கப்பெற்றாள்.
2. தெய்வானைதீர்த்தம்:- இதில் நீராடினால் கங்கை, யமுனை, கைளரி முதலிய நதிகளில் நீராடியபயன் கிட்டும் பரஞானம் பெறுவர்.
3. சித்தர்தீர்த்தம்:- இதில் நீராடினால் வைகை, தேவகி, கண்ணவேணி முதலிய நதிகளில் நீராடியபயன்கிட்டும் அட்டமாசித்திகள் கிட்டும்,
4. அட்டதிக்குபாலகர்தீர்த்தம்:- இதில் நீராடினால் பம்பை, சரயு, கம்பை முதலிய நதிகளில் நீராடியபயன்கிட்டும்.
5. காயத்திரிதீர்த்தம்:- இதில் நீராடினால் நர்மதை நதியில் நீராடியபயன்கிட்டும், 21600 காயத்திரி மந்திரம் செய்தபலன்கிட்டும்
6. சாவித்திரிதீர்த்த்தம்:- இதில் நீராடினால் கோதாவரி, பெண்ணை முதலிய நதிகளில் நீராடியபயன்கிட்டும், எமனை வெல்லும் சக்தி கிட்டும்.
7. சரசுவதிதீர்த்தம்:- இதில் நீராடினால் மந்தாகினி, வேதவதி ஆகிய நதிகளில் நீராடியபயன்கிட்டும், சகலகலைகலையும் தரும்தன்மையுள்ளது.
8. ஐராவததீர்த்தம்:- இதில் சந்திரபாகை, சிந்து, வாகுகை இவைகளில் நீராடினால் இந்திரலோக பதவி தரும் தன்மையுள்ளது.
9. பைரவதீர்த்தம்:- சரபோஜீ, சோனை, தாமிரபரணி, கம்பை நதிகளில் நீராடியபயன் கிட்டும், பூத பிசாசு, தூர்தேவதைகள் துன்பம் நீக்கும்.
10. வள்ளிநாயகிதீர்த்தம்:- உமாதேவியின் கண்களின் பெயரமைந்த விசாலாட்சி, காமாட்சி, மீனாட்சி, காசி, காஞ்சி மதுரை போன்ற தலங்களில் நீராடிய பலனாகிய புண்ணியமும், ஞானமும் கிட்டும்.
11. துர்க்காதேவிதீர்த்தம்:- முன்ஜென்ம பாபங்கள் நீங்கும்,
இம்மையில் தூன்பம் நீங்கும், பேரின்பவீடும் ஆனந்த வாழ்வும் கிடைக்கும்.
12. ஞானதீர்த்தம்:- முருகபெருமானின் தோத்திரபயனும், நினைத்தகாரியங்கள் நிறைவேருவதுடன் சகல ஞானபேறும் உண்டாகும்.
13. சத்தியதீர்த்தம்:- துன்பங்கள் நீங்கும் வேத சாஸ்திர ஞானம் கிட்டும், முருகபெருமானின் திருவடிதாமரை பேரின்பவீடு கிடைக்கும்.
14. தர்மதீர்த்தம்:- இதில் நீராடினால் ஆணவம், கன்மம், மாயை நீங்கி தர்மசிந்தனை ஏற்படும்.
15. முனிதீர்த்தம்:- இருவினை தொடர் நீங்கும் முனிவர்கள் ஆசியினால் சாபங்கள்தீரும், முருகனின் திருவருள் ஞானபேறு கிட்டும்.
16. தேவர்தீர்த்தம்:- காம, குரோத, பகைகள்ஆறும் நீங்கும் தேவர்கள் வந்து வணங்கும் பேறு பெறுவர்.
17. பாவநாசதீர்த்தம்:- முனிவர்களால் ஏற்பட்ட சாபம் தீரும், புனிதப்பிறவி கிடைக்கும்.
18. சேதுதீர்த்தம்:- ராமேஸ்வரம் சேதுவில் நீராடியபயன் கிடைக்கும், முருகனின் திருவருள் கிடைக்கும்.
19. தசகங்கைதீர்த்தம்:- புனிதமான பத்து தீர்த்தங்களில் நீராடியபயன் கிடைக்கும், பிறவி பிணி தீரும், முக்திபேறுகிட்டும்.
20. லட்சுமிதீர்த்தம்:- குமரி, வேதநதி, துஙகபத்ரா ஆகிய நதிகளில் நீராடிய பயன் நன்மைகளை தரும்.
21. கந்தமாதன தீர்த்தம்:- முருகபெருமானின் திருவடி தாமரை இந்திரஞால வித்தை போன்றவை கிட்டும்.
22. மாதுருதீர்த்தம்:- தன் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் தானம் செய்த எல்லா நன்மையும் கிட்டும்.
23. தென்புலத்தார் தீர்த்தம்:- இம்மை மறுமை பேற்றுடன் முன்னோர்கள் ஆசி கிட்டும்.
24.வேல் தீர்த்தமாகிய நாழிகிணற்றில்
(கந்தபுஷ்கரனி) நீராடிய பிறகே மகாதீர்தமாகிய கடல் நீராடுதல் வேண்டும் என்று தல புராணம் கூறுகிறது – காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள புனித தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும், இதனால் அனைத்து பாவங்களும் நீங்கும், நன்மை பெருகி சகல யோகமிக்க பெருவாழ்வு வீடுபேறு கிட்டும் என்று தலபுராணம் கூறுகிறது.
2முதல் 24வரையிலான தீர்த்தங்கள் வள்ளி குகைமுதல் சூரசம்ஹார மேடைவரை அமைந்துள்ளது
சரவணப்பொய்கை:- இது கோவில் தெருவில் அமைந்துள்ளது இதில் ஆறுதாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக முருகன் அவதாரகாட்சி காண்பதற்குர்யது இதில் நீராடினால் ஏழு பிறவிகளில் செய்தபாவங்கள் நீங்கி புண்ணியப்பேறு அடைவீர்.
திருசெந்தில் ஆண்டவா போற்றி
No comments:
Post a Comment