முக்திநாத்....ஒரு முரட்டுப்பயணம் பகுதி 1
வெங்கடேசன்.வ..
இந்தத்தொடர் 100% எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மட்டுமே. டூர் ஆபரேட்டர் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு எச்சரிக்கைக்காக மட்டுமே. இந்த அனுபவத்தைக கொண்டு அனைத்து டூர் ஆபரேட்டர்களையும் பற்றி முடிவு செய்ய வேண்டாம்.
2017 ....நாங்கள் பத்ரி நாத் கேதார்நாத் தனியாக சென்று இமயத்தின் நடுவில் பெற்ற திகில்😱 அனுபவங்கள் பற்றி இமயத்தின் மடியில் கட்டுரைத்தொடரில் பலர் படித்து இருக்க கூடும்..அதே ஆண்டு என் அக்கா கேசவன் என்ற(காரணமாய் பெயர் மாற்றப்பட்டுள்ளது)டூர் மாமாமூலம் பத்ரி நாத் குடும்பத்துடன் சென்று வந்தாள்..
குழந்தைகள் உட்பட பதினோரு பேர் கொண்ட குழுவிற்கு 3லட்சம் பெற்றுக்கொண்டு திரும்ப விமானத்தில் டில்லி -சென்னை ஏற்பாடு செய்வதாக சொல்லி கடைசி நிமிடத்தில் அவர் வராமல் அவர் அனுப்பிய ஏஜண்ட் பத்ரிநாத் சுற்றிக்காண்பித்து விட்டு கடைசி வரை ஃப்ளைட் டிக்கட் 😇தராமல் டில்லியில் இறக்கி விட்டு போய் விட்டார்கள். எப்படியோ பணம் ஏற்பாடு செய்து இரண்டு மடங்கு கட்டணத்தில் ஊர் வந்து சேர்ந்தாள்..
.எனினும் அவரிடம் ஃப்ளைட் டிக்கட் தனக்கு சேர வேண்டிய 44,000/ஐ கேட்டதற்கு வேறு டூர் வந்தால் அந்தப்பணத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்வதாக சொல்லியுள்ளார்..நாங்கள் முக்திநாத் தனியாக செல்ல தயங்கி சரியான டூர் ஆபரேட்டரை தேடிய நேரம் அது. அக்காவிஷயம் கேள்விப்பட்டு அந்த 44,000 போக மீதித்தொகைக்கு நாங்கள் போக சம்மதம் தெரிவிக்கிறோம்😄..உடன் அக்கா இந்த டீலுக்கு அவரை சம்மதமா என கேட்க அவர் அக்டோபர் 29 முக்திநாத் டூர் கிளம்புவதாகவும் (அக்டோபர் 22 ல்) இன்றே பணம் கட்டி டிக்கட் புக் பண்ணி விடலாம் என்று அட்ரஸ் வாங்கி வீட்டுக்கு வந்து விடுகிறார்.😋.
ஆளுக்கு 36,500 இருவருக்கு 73,000 அதில் 44000/- போக 29000/- கொடுத்தால் போதும் என்கிறார்.சூழ்நிலை காரணமாக ஃப்ளைட் டிக்கட் ஏற்பாடு செய்யவில்லை எனவும்,தாம் 30 வருடமாக தொழில் செய்வதாகவும் பல்லாயிரக்கணக்கானவர்களை பத்ரி,கேதார்,முக்திநாத் அழைத்து செல்வதாகவும்,பத்து பேர் கொண்ட குழு போக ரெடி எனவும் இன்றே பணம் தந்தால் டிக்கட் ரிசர்வ் செய்துவிடலாம் எனவும் கூறுகிறார். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி...அக்கா பணத்தை வசூல் செய்து தரப்போகிறோம் என்பதிலும்,ஒரு வாரத்தில் கிளம்பி முதல் முறை முக்திநாத் பயணம்….
தங்குமிடம்சூடானசாப்பாடு
,பாஸ்போர்ட், ஹெலிகாப்டர் என எந்த கவலையுமின்றி முக்தி நாத் செல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் 17,000/- தருகிறோம்..
பட்டையான திருமண்தரித்து வந்த அவரை முக்திநாதனே அனுப்பியதாக எண்ணி.... அடுத்த இரண்டு மாதங்கள் நான் படப்போகும் பாட்டை அறியாதவனாக🤥....
தொடரும்…
No comments:
Post a Comment