முக்திநாத்....ஒரு முரட்டுப்பயணம் பகுதி 4
நவம்பர் 5 2017
தமிழ்நாட்டில் மழை. ஊரில் வெள்ளம். இதில் யாத்திரை உண்டா இல்லையா என்ற கவலை.
போனில் சிக்குகிறார். நவம்பர் 8 கட்டாயம் உண்டு என்கிறார். இது ஐந்தாவது முறை மாற்றி மாற்றி பேசுகிறீர்கள். இனியும் இல்லை என்றால் பணத்தை தரவேண்டும் என்கிறேன். அக்கா மற்றும் மைத்துனியை விட்டு அவருக்கு அழுத்தம் தர சொல்கிறேன். அவர்களிடமும் கட்டாயம் நவம்பர் 8 என்கிறார்.
நவம்பர் 6
டூர் நாள் நெருங்குவதால் டூருக்கு தேவையான பொருள்களை சேகரிக்க தொடங்குகிறோம்.
நவம்பர் 7
ஷட்டகர்,மைத்துனி சென்னையில் ஒரு சீமந்தம் இருப்பதால் டூருக்கு தேவையான லக்கஜ்களுடன் கிளம்பி மாலை வருவதாக போன்.
கேசவனிடமிருந்து போன். தான் வேறு வேலையாக கிருஷ்ணகிரியில் இருப்பதாகவும் ஒரு சிக்கல் எனவும் உடனடியாக 10,000/- வங்கியில் கட்டினால்தான் தட்கல் டிக்கட் எடுக்க முடியும் என்று.எனக்கு பயங்கர கோபம் வந்து ஏற்கனவே தந்த 85000 என்ன ஆயிற்று என சத்தம் போடுகிறேன். அவர் தன்னால் டிக்கட் எடுக்க முடியாது என சொல்லி போனை வைக்கிறார்..இதென்ன சோதனை என மாலையில் ஷட்டகரிடம் தெரிவிக்கிறேன். அவர்கள் பெரும்பாலான டூர் ஆபரேட்டர்கள் முழு பணம் இல்லாமல் அழைத்து செல்ல மாட்டார்கள் இதோ எங்கள் ஷேர் 40,000/- இதிலிருந்து பணம் கட்டுங்கள் என தருகிறார்கள். அவர்களை விட்டே பேச சொன்னதில் மைத்துனி பெருமாள் சேவிக்கும் ஆசையில் கஷ்டங்களுக்கிடையில் வருகிறோம். ஏமாற்றி விட வேண்டாம் என உருக்கமாக பேச கட்டாயம் இதோ டிக்கட் உறுதி என்கிறார்.மணி நாலாகப்போகிறது பாங்க் மூடி விடுவார்கள் சீக்கிரம் போங்க என்கிறார். நான் தலைவிதியே என பாங்க், ஏடிஎம் என அலைந்து பணத்தை கட்டுகிறேன். (85000+10,000)
கட்டியவுடன் போன் செய்ததில் நவம்பர் 8 க்கு பதில் நவம்பர் 9 என்கிறார். எதோ ஒரு ட்ரெய்ன் பேர் சொல்கிறார். என் அத்திம்பேர் அந்த ட்ரெய்ன் வாரத்தில் மூணு நாள்தானே 9ந்தேதி சனிக்கிழமை கிடையாதே என்கிறார். மீண்டும் தலை சுற்றி அவரிடம் கேட்டதில் 9 இரவு கிளம்பும் ட்ரெய்ன் என எதோ சொல்கிறார். தலை சுற்றி
கீழ்க்கண்ட மெசேஜ் அனுப்புகிறேன்..
அக்காவிடம் தரவேண்டிய பணத்திற்காக உங்களிடம் வர ஒப்புக்கொண்டேன் ..ஆனால் அதைவிட 3 மடங்கு தொகை பெற்று ஏற்பாடு செய்யாவிடில் பணத்தை திருப்பித்தந்து இருக்க வேண்டும்...நேற்று கூட 10000/ கட்ட சொல்லி என்னை வயிறெரிய வைத்தீர்கள்....பிராமணன் இவ்வளவு பொய்சொல்லலாமா..அதை நம்பிய என்னை உறவினரும் காரித்துப்புகின்றனர்
வழக்கப்படி பதில் இல்லை...
நவம்பர் 8
திடீரென போன் செய்து 10 ந்தேதி காலை 6.45 க்கு ட்ரெய்னில் எங்கள் 4 பேருக்கு இடம் கிடைத்ததாகவும் மற்றொரு பெங்களூர் பார்ட்டிக்கு கிடைக்கவில்லை எனபதால் மொத்தமாக கிடைக்க வெய்ட் பண்ணுவதாகவும் கூறுகிறார். எனக்கு புது கவலை. விடிகாலை ட்ரெய்ன் பிடிக்க கூடுவாஞ்சேரியிலிருந்து கிளம்ப முடியாதே என கேட்டதற்கு முதல் நாளே சென்ட்ரல் பக்கத்தில் தான் தங்குவதற்கு ஏற்பாடு செய்வாக சொல்கிறார் நல்ல மனசு கவலை நீங்குகிறது. இவ்வளவு நல்லவரை சந்தேகப்பட்டுவிட்டேனோ?முகம் தெரியாத பெங்களூர் பார்ட்டிக்கு டிக்கட் கிடைக்க பெருமாளை வேண்டுகிறோம்.
நவம்பர் 9. பெங்களூர் பார்ட்டிக்கு டிக்கட் கிடைக்கவில்லை. ஆனாலும் கவலைப்பட வேண்டாம். 10 ந்தேதி இரவு உங்கள் நாலுபேரை அழைத்து செல்கிறேன் என்கிறார். நாலுபேருக்கு பரிசாரகன் எடுபிடி எப்படி கட்டுபிடியாகும் என கேட்க அவர்கள் வரமாட்டார்கள் தான் தனியே ஓட்டலில் வாங்கித்தருவதாக சொல்கிறார். (அடப்பாவமே தேமேனென்று இது போல நாங்க தனியா ஓட்டல்ல சாப்பிட்டு சுதந்தரமாய் எத்தனை டூர் போனோம். அக்கா பேச்சைக்கேட்டு விதவிதமாய் சாப்பாடு சூடாக போடுவார். ரூம் கவலை ,மொழிப்ரச்னை இல்லை என மாட்டிக்கொண்டோமே என வருந்துகிறேன்)எனினும் கொடுத்த பணத்திற்கும் ஏன் அக்காவை ஏமாற்றிய பழைய பணம்கூட கழிக்காமல் 12 நாட்கள் எங்கேயாவது அழைத்து சென்றால் போதும். என் கவலை தீரும் மைத்துனி ஷட்டகர்க்கு என்ன பதில் சொல்வது என கவலையில் ஆழ்கிறேன். இரவு முழுதும் தூக்கமில்லை.
நவம்பர் 10 காலை விடிகிறது
திகில் தொடரும்.
No comments:
Post a Comment